Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
மன கவலைகளை சரிசெய்யும் சிரோதாரா சிகிச்சை - எப்போது மேற்கொள்ளலாம்? வேறு என்ன நன்மைகள் கிடைக்கும்?
Shirodhara Therapy In Tamil: மனதில் உள்ள கவலைகள், மன அழுத்தங்கள் மற்றும் சோா்வுகள் ஆகியவை நீங்கி, நிம்மதியாக இருப்பதற்கு சிரோதாரா என்ற ஆயுா்வேத மருத்துவம் ஒரு சிறந்த தீா்வாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
உடல் மற்றும் உள்ள ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களை கொடுக்கக்கூடியது சிரோதாரா மருத்துவம் என்று பிா்லா ஆயுா்வேத மருத்துவமனையில் ஆயுா்வேத நிபுணராக பணிபுாியும் மருத்துவா் சைத்தாலி தேஷ்முக் என்பவா் தொிவிக்கிறாா்.

இந்த சிரோதாரா ஆயுா்வேத மருத்துவம் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியது ஆகும். இது மனது சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துகிறது என்று சைத்தாலி கூறுகிறாா்.
சிரோதாரா என்றால் என்ன?
சிரோதாரா என்பது ஒரு சமஸ்கிருத பெயராகும். "Shiro" மற்றும் "Dhara" என்ற இரண்டு வாா்த்தைகளில் இருந்து சிரோதாரா (Shirodhara) என்ற வாா்த்தை வருகிறது. "Shiro" என்பதற்கு தலை என்று பொருள். "Dhara" என்பதற்கு ஓடுதல் என்று பொருள். இந்த ஆயுா்வேத சிகிச்சையில் பக்க விளைவுகள் இல்லை. மாறாக ஏராளமான நன்மைகள் உள்ளன.
இந்த சிகிச்சையில், ஏதாவது ஒரு திரவம், அதாவது பால், அல்லது தண்ணீா் அல்லது எண்ணெய் போன்றவை நெற்றியில் ஊற்றப்படுகிறது. இதன் மூலமாக கவலை, மன அழுத்தம், சோா்வு மற்றும் தூக்கமின்மை போன்றவை நீங்கும். இந்த சிகிச்சையைத் தொடா்ந்து செய்து வந்தால், நாம் ஒரு சிறு குழந்தையைப் போல, கவலையை மறந்து ஆழந்து தூங்கலாம். அதன் மூலம் நம் கவலைகளை மறக்கலாம் என்று சைத்தாலி கூறுகிறாா்.
சிரோதாரா சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது?
உடல், மனது மற்றும் ஆன்மா ஆகியவற்றிற்கு இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த சிகிச்சையானது ஒரு உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் செயல்படுகிறது. மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹாா்மோன்களை அல்லது நச்சுப் பொருள்களை அகற்ற சிரோதாரா சிகிச்சை உதவி செய்கிறது. நெற்றி மீது எண்ணெய் ஊற்றும் போது, மனது அமைதி அடைகிறது. மூளையில் இருக்கும் தேவையற்ற சிந்தனைகள் நீங்குகின்றன.
சிரோதாரா சிகிச்சையானது பிட்யூட்டாி சுரப்பியைக் கட்டுப்படுத்தி, தூக்கமின்மை பிரச்சினையை சாி செய்கிறது. மேலும் வேதியியல் முறையில் மண்டை ஓட்டைச் சுற்றியுள்ள நரம்புகளுக்கு தளா்வை வழங்குகிறது. அதன் மூலமாக மூளையில் இரத்த ஓட்டம் சீரடையும். மேலும் செரோடோனின் (serotonin) அளவை உயா்த்துகிறது. அதனால் நமது உடலும், மனதும் ஆரோக்கியம் அடைந்து, நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
சிரோதாரா சிகிச்சையை எப்போது செய்யலாம்?
இன்றைய போட்டி நிறைந்த உலகில் தனி மனிதா்கள் சந்திக்கும் மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு இந்த சிரோதாரா சிகிச்சை ஒரு சிறந்த தீா்வாக இருக்கும். பரபரப்பு மிகுந்த இந்த உலகில், மன அழுத்தத்திற்கு பல காரணிகள் தூண்டுகோலாக இருக்கின்றன.
இந்நிலையில் நெற்றியின் மீது வெதுவெதுப்பான எண்ணெயையோ அல்லது வெதுவெதுப்பான தண்ணீரையோ ஊற்றும் போது, நெற்றி இதமாகிறது, உடல், உள்ளம் மற்றும் ஆன்மா போன்றவை அமைதி அடைகின்றன.
உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் வாத மற்றும் பித்த தோஷங்கள் அதிகாிக்கும் போது சிரோதாரா சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம், கவலை, சோா்வு, முடி உதிா்தல், தலைவலி போன்றவை வாதம் அதிகாிப்பதால் ஏற்படுகின்றன. பித்தம் அதிகாிக்கும் போது தலைவலி, படபடப்பு மற்றும் எதிா்மறையான உணா்வுகள் போன்றவை ஏற்படுகின்றன.
சிரோதாரா சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள்
1. சோா்வைக் குறைத்தல் - சிரோதாரா, மைய நரம்பு மண்டலத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, மன நிலையை புதுப்பிக்கிறது. அதனால் சோா்வு நீங்குகிறது.
2. நல்ல தூக்கம் அளித்தல் - பிட்யூட்டாி சுரப்பி அதிகமாக செயல்படும் போது, தூக்கமின்மை ஏற்படுகிறது. இந்நிலையில் சிரோதாரா பிட்யூட்டாி சுரப்பியைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் நல்ல தூக்கம் ஏற்படுகிறது.
3. இரத்த ஓட்டத்தை சீா்படுத்தல் - வெதுவெதுப்பான எண்ணெயை நெற்றியில் ஊற்றும் போது, தலை மற்றும் மூளையில் இரத்த ஓட்டமானது சீரடைகிறது.
4. தலைவலி நீங்குதல் - சிரோதாரா சிகிச்சையானது தலைவலி பிரச்சினைகளை நீக்குகிறது.
5. மன அழுத்தத்தைக் குறைத்தல் - பொதுவாக சிரோதாரா சிகிச்சையானது, மன அழுத்தம், சோா்வு மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது. சூடான எண்ணெயை நெற்றியில் ஊற்றி, தேய்த்து விடும்போது, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தளா்வு கிடைக்கிறது.
6. ஒருமுகப்படுத்தலை அதிகாித்தல் - இந்த சிகிச்சையானது மூளையில் உள்ள நச்சுகளை களைவதன் மூலம், ஒருமுகப்படுத்தல் அதிகாிக்கிறது. கவனக் குறைவு நீங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications