Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
Robo Shankar Death: 46 வயதில் காலமான ரோபோ சங்கர்.. இவரது இறப்புக்கு உண்மை காரணம் இது தானோ?
Robo Shankar Death: தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான ரோபோ சங்கர் படப்பிடிப்பின் போது உடல்நலக் குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 46.
காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ரோபோ சங்கர், ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் தனது சிறப்பான நடிப்பு திறமையால் மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகில் முன்னேறி வந்தவர். பல்வேறு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது காமெடிக்கும், மிமிக்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

அப்படிப்பட்ட ரோபோ சங்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதீத குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தால், பின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வெளிவந்துள்ளார்.
கடுமையான மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதாலோ என்னவோ, அதன் பின் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவில் மிகவும் மெலிந்து காணப்பட்டார். இவரது இந்த மெலிந்த தோற்றத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அவர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் சற்று உடல் தேறி பழைய படி காணப்பட்டார்.
இந்நிலையில் ரோபோ சங்கருக்கு இந்த வார தொடக்கத்தில் தான் மீண்டும் மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவர் திடீரென்று மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, அவருக்கு தீவிரமான கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் இருப்பது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிகிச்சை பலனின்றி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளார். இதைப் பார்க்கும் போது, மஞ்சள் காமாலை வந்தால் மரணம் ஏற்படுமா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழலாம்.
ரோபோ சங்கரை பாதித்த மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை ஒரு நோய் கிடையாது. அது கல்லீரல் நோயின் அறிகுறி. இந்த மஞ்சள் காமாலை ஏற்கனவே ரோபோ சங்கரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை இருந்தால், இரத்தத்தில் பிலிரூபின் என்னும் பொருள் அதிகமாக இருக்கும். பிலிரூபின் என்பது ஒரு கழிவுப் பொருள். இந்த பொருள் சிறுநீரின் வழியே வெளியேற்றப்படும். இதனால் தான் நமது சிறுநீரும், மலமும் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் உள்ளது. இந்த பிலிரூபின் எப்போதும் உடலில் இருந்து முழுமையாக வெளியேற்றப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு எப்போதும் உடலில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் இந்த பிலிரூபின் அளவாக இருந்தால், பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் அதிகமாகும் போது, அது மஞ்சள் காமாலையாக மாறும்.
எந்த காரணங்களால் உடலில் பிலிரூபின் அளவு அதிகரிக்கும்?
ஒருவரது உடலில் பிலிரூபின் 3 காரணங்களால் வெளியேற்றப்படாமல் இருக்கலாம். ஒன்று கல்லீரல் நோய், இரண்டாவது பித்த நீர் அடைப்பு, மூன்றாவது இரத்த சிவப்பணுக்கள் அதிக அளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கருக்கு ஏற்பட்டது கல்லீரல் நோய் தான். அதோடு ரோபோ சங்கருக்கு மது பழக்கமும் இருந்துள்ளது. இப்படி அதிகமாக மது அருந்தியன் காரணமாக, ஆல்கஹால் ஹெபடைடிஸ் என்ற நிலை ஏற்பட்டு, கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக ரோபோ சங்கருக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம்.
கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டால் என்ன வழி?
கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் அதற்கு ஒரே வழி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் கல்லீரலை சொந்த ரத்தத்தின் தான் மாற்ற முடியும். மேலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே ரோபோ சங்கரின் மரணத்திற்கு கல்லீரல் முழுமையாக செயலிழந்தது தான் காரணமாக இருக்கும் என்று கூறுப்படுகிறது. ஏனெனில் கல்லீரல் செயலிழந்துவிட்டால், நோய்த்தொற்றுகள் அதிகமாகும் மற்றும் உடல் உறுப்புக்களில் நீர் அதிகம் சேரத் தொடங்கும். இதன் விளைவாக மரணம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications