Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வெயில்காலம் வந்தாலே மாங்காயை தேடி ஓடுபவரா நீங்க? அப்ப இந்த விஷயங்களை முதலில் தெரிஞ்சிக்கோங்க...!
கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பான பழம் என்றால் அது மாம்பழம்தான். சதைப்பற்றுள்ள, சுவை மிகுந்த மாம்பழங்கள் அல்போன்சா, ருமானி, பங்கனளப்பள்ளி என பல வகைகளில் கிடைக்கிறது. இந்த சுவையான மாம்பழங்களுக்காகவே கோடைக்காலத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
மாம்பழம் அனைவருக்கும் பிடித்ததாக இருந்தாலும் மாங்காயை விரும்புபவர்களும் இங்கு பெருமளவில் இருக்கத்தான் செய்கின்றனர். மாங்காயை பல வகைகளில் நாம் ருசிக்கலாம், பச்சையாக சாப்பிடும்போதும் சுவையாக இருக்கும் வெகுசில காய்கறிகளில் மாங்காயும் ஒன்று. சுவை என்பதையும் கடந்து இந்த வெப்ப மண்டல காய்கறியில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மாங்காய் சாப்பிடுவது உங்களுக்கு சில அபரிமிதமான நன்மைகளை அளிக்கும் என்பது பலரும் அறியாத தகவலாகும். இந்த பதிவில் மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சர்க்கரை உள்ளடக்கம் குறைவாக உள்ளது
மற்ற காய்கறிகள் மற்றும் பழங்களுடன் ஒப்பிடும்போது, பச்சை மாங்காயில் இயற்கையான சர்க்கரை அதிகம் இல்லை, மாறாக பரிந்துரைக்கும் அளவை விட குறைவாகவே இருக்கிறது. உண்மையில், சர்க்கரை நோய் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த அல்லது குறைக்க உதவுகிறது.
இதயத்தை பலப்படுத்துகிறது
மாங்காயில் காணப்படும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கூறுகளும் சீரான இரத்த ஓட்டம் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில் உதவியாக இருக்கின்றன. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இரத்த நாளங்களை தளர்வாக வைத்துக்கொள்ள உதவுகின்றன, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான மாங்கிஃபெரின் இதில் ஏராளமாக உள்ளது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
மாங்காயில் அமிலேஸ்கள் எனப்படும் செரிமான நொதிகள் அதிகமாக உள்ளது, அவை பெரிய உணவு மூலக்கூறுகளை உடைக்க உதவுகின்றன, இதனால் அவை எளிதில் உறிஞ்சப்படும். இவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற எளிய சர்க்கரைகளாக மாற்றுகின்றன.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம் உடலிலிருந்து நச்சுக்களை நீக்குவது மிகவும் முக்கியமானது. மாங்காயில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றும் செயல்முறைக்கு உதவுகின்றன. கூடுதலாக, இது உடலில் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.
எடையைக் குறைக்க உதவுகிறது
மாங்காயில் குறைந்த கலோரி உள்ளடக்கம் இருப்பதால், அவை கலோரிகளை சேர்க்காமல் சுவையாக சாப்பிடுவதற்கு சிறந்ததாக இருக்கும். இந்த கோடைகால காய்கறியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருப்பதால் இது ஒரு அருமையான சிற்றுண்டியாக இருக்கிறது.
பிற நன்மைகள்
மாங்காயில் உள்ள வைட்டமின்கள் சி, கே, ஏ, பி6 மற்றும் ஃபோலேட் உள்ளிட்ட பல முக்கிய வைட்டமின்கள் உடலுக்கு அவசியமான பல நன்மைகளை அளிக்கிறது. செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தவும், ஆரோக்கியமான பார்வையை மேம்படுத்தவும், எடையை குறைக்கவும் ஆயுர்வேதத்தில் மாங்காய் பரிந்துரைக்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

