For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செம்பருத்திப்பூவினால் செழிக்கும் அழகு

By Sutha
|

வீட்டுத்தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படும் பூக்களில் செம்பருத்திக்கு முக்கிய இடம் உண்டு. தனியாகவும், அடுக்கடுக்காகவும் செந்நிறத்தில் காணப்படும் இந்த பூக்கள் அழகு தருபவை மட்டுமல்ல மருத்துவகுணமும் கொண்டது. இந்த செடியின் நுனி முதல் வேர் வரை எல்லாமே பயன்தரக்கூடியது. செம்பருத்தியை பற்றிய சில முக்கிய தகவல்கள் உங்களுக்காக

வேதிப்பொருட்கள்

செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், சயனின், சயனிடின், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், நியசின் கரோட்டின், அஸ்கோர்பிக் அமிலம், தயமின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

தங்கச்சத்து நிறைந்தது

இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது.

இருதய பலம்

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும்.

உடல் உஷ்ணம் குறைய

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.

இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.

பேன், பொடுகு தொல்லை நீக்கும்

இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

பலகீனமான குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

English summary

Meditional uses of hibiscus flower | செம்பருத்திப்பூவினால் செழிக்கும் அழகு

Hibiscus flower preparations are used for hair care. The flowers themselves are edible and are used in salads in the Pacific Islands. The flowers are used to shine shoes in parts of India.It is also a pH indicator.China rose indicator turns acidic solutions to magenta/dark pink and basic solutions to green. It is also used for the worship of Devi and especially the red variety takes an important part in tantra.
Story first published: Friday, April 15, 2011, 9:52 [IST]
Desktop Bottom Promotion