Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாக மாறப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்ககிட்ட இந்த 5 பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க... இல்லன்னா வயிற்று புற்றுநோய் வந்துடும்...
Stomach Cancer In Tamil: புற்றுநோய் என்பது உடலில் வளரும் அசாதாரண செல்களின் வளர்ச்சியாகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் வயிற்றுப் புற்றுநோய் என்று அழைக்கப்படும் இரைப்பை புற்றுநோய். இந்த புற்றுநோய் இரைப்பையின் உள் புறணியில் உள்ள அசாதாரண செல்களின் வளர்ச்சியாகும். அது உலகளவில் உயிரைப் பறிக்கும் அளவில் ஆபத்தான 3 ஆவது புற்றுநோய் மற்றும் 5 ஆவது பொதுவான புற்றுநோயாக உள்ளது.
ஒருவருக்கு வயிற்று புற்றுநோய் இருந்தால், அதன் அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அந்த அறிகுறிகள் நாம் பொதுவாக சந்திக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகளைப் போன்றிருக்கும். இருப்பினும் ஒருவர் தொடர்ச்சியாக அஜீரண கோளாறு, நெஞ்செரிச்சல், திடீரென்று எடை இழப்பது, அடிவயிற்று வலி, குமட்டல் அல்லது இரத்தம் கலந்த வாந்தி, பசியின்மை, மலம் கழிப்பதில் சிரமம் போன்றவற்றை சந்தித்தால், அவர்களுக்கு வயிற்று புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவருக்கு வயிற்று புற்றுநோயானது வாழ்க்கை முறை, பழக்கங்கள் மற்றும் மரபணுக்கள் போன்றவற்றினால் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இப்போது ஒருவரது எந்த பழக்கங்கள் எல்லாம் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதைக் காண்போம். உங்களிடம் இப்பழக்கங்கள் இருப்பின் உடனே அதை நிறுத்துங்கள்.
அதிகளவு உப்புள்ள உணவுகளை உண்பது
அதிக உப்புள்ள உணவுகளான ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ், இறைச்சிகள் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டால், அது இரைப்பையின் சுவற்றில் அழற்சி ஏற்படுவதை அதிகரிப்பதோடு, வயிற்று புற்றுநோய் வருவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே வயிற்று புற்றுநோய் வரக்கூடாதெனில் உப்புள்ள உணவுகளை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
புகைப்பிடிப்பது
பொதுவாக புகைப்பிடிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இந்த புகைப்பிடிக்கும் பழக்கம் நுரையீரலில் மட்டுமின்றி, இரைப்பையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இப்பழக்கம் அதிகமாக இருந்தால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, உடலில் புற்றுநோய் போன்ற பலவிதமான மோசமான நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே நீங்கள் புகைப்பிடிப்பீர்கள் என்றால், உடனே இப்பழக்கத்தை கைவிடுங்கள்.
சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் ஸ்நாக்ஸ்
சர்க்கரை இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும், அது ஒரு விஷம். இந்த சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் ஸ்நாக்ஸ்களை ஒருவர் தினமும் உட்காண்டு வந்தால், அது உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றை மட்டுமின்றி, வயிற்று புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருங்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது
இன்றைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட விரும்புவதில்லை. இப்படி காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் பலவிதமான நோய்களின் அபாயம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வயிறு தொடர்பான தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழ விரும்பினால், பழங்கள், காய்கறிகளை தினசரி உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
அதிகப்படியான மன அழுத்தம்
மன அழுத்தமானது ஒருவரது ஒட்டுமொத்த உடலை சீரழித்துவிடும். முக்கியமாக இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். ஏனெனில் மன அழுத்தத்தில் அதிகம் இருந்தால், அது ஜங்க் உணவுகளின் மீதான நாட்டத்தை அதிகரித்து, அவற்றை அதிகமாக சாப்பிடத் தூண்டும். இதன் விளைவாக அந்த உணவுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மன அழுத்தத்தை தவிர்க்க யோகா, தியானம் போன்ற விஷயங்களில் தினமும் ஈடுபடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
