Latest Updates
-
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன?
கண்ணுக்கு ஒளிதரும் பிரம்ம தண்டுப் பூக்கள்
இயற்கையின் படைப்பில் எண்ணற்ற அதிசயங்கள் ஒளிந்துள்ளன. நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம், என பஞ்ச பூதங்களும் மனிதர்களுக்கு தேவையான மகத்தான சக்தியை அளிக்கின்றன. அதுபோல தாவரங்களும் இலைமுதல் வேர் வரை மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை போக்கும் மகத்தான மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தாவரங்களில் பூக்கும் பூக்கள் காய்த்து, கனிந்து, விதைகளை பரப்பி மீண்டும் தாவரங்களின் குடும்பத்தை பரப்பும் மகத்தான செயல்களை செய்பவையாகும்.அந்த பூக்களும் அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. பூக்களின் அரியவகை மருத்துவக் குணங்களை காணலாம்
பிரம்மதண்டுப் பூக்கள்
பிரம்ம தண்டு என்று என்பது முள்ளங்கி போன்ற இலைகளும், இலைகளில் ஏராளமான முட்களும் காணப்படும். இது சிறு செடியாகும். மஞ்சள் நிறப்பூக்கள் காணப்படும் இந்த செடியை உடைத்தால் மஞ்சள் நிற பால் வெளி வரும். இச்செடியின் பூக்களில் 10 எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் இரவு நேரத்தில் ஊற வைக்கவும். காலை நேரத்தில் அந்தப் பூக்களை நீக்கிவிட்டு அந்த நீரில் கண்களை கழுவி வர பார்வை தெளிவு கிடைக்கும்.
பருத்திப்பூக்கள்
பருத்திச் செடிகள் உடைகளுக்கு தேவையான பஞ்சினை உற்பத்தி செய்கின்றன. இந்த செடியில் பூக்கும் பூக்கள் தோல் நோய்களை குணமாக்கும் மருந்தாக பயன்படுகின்றன. நான்கு பருத்திப்பூக்களை பறித்து அவற்றுடன் பருத்திச் செடியின் பட்டையை வைத்து அரைத்து பாதிக்கப்பட்ட தோல்மீது தடவி வர தோல் நோய் குணமடையும்.
சப்பாத்திப்பூக்கள்
நீரின்றி வளரும் தாவரமான சப்பாத்திக்கள்ளி செடியில் பூக்கும் பூக்கள் சூடு கட்டிகளை குணப்படுத்த ஏற்றது. உடலில் கட்டி அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் சப்பாத்திக் கள்ளிப்பூக்களை பறித்து அம்மியில் அரைத்து கட்டிகள் மீது பூசி வர கட்டிகள் உடைந்து விடும் கரைந்துவிடும்.
சிறுநாகப்பூ
நீரிழிவு நோயாளிகள் கால் எரிச்சலால் அவதிப்படுவர். இந்த எரிச்சலை போக்குவதில் சிறுநாகப்பூ முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்ந்த சிறுநாகப்பூக்களை நெய்விட்டு அரைத்து கால் எரிச்சல் உள்ள இடங்களில் பூசினால் குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications