Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!
இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
பண்டைய காலம் முதல் இன்று வரை நாம் பின்பற்றி வரும் பாரம்பரிய முறைகள் மிகவும் பிரபலமானதாகவும், பல நன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அப்படியொரு பாரம்பரிய முறை கைகளால் உணவை சாப்பிடுவது. நம் முன்னோர்கள் முதல் இன்றுவரை பலர் கைகளால் உணவை சாப்பிடுவதற்கு காரணம் உள்ளது.

நீங்கள் கைகளால் சாப்பிடும்போது, உணவை ரசித்தும், முழுமனதுடனும் சாப்பிடலாம். மேலும், இவை குடல் மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் பல்வேறு நன்மை வழங்குகிறது. கையால் உண்பதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் மற்றும் நன்மைகள் என்னெவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?
ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு விரலுக்கும் சில ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. இது உணவு மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. கட்டைவிரல் அக்னி (நெருப்பு), ஆள்காட்டி விரல் வருணன் (காற்று), நடுவிரல் ஆகாஷ் (ஆகாயம்), மோதிர விரல் பிருத்வி (பூமி), மற்றும் சுண்டு விரல் ஜலம் (நீர்) ஆகியவற்றுடன் இணைக்கிறது.
கைகளால் உண்ணும் போது, ஒவ்வொரு விரலும் குறிக்கும் உறுப்பைக் கொண்டுவருவதாகவும், அவை உள் உடல் செயல்பாட்டை முழுவதுமாகச் சமநிலைப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இது உங்களுக்கு முழுமை உணர்வை அளிப்பதோடு, நீங்கள் சாப்பிடும் உணவை சரியாக ஜீரணிக்கும்.
நிபுணர்கள் கூறுவது
சுகாசன தோரணையில் கைகளால் சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுகாசன தோரணை என்பது தரையில் சம்மனங்கால் போட்டு அமர்ந்திருக்கும் நிலையில் சாப்பிடுவது. பாரம்பரிய முறைப்படி இப்படி சாப்பிடுவது, உங்கள் உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.
இது வயிற்றில் உள்ள செரிமான நெருப்புக்கு உணவு பிரசாதமாக அமையும். எனவே, நீங்கள் உண்ணும் உணவை உங்கள் கைகளால் எடுத்து சாப்பிட வேண்டும், பிரசாதம் இதயப்பூர்வமாக இருக்க வேண்டும்.
அறிவியல் காரணங்கள்
அறிவியலின் படி, கைகளால் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் கைகளில் தீங்கு விளைவிக்காத பாக்டீரியாக்கள் உள்ளன. அதேபோல, சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. மற்றவர்கள் பயன்படுத்திய ஸ்பூனை நீங்கள் பயன்படுத்தாமல், எப்போதும் கைகளால் சாப்பிடுங்கள்.
அதிகரித்த இரத்த ஓட்டம்
கைகளால் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரு வகையான தசை பயிற்சி என்று கூறப்படுகிறது. ஆதலால், இனிமேல் தவறாமல் கைகளால் எடுத்து சாப்பிடத் தொடங்குங்கள்.
வெப்பநிலை சென்சார்
நம் கைகளால் உணவை உண்ணும்போது, நரம்பு முனைகள் உணவின் வெப்பநிலையை உணரும். நாம் என்ன சாப்பிடப் போகிறோம், உணவு எவ்வளவு சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கிறது என்பதற்கு ஏற்ப உங்கள் மூளையைத் தயார்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
ஆயுர்வேதக் கண்ணோட்டத்தில், உணவைத் தொடுவதன் மூலம், குறிப்பிட்ட உணவை ஜீரணிக்க தேவையான நொதிகள் மற்றும் செரிமான சாறுகளைத் தயாரிக்க நரம்புகள் உடலுக்கு செய்தியை அனுப்புகின்றன. இதனால், நீங்கள் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணிக்கப் படுகிறது.
அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும்
நாம் கைகளால் சாப்பிடும்போது, பொதுவாக மெதுவாகதான் சாப்பிடுவோம். இதனால், அதிகமாகவோ அல்லது வேகமாகவோ சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
