Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
Raisin Water: கோடையில் உலர் திராட்சை ஊற வைத்த நீரை ஏன் குடிக்கணும்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
Benefits Of Raisin Water In Tamil: கொளுத்தும் கோடையில் மிகுந்த உடல் சோர்வையும், பலவீனமாகவும், மலச்சிக்கல் பிரச்சனையையும் சந்திக்கிறீர்களா? அப்படியானால் இந்த பிரச்சனைகளுக்கு உலர் திராட்சை ஊற வைத்த நீர் நல்ல நிவாரணத்தை அளிக்கும். கேசரி, பாயாசம் போன்ற இனிப்புக்களில் சேர்க்கப்படும் உலர் திராட்சை வெறும் இனிப்புச் சுவையைக் கொண்ட உலர் பழம் மட்டுமின்றி, இதில் ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன.
குறிப்பாக உலர் திராட்சையில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. முக்கியமாக உலர் திராட்சையை ஊற வைத்த நீரில் உள்ள குளிர்ச்சி பண்புகள் கோடையில் உடல் வறண்டு போவதைத் தடுத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகின்றன.

இப்படிப்பட்ட உலர் திராட்சையை கோடைக்காலத்தில் உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30 ஆம் தேதி தேசிய உலர் திராட்சை தினம் கொண்டாடப்படுகிறது. இன்று தேசிய உலர் திராட்சை தினம் என்பதால், இந்த உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து கோடைக்காலத்தில் உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
1. ஆற்றல் மேம்படும்
கோடையில் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்க உலர் திராட்சை பெரிதும் உதவி புரிகிறது. குறிப்பாக உலர் திராட்சையில் இயற்கை சர்க்கரை வளமான அளவில் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது அது உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கின்றன. மேலும் உலர் திராட்சையில் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவு. ஆனால் நார்ச்சத்து ஏராளமான அளவில் இருப்பதால், செரிமான செயல்முறையை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். எனவே கோடையில் உலர் திராட்சை ஊற வைத்த நீரைக் குடிப்பது நல்லது.
2. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்
உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இவை உடலை குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கின்றன. அதுவும் உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் உலர் திராட்சையை உட்கொள்ளும் போது, முழு சத்துக்களும் உடலுக்கு கிடைத்து, எளிதில் உடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலமும் வலுவடைகிறது.
3. நீரிழப்பைத் தடுக்கும்
கொளுத்தும் கோடையில் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, அது அதிகப்படியான வெப்பத்தால் உடல் வறண்டு போவதைத் தடுத்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே கோடையில் உடல் வறண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்நீரை குடித்து வாருங்கள்.
4. குடலியக்கம் சீராகும்
உலர் திராட்சை ஊற வைத்த நீரில் மிதமான அளவில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. இவை மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்க உதவுகின்றன. ஒருவரது செரிமான மண்டலம் சீராக செயல்பட்டாலே, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முதலில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு உலர் திராட்சை ஊற வைத்த நீர் பெரிதும் உதவி புரியும்.
5. உடல் குளிர்ச்சியாகும்
முக்கியமாக உலர் திராட்சை ஊற வைத்த நீரை ஒரு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே உடல் சூடு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இந்த நீரை குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலனைப் பெறலாம்.
உலர் திராட்சை நீரை தயாரிப்பது எப்படி?
* முதலில் இரவு தூங்கும் முன் 10 கருப்பு உலர் திராட்சையை ஒரு டம்ளர் நீரில் போட்டு, மூடி வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், அந்நீரை குடித்து, உலர் திராட்சையை சாப்பிட வேண்டும்.
* இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதை நீங்களே உணர்வீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











