Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும்.
உங்க உடலில் இது குறைவா இருக்கா? அப்ப நீங்க கோமாவுக்கு போகலாமாம் அல்லது உயிருக்கே ஆபத்து ஏற்படலாமாம்!
Low Sodium Level In Tamil: குறைந்த அளவு சோடியம் நிலைக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். நம் உடலுக்கு சோடியம் மிக முக்கியம். நாம் ஒவ்வொருவரும் உட்கொள்ளும் உணவுகளில் சோடியத்தை சரியான அளவில் சேர்க்க வேண்டும்.
அதிகப்படியாக சோடியம், அதவாது அதிக உப்பு உடலில் இருப்பது மட்டுமே உங்களுக்கு ஆபத்தானது என்று நீங்கள் நினைத்தால், அது தவறானது. குறைந்த சோடியம் அளவும் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.

சோடியம் என்பது ஒரு எலக்ட்ரோலைட் ஆகும். இது உங்கள் செல்களில் உள்ள நீரின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அசாதாரணமாக குறைந்த அளவு சோடியம் ஹைப்போநெட்ரீமியா எனப்படும் மருத்துவ நிலையால் வகைப்படுத்தப்படுகிறது.
யூகேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் (என்ஐஎச்), ஹைபோநெட்ரீமியாவை உங்கள் இரத்தத்தில் சோடியத்தின் செறிவு ஆபத்தான முறையில் குறைவாக இருக்கும் ஒரு நிலையை வரையறுக்கிறது. உடலில் சோடியம் குறைவாக இருப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றியும், எப்படி அதை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஹைபோநெட்ரீமியாவின் அறிகுறிகள்
தேசிய சுகாதார நிறுவனங்கள் படி, குறைந்த அளவு சோடியம் உள்ள ஒருவர் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கலாம். அறிகுறிகள் பின்வருமாறு:
- தலைவலி
- குழப்பம்
- உடல் சோர்வு
- குமட்டல் மற்றும் வாந்தி
- சோம்பல்
- வலிப்பு
ஹைபோநெட்ரீமியாவின் சிக்கல்கள்
48 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக சோடியம் அளவுகளில் மெதுவான சரிவு ஏற்படுவது, உங்கள் மூளையில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மற்றொரு காரணம் விரைவான மூளை வீக்கம் ஆகும். இந்த நிலைக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கோமா மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கலாம். ஆதலால், மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய ஆண்டுகளில் பெண்கள் ஹைபோநெட்ரீமியாவால் ஏற்படும் மூளை பாதிப்புக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான உப்பு அளவை பராமரிக்கும் உடலின் திறனை பெண்களின் பாலியல் ஹார்மோன்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதுடன் இது இணைக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஹைபோநெட்ரீமியாவை தடுக்க இயற்கை வழிகள்
இந்த நிலைக்கான சிகிச்சையானது அதன் தீவிரத்தன்மையைப் பொறுத்தது என்றாலும், ஹைபோநெட்ரீமியாவை இயற்கையாகவே நீங்கள் தடுக்கலாம். இருப்பினும், இந்த முறைகள் மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக இருக்கும் என்று அர்த்தமல்ல. சோடியம் அளவை அதிகரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவும் இயற்கையான வழிகளைப் பற்றி இங்கே காணலாம்.
சோடியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்
உடல் திரவங்கள், இரத்த அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதற்கு சோடியம் காரணம் என்பதால், உங்கள் சோடியத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். இதற்கு சரியான அளவு சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
உங்கள் உடலில் சோடியம் அளவு குறைவாக இருந்தால், பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், கடல் உணவுகள், பீட், கேரட் மற்றும் செலரி போன்ற அதிக சோடியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உப்பு உட்கொள்ளலை அதிகரிக்கவும்
உப்பு சோடியத்தின் உணவு மூலமாகும். அதை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்கலாம். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உங்கள் உப்பு உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். அதற்கு மேல் நீங்கள் உப்பை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், அதிக உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
எனவே தேவைக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம். மேலும், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் இருந்தால், உப்பை குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
உடல் செயல்பாடுகளின் போது பானங்கள் குடிக்கவும்
விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நீங்கள் அதிகமாக வியர்வையை வெளியேற்றலாம். இதனால், உடலில் நீரிழப்பு ஏற்படலாம். இந்நிலையில், ஆரோக்கியமான மற்றும் எலக்ட்ரோலைட்கள் கொண்ட விளையாட்டு பானங்களை அதிகம் குடிக்க வேண்டும்.
அதிகப்படியான வியர்வை அல்லது நீரிழப்பு ஹைபோநெட்ரீமியாவை ஏற்படுத்தும். மேலும் இந்த பானங்களில் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர் போன்ற ஊட்டச்சத்துக்களின் கலவை உள்ளது. இது உடலை சரியாக நிர்வகிக்க உதவும்.
அளவாக தண்ணீர் குடிக்க வேண்டும்
உங்கள் உடலில் அதிகப்படியான சோடியம் அளவை பராமரிக்க தண்ணீர் மிகவும் முக்கியமானது. உங்கள் உடலில் போதுமான திரவங்கள் இருப்பது ஹைபோநெட்ரீமியாவுக்கு உதவும். இருப்பினும், அதிகப்படியான நீரேற்றம் ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
பொதுவாக தாகம் ஏற்படுவது மற்றும் உங்கள் சிறுநீரின் நிறம் மாறுவது உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதற்கான சிறந்த அறிகுறிகளாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது என்பது நீங்கள் நீரிழப்புடன் இல்லை மற்றும் போதுமான தண்ணீரை உட்கொள்வதற்கான அறிகுறியாகும்.
அடிப்படை மருத்துவ நிலையைக் குறிப்பிடவும்
சிறுநீரக நோய் அல்லது அட்ரீனல் பற்றாக்குறை போன்ற சில அடிப்படை மருத்துவ நிலைமைகள் உங்கள் சோடியம் அளவைக் குறைக்கலாம். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உங்கள் சோடியம் அளவை நிர்வகிக்க சிறந்த வழி மருத்துவரின் உதவியுடன் அடிப்படை மருத்துவ நிலைமைகளை சரி செய்வதாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

