Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
ஒரு வாரமா இந்த அறிகுறிலாம் தெரியுதா? அப்ப இதயம் செயலிழந்து பக்கவாதம் ஏற்பட போகுது-ன்னு அர்த்தம்.. ஜாக்கிரதை..
Symptoms Of Stroke In Tamil: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய இரண்டு விதமான உயிரைப் பறிக்கும் நோய்களின் அபாயம் அதிகரிக்கின்றன. இவற்றில் மாரடைப்பு குறித்து பலருக்கும் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் பக்கவாதம் குறித்து சிலரே அறிந்திருக்கலாம்.
பக்கவாதம் என்பது ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனை. மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, மூளை செயல்பட தேவையான ஆற்றல் இல்லாமல், மூளையில் உள்ள செல்கள் மற்றும் தசைகள் கடுமையான பாதிக்கப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

இந்த பக்கவாதமானது நீடித்த மூளை பாதிப்பு, நீண்ட கால இயலாமை அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தலாம். பக்கவாதத்தின் அறிகுறிகள் லேசான பலவீனம் முதல் உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை வரை இருக்கலாம். பக்கவாதத்தினால் எவ்வித பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படக்கூடாதெனில், அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேலே கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சமீபத்திய ஆய்வுகளின் படி, பக்கவாதம் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு 7 அறிகுறிகள் உடலின் தெரியும். இந்த அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்லுங்கள். இப்போது அந்த எச்சரிக்கை அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
அசாதாரண உணர்வின்மை அல்லது பலவீனம்
பக்கவாதத்தின் பொதுவான அறிகுறிகள் எதிர்பாராத உணர்வின்மை அல்லது பலவீனம் ஆகும். அதுவும் உடலின் ஒரு பகுதி, அதாவது முகம், கை அல்லது கால் போன்றவை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பேசுவதில் சிரமம்
பக்கவாதத்தின் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி பேசுவதில் சிரமப்படுவது அல்லது வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாமல் வாய் குளறுவது ஆகும். திடீரென்று உங்களுக்கு இம்மாதிரியான அறிகுறி தெரிந்தால், உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இது பக்கவாதத்தினால் இதயம் செயலிழக்க போகிறதைக் குறிக்கிறது.
மங்கலான பார்வை
உங்கள் பார்வை காரணமின்றி மங்கலாகவோ அல்லது பார்க்கும் பொருட்கள் இரண்டாக தெரிந்தாலோ, உங்களுக்கு பக்கவாதம் வரப் போகிறது என்று அர்த்தம். எனவே பார்வை தொடர்பான பிரச்சனைகளை திடீரென்று சந்தித்தால், உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்.
தலைச்சுற்றல்
அடிக்கடி உங்களுக்கு தலை சுற்றுகிறதா? அதாவது தலைச்சுற்றல் அல்லது தடுமாற்றம் போன்றவற்றை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் பக்கவாதம் வரப் போகிறது என்பதன் எச்சரிக்கை அறிகுறிகள். தலைச்சுற்றலை எப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். சாதாரண உடல் பிரச்சனை முதல் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனை வரை தலைச்சுற்றல் ஒரு முக்கிய அறிகுறியாக உள்ளன. எனவே கவனமாக இருங்கள்.
நடக்க முடியாமை
உங்களால் சமீப நாட்களாக நடக்க முடியவில்லையா? அடிக்கடி தடுக்கி விழுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு பக்கவாதம் எப்போது வேண்டுமானாலும் வர வாய்ப்புள்ளது. ஆகவே உங்களிடம் இப்படியான அறிகுறிகளை திடீரென்று கண்டால், மருத்துவரை அணுகுங்கள்.
மிகுதியான உடல் சோர்வு
வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக உடல் சோர்வு அல்லது உடல் பலவீனத்தை சந்திக்கிறீர்களா? அப்படியென்றால், அது பக்கவாதத்தின் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறியாகும். 2 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து உடல் களைப்பை சந்தித்தால், அதைப் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications