Latest Updates
-
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
தினமும் வெறும் வயித்துல இந்த விதை கலந்த நீரை குடிச்சா போதுமாம்... உங்க சர்க்கரை அளவும் எடையும் குறையுமாம்!
பொதுவாக விதைகள் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில், சியா விதைகள் உங்கள் உடலுக்கு பல அதிசயங்களை செய்கின்றன. இந்த விதையில் அதிக நார்ச்சத்து உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் சியா விதை கலந்த தண்ணீரைக் குடிப்பது செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு நல்லது.
உணவுமுறை பற்றி பேசும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது? ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுதான். உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்பும் அனைவரும், உங்கள் உணவில் கூடுதலாக ஒரு பொருளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நம் ஒவ்வொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. காலை உணவு, உங்கள் உடலுக்கு அதன் ஆரம்ப ஆற்றல் மூலத்தை வழங்குகிறது. உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, உங்கள் தினசரி உணவில் இருந்து அதிகப் பலனைப் பெற உங்கள் உடல் உதவுவதற்கு, உங்கள் காலைப் பழக்கத்தில் ஆரோக்கியமான காலை பானத்தைச் சேர்க்க வேண்டும்.
உங்கள் தினசரி உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய பல்வேறு வகையான காலை எடை இழப்பு பானங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமானது. சியா விதை தண்ணீர். இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், கிடைக்கும் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

எடை இழப்புக்கு சியா விதை நீர்
எடை இழப்பை ஆதரிக்கும் ஆரோக்கியமான விதைகளில் ஒன்று சியா. அவற்றில் பாஸ்பரஸ், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. சியா விதைகளை உங்கள் உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். சாலட், ஜூஸ் மற்றும் நட்ஸ்களில் சேர்த்துக்கூட நீங்கள் சாப்பிடலாம்.
இவற்றை விட மிகவும் எளிதானவழி, சியா விதைகளை நீங்கள் தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். சியா விதைகளை தண்ணீரில் கலந்து காலையிலோ அல்லது நாளின் வேறு எந்த நேரத்திலோ குடிப்பதன் மூலம் நீங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
சியா விதைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்கள் செய்யக்கூடிய தீங்குகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. இந்த விதையில் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால், சியா விதை தண்ணீரை காலையில் குடிப்பது செரிமானம் மற்றும் குடல் இயக்கத்திற்கு நல்லது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு, உங்கள் உடல் எடையை குறைப்பதில் பங்கு வகிக்கின்றன.
எடை இழப்பை ஊக்குவிக்கிறது
சியா விதைகளில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. எனவே சியா விதைகள் தண்ணீரால் உறிஞ்சப்பட்டு, ஜெல் போன்ற நிலைத்தன்மையைக் கொடுக்கும். சியா விதை நீர் உங்களை அதிக திருப்தியடையச் செய்யும் மற்றும் செரிமானத்தை மெதுவாக்கும். இது நீங்கள் குறைவான கலோரிகளை உண்பதற்கும் எடை இழப்பை ஊக்குவிப்பதற்கும் உதவும்.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் ALA எனவும் அழைக்கப்படுகிறது. இது சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இதன் காரணமாக சியா விதைகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சியா விதைகளை தினமும் உட்கொள்வதன் மூலமோ அல்லது அவற்றை உங்கள் தண்ணீரில் சேர்ப்பதன் மூலமோ இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
சியா விதைகள் இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இந்த விதைகள் உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சியா விதைகளை உங்கள் உணவில் சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
காலை டிடாக்ஸ் பானம்
இரவில் தண்ணீரில் ஊறவைத்த ஒரு ஸ்பூன் சியா விதைகளை, காலையில் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து ஆரோக்கியமான டிடாக்ஸ் பானமாக அருந்தலாம். இந்த பானம் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், பிடிவாதமாக உங்கள் வயிற்றில் இருக்கும் தொப்பை கொழுப்பை அகற்றவும் உதவும்.
நீண்ட நேரம் உங்களை முழுதாக வைத்திருக்கும்
ஒரு கிளாஸ் ஊறவைத்த சியா விதைகளுடன் உங்களை நாளைத் தொடங்குவது, நீண்ட நேரம் திருப்தியாக உணரவும், உங்கள் பசி உணர்வைத் தணிக்கவும் உதவும். அத்துடன் இது எடையைக் குறைக்கவும் உதவும்.
வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது
உடலில் உள்ள பல கோளாறுகள் அதிகளவு வீக்கத்தால் ஏற்படலாம். ஆய்வுகளின்படி, சியா விதை நீரை வெறும் வயிற்றில் குடிப்பது அழற்சி பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
