Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
நைட் 10 மணிக்கு மேல இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு ஸ்ட்ரோக் வரப்போகுதுன்னு அர்த்தம்.. உஷார்..
Stroke Symptoms In Tamil: இன்றைய பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.
அதுவும் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன. இதில் ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்றால் எப்படி அதற்கு முன் ஒருசில அறிகுறிகள் தெரியுமோ, அதேப் போல் பக்கவாதம் வருவதற்கு முன்னரும் ஒருசில அறிகுறிகள் தெரியும்.

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது அல்லது மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் போது வரக்கூடியது. பக்கவாதத்தினால் மூளைச் செல்களால் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல், இறுதியில் மூளை செல்கள் இறந்துவிடும்.
இப்படிப்பட்ட கொடிய பக்கவாதம் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஏன் சில சமயங்களில் இரவு தூங்கிக் கொண்டிக்கும் போது கூட வரலாம். அதுவும் சமீப காலமாக இரவு நேரத்தில் பக்கவாதத்தினால் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஒவ்வொருவரும் பக்கவாதத்தின் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் எந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி தெரிந்து வைத்திருப்பதன் மூலம், பக்கவாதத்தினால் மரணம் ஏற்படுவதைத் தடுக்கலாம். இப்போது இரவு நேரத்தில் பக்கவாதம் ஒருவருக்கு வரப்போகிறது என்றால் அது எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிக்காட்டும் என்பதைக் காண்போம்.
1. மரத்து போவது அல்லது பலவீனம்
பக்கவாதம் வரப்போகிறது என்றால் தெரியக்கூடிய முதல் அறிகுறி திடீரென்று உடலின் ஒருபகுதி பலவீனமாகவோ அல்லது மரத்துப் போவது போன்றோ இருக்கும். இப்படி உடலின் ஒருபக்கம் பலவீனமாவதை உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. குழப்பம் அல்லது பேசுவதில் சிரமம்
பக்கவாதத்தின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி திடீரென்று குழப்பமான மனநிலை அல்லது பேசுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுவது ஆகும். அதாவது ஒருவர் பேசும் போது வார்த்தைகளில் தெளிவு இல்லாமல் வாய் குளறினாலோ அல்லது வாக்கியங்களை உருவாக்க போராடினாலோ, அது பக்கவாதத்தின் அபாய அறிகுறியாகும். இப்படியான அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்படியான அறிகுறிகள் உங்களிடமோ அல்லது வேறு யாரிடமோ கவனித்தால், உதவிக்கு உடனே யாரையேனும் அழையுங்கள்.
3. பார்வை பிரச்சனை
திடீரென்று உங்கள் பார்வையில் பிரச்சனைகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதுவும் மங்கலான பார்வை, இரண்டு இரண்டாக தெரிவது போன்ற அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் சீக்கிரம் மருத்துவ உதவியை நாட வேண்டும். அதுவும் இரவு நேரம் இந்த பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும். எனவே பார்வையில் சந்திக்கும் பிரச்சனைகளை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4. கடுமையான தலைவலி
காரணமின்றி திடீரென்று தலைவலி வந்தால், அதுவும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் இந்த அறிகுறியை சந்தித்தால், அசால்ட்டாக இருக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக இந்த வகையாக தலைவலி சாதாரண தலைவலியில் இருந்து வேறுபட்டிருக்கும் மற்றும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும், இந்த தலைவலி ஒருவரை எழுப்பி, அவதிப்பட வைக்கும். எனவே இப்படியான அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
5. தலைச்சுற்றல் அல்லது தடுமாற்றம்
திடீரென்று தலைச்சுற்றலையோ அல்லது தடுமாற்றத்தையோ சந்தித்தால், அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகும். அதுவும் இந்த அறிகுறிகளை இரவு நேரத்தில் நடக்கும் போது அனுபவித்தால், தாமதம் செய்யாமல் மருத்துவ உதவியை நாடி, பரிசோதனை செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications