Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
பானை போன்று இருக்கும் தொப்பை வயிற்றை டக்குனு குறைக்கணுமா? அப்ப இத தினமும் 2 வேளை குடிங்க!
உலகில் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வரும் ஓர் பிரச்சனையாக உடல் பருமன் அல்லது தொப்பை உள்ளது. இப்பிரச்சனையை சரிசெய்வதற்காக பலரும் பலவிதமான டயட்டுகள் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அனைவராலுமே டயட்டை பின்பற்றுவது என்பது இயலாது. ஆனால் உடற்பயிற்சியுடன், சரியான உணவுமுறையை மேற்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
இது தவிர, ஒருசில பானங்களும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். குறிப்பாக டீ ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதற்கு சரியான டீயைத் தேர்ந்தெடுத்து, சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைக்க மசாலா பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீ பெரிதும் உதவி புரியும்.

அதோடு இந்த வகையான டீ உடல் எடையை விரைவாக குறைக்க உதவி புரிவதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இப்போது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில டீ வகைகள் குறித்து காண்போம். இவற்றில் ஒரு டீயை தினமும் 2 வேளை குடித்து வந்தால் விரைவில் நற்பலன்களை பெறலாம்.

மஞ்சள் டீ
மஞ்சளில் பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. அதோடு மஞ்சளில் குர்குமின் என்னும் முக்கியமான பொருள் உள்ளது. இது கொழுப்புக்களை எரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட மஞ்சளைக் கொண்டு டீ தயாரித்து தினமும் குடித்து வந்தால், எடை வேகமாக குறையும்.
இந்த டீ தயாரிப்பதற்கு 2 கப் நீரை கொதிக்க வைத்து இறக்கவும். பின் அந்த நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பின் அதை குடிக்க வேண்டும்.

இஞ்சி டீ
இஞ்சியை எந்த வடிவில் உட்கொண்டால், அது நேரடியாக உடலின் மெட்டபாலிசத்தை பாதித்து, எடை இழப்பிற்கு உதவும். அதுவும் இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து, ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த இஞ்சி டீயை தயாரிப்பதற்கு 2 கப் நீரை ஒரு பாத்திரததில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் தேன் மற்றும் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும்.

லெமன் டீ
எலுமிச்சை சாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சையைக் கொண்டு டீ தயாரித்த குடித்து வந்தால், அது உடலில் மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, உடல் கொழுப்பை எரிக்கும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

பட்டை டீ
பட்டை டீ உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பட்டை டீ மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், இது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக குறைக்க உதவி புரிந்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் சிறிது பட்டைத் தூளை சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து, பின் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

ப்ளாக் டீ
ப்ளாக் டி குடித்து வந்தால், இதய பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும். இந்த டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை நீக்கும். இந்த டீ தயாரிப்பதற்கு ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சிறிது டீ தூளை சிறிது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 2-3 முறை க்ரீன் டீயைக் குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறைவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
