Latest Updates
-
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க..
வெயிலால் பைல்ஸ் மீண்டும் தலைதூக்குதா? அப்ப இந்த பழங்களை அதிகமா சாப்பிடுங்க...
Summer Health Tips In Tamil: கோடைக்காலத்தில் வெயில் கடுமையாக இருப்பதால், பைல்ஸ் பிரச்சனையைக் கொண்டவர்கள் அதிகம் அவதிப்படுவார்கள். ஏனெனில் கோடையில் அதிகப்படியான வெயிலால், உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறையும். உடலில் நீர்ச்சத்தைப் பராமரிக்க, வழக்கத்தை விட அதிகமாக நீரை குடிக்க வேண்டும். அப்படி குடிக்காத பட்சத்தில், உடலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இறுக்கமடைந்து வெளியேற்றுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
கோடையில் மலச்சிக்கல் பிரச்சனையை அடிக்கடி சந்தித்தால், அதை உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மலச்சிக்கல் தீவிரமாகி பைல்ஸ் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும். மலச்சிக்கலைத் தடுக்க நிறைய பழங்கள் உதவி புரியும். பெரும்பாலானோர் கோடையில் பழங்களை சாப்பிட விரும்புவார்கள். பைல்ஸை சரிசெய்வதில் பழங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

பழங்களானது சுவையாக இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்களை கொண்டிருக்கும். எனவே ஏற்கனவே பைல்ஸ் பிரச்சனையைக் கொண்டவர்கள் கோடைகாலம் வந்துவிட்டால், ஒருசில பழங்களை அதிகம் தங்களின் உணவில் சேர்க்க வேண்டும். இப்போது கோடையில் சந்திக்கும் பைல்ஸ் பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவும் சில பழங்களைக் காண்போம்.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முக்கியமாக ஆப்பிள் சாப்பிட்டால், பைல்ஸ் பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்பு குறையும். ஏனெனில் ஆப்பிளி நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. ஒரு மீடியம் அளவிலான ஆப்பிளில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுவும் இதில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். எனவே ஆப்பிளை சாப்பிடுங்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு விலைக் குறைவான மற்றும் சுவையான பழம். வாழைப்பழத்தில் பெக்டின் உள்ளது. இந்த பெக்டின் செரிமான பாதையில் ஒரு ஜெல்லை உருவாக்கி, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. ஒரு மீடியம் அளவிலான வாழைப்பழத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுவும் சூடான பாலில் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து குடித்தால், குடலிறக்கம் சீராக நடைபெறுவதோடு, பைல்ஸால் சந்திக்கும் வலியைக் குணப்படுத்தும்.
பேரிக்காய்
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பேரிக்காயை கோடையில் உட்கொண்டு வந்தால், அது மலத்தை எளிதில் வெளியேற்ற உதவி புரியும். முக்கியமாக பேரிக்காயை தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதன் தோலில் தான் நார்ச்சத்து உள்ளது. எனவே பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு பேரிக்காய் ஒரு சிறந்த பழம்.
பப்பாளி
நிறைய பேருக்கு பப்பாளியை பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற ஒரு சந்தேகம் உள்ளது. உண்மையில் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடலாம். ஏனெனில் பப்பாளியில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளன மற்றும் இது மலமிளக்கியாகவும் செயல்படும். எனவே பைல்ஸ் உள்ளவர்கள் பப்பாளியை கோடையில் அவ்வப்போது உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலைத் தடுத்து, பைல்ஸ் தீவிரமாவதைத் தடுக்கலாம்.
மாதுளை
பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதுளையின் விதைகளை விட அதன் தோல் நல்ல பலனைத் தரும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை காலை மற்றும் மாலை என இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
கோடைக்கால பழமான ஸ்ட்ராபெர்ரி பைல்ஸ் பிரச்சனையைப் பராமரிக்க பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஸ்ட்ராபெர்ரியில் நார்ச்சத்து மற்றும் ப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ளன. இவை மலத்தை சிரமமின்றி எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இது ஆசனவாயில் ஏற்படும் வலி மற்றும் இரத்தக்கசிவைக் குறைக்கும்.
மாம்பழம்
கோடைக்கால பழமான மாம்பழம் கூட பைல்ஸ் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் நன்கு கனிந்த மாம்பழத்தில் நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. எனவே மாம்பழத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படாது. எனவே பைல்ஸ் இருந்தால், பயப்படாமல் மாம்பழத்தை சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


















