Latest Updates
-
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
உங்க 'உச்சா' ரொம்ப நாற்றம் அடிக்குதா? அப்ப உங்களோட இந்த உறுப்பு பெரிய ஆபத்துல இருக்குன்னு அர்த்தம்...
Smelly Urine Reasons In Tamil: நீங்கள் கழிக்கும் சிறுநீர் துர்நாற்றம் வீசுகிறதா? பொதுவாக உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால், குறிப்பிட்ட உணவுகளை உட்கொண்டால் அல்லது குறிப்பிட்ட சில மருந்துகளை எடுத்தால், சிறுநீரில் இருந்து துர்நாற்றம் வீசும். ஆனால் இந்த துர்நாற்றமானது நீண்ட நாட்களாக நீடித்திருந்தால், அது உடலில் உள்ள ஆபத்தான நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இரத்தத்தில் இருந்து நச்சுக்களை சிறுநீரகங்கள் பிரித்தெரித்து, உடலில் இருந்து வெளியேற்றும் திரவக் கழிவு தான் சிறுநீர். இந்த சிறுநீரில் நீர், உப்பு, யூரியா மற்றும் யூரிக் அமிலம் போன்றவை இருக்கும்.

ஒருவரது சிறுநீரின் நிறம், நாற்றம் போன்றவை எல்லாம், அந்நபரின் ஆரோக்கியம், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்தது. அதுவும் ஒருவரது சிறுநீரில் இருந்து அமோனியா நாற்றம் வீசுகிறதென்றால், அதற்கு பின்வருவன காரணங்களாக இருக்கலாம்.
பாலியல் நோய்த்தொற்றுகள்
ஒருவருக்கு பாலியல் நோய்த்தொற்றுக்களான கிளமிடியா மற்றும் ட்ரைக்கோமோனியாசிஸ் போன்றவை இருந்தாலும், அது சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த தொற்று ஏற்பட்டிருந்தால், சிறுநீர் துர்நாற்றத்துடன் இருப்பதை தவிர, சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த வலியை சந்திக்க நேரிடும். ஆகவே இந்த அறிகுறிகள் அனுபவித்தால் கவனமாக இருங்கள்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்று
சிறுநீர் பாதை நோய்த்தொற்று என்பது ஒரு பொதுவான நோய்த்தொற்று. பெரும்பாலும் இந்த நோய்த்தொற்று பெண்களிடையே அதிகம் ஏற்படும். இந்த தொற்று ஏற்பட்டிருந்தால், கடுமையான சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். நிபுணர்களின் கூற்றுப்படி, சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குவதைத் தவிர, வலி, அசௌகரியம் மற்றும் காய்ச்சலையும் ஏற்படும்.
இதை உடனே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், இந்த துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியா வளர்ச்சியடைந்து, சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புக்களிலும் பரவிவிடும். எனவே இந்த தொற்று இருப்பதை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
கர்ப்பம்
கர்ப்பிணிகளுக்கு சிறுநீர் அம்மோனியா துர்நாற்றத்துடன் வெளியேறுவதற்கான நிறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால், கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கர்ப்ப காலத்தில் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்பட்டால், அது குறைப்பிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை போன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
சிறுநீரக நோய்
ஒருவருக்கு சிறுநீரக நோய் இருந்தால், அந்நபரின் சிறுநீரில் கெமிக்கல்கள் அதிகமாக குவிர்ந்து, அம்மோனியா போன்ற நாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சிறுநீரில் அதிகளவிலான பாக்டீரியாக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்து, கழிக்கும் சிறுநீரில் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
எனவே உங்கள் சிறுநீரில் நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசுவதைக் கண்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் காரணமின்றி மாதக்கணக்கில் சிறுநீர் துர்நாற்றம் வீசகிறதென்றால், உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் சாப்பிட்டால், சிறுநீர் அம்மோனியா நாற்றத்துடன் வெளியேறும். ஏனெனில் இந்த காய்கறியில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இது சிறுநீரின் அமித்தன்மையை அதிகரித்து, கடுமையான துர்நாற்றத்தை வீசச் செய்யும்.
சிறுநீரில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுப்பது எப்படி?
நீரை அதிகம் பருகவும்
சிறுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்றால், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால், முதலில் நீரை அதிகம் குடிக்க வேண்டும். அதுவும் அதிகம் வியர்ப்பவர்கள், வெயிலில் சுற்றுபவர்கள் உடலை போதுமான நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீரை தவறாமல் குடிக்க வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கவும்
நிறைய பேர் சிறுநீர்ப்பை நிரம்பிய பின்னர் தான் சிறுநீரைக் கழிப்பார்கள். ஆனால் இப்படி சிறுநீர்ப்பை நிரம்பும் வரை காத்திருக்காமல், அடிக்கடி சிறுநீரை கழிக்க வேண்டும். சிறுநீர்ப்பையில் சிறுநீரை அதிக நேரம் வைத்திருந்தால், அதுவே சிறுநீரில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, தொற்றுக்களின் அபாயத்தையும் அதிகரித்துவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
