Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
Zika Virus: புனேவில் கர்ப்பிணிகளை அதிகம் தாக்கும் ஜிகா வைரஸ்.. இந்த வைரஸ் சிசுவை எப்படி பாதிக்கும் தெரியுமா?
Zika Virus: புனேவில் கடந்த ஜூன் மாதம் முதலாக ஜிகா வைரஸ் தொற்றால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை புனேவில் ஜிக்கா வைரஸால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் 8 புதிய ஜிகா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 6 பேர் கர்ப்பிணிப் பெண்கள்.
கொசுக்களின் மூலம் பரவும் ஜிகா வைரஸால் புனேவில் இந்த வழக்குகள் அதிகரித்தவாறு உள்ளன. இதுவரை பதிவாகியுள்ள 73 ஜிகா வைரஸ் வழக்கில் சுமார் 32 கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இப்படி உயிரிழந்தவர்கள் வயதானவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்டவர்களாவர்.

இப்படி ஜிகா வைரஸ் தொற்று அதிகம் பரவ காரணம் மழையின் காரணமாக தேங்கி நிற்கும் கொசு உற்பத்தி தான். கொசுக்களின் மூலமாக இந்த வைரஸ்கள் பரவுவதால், இந்த கொசுக்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நீர் தேங்கியுள்ள பகுதிகளில் இரண்டு முறை கொசு மருந்துகளை தெளித்தல், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக புனே முனிசிபல் கார்பரேஷனின் சுகாதார தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜிகா வைரஸ்
ஜிகா வைரஸ் தொற்றை ஜிகா காய்ச்சல் என்றும் அழைப்பர். இந்த வைரஸ் ஏடிஸ் இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் கடிப்பதன் மூலும் பரவுகிறது. பொதுவாக இந்த வகையான கொசுக்கள் பகல் வேளையில் தான் கடிக்கும். அதுவும் அதிகாலை மற்றும் மதியம் அல்லது மாலை வேளைகளில் கடிக்கும். இந்த கொசுக்கள் அனைவரையும் கடிக்கும். மேலும் இந்த கொசுக்கள் கர்ப்பிணிப் பெண்களைக் கடித்தால், அது வயிற்றில் வளரும் குழந்தைகளையும் பாதிக்கும். இது தவிர இந்த வைரஸ் உடலுறவு, பாதிக்கப்பட்டவரின் இரத்தம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மூலமாகவும் பரவும்.
ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை தாக்கினால் ஆபத்தானதா?
ஜிகா வைரஸ் தொற்று கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்டால் அது ஆபத்தானது. ஏனெனில் இது வயிற்றில் வளரும் குழந்தையை மோசமாக பாதிக்கும். அதுவும் இது கன்ஜெனிடல் ஜிகா சிண்ட்ரோம் என்னும் பிறவியிலேயே சிசுவின் வளர்ச்சியில் அசாதாரணங்களை ஏற்படுத்தும்.
ஆயினும் உலக சுகாதார அமைப்பானது, கர்ப்ப காலத்தில் ஜிகா தொற்று ஏற்பட்டால் அது கட்டாயம் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகளின் ஆபத்து ஏற்படுத்துவதாக தெரியவில்லை என்று கூறுகிறது. கர்ப்ப காலத்தில் ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்ட பெண்களுக்கு பிறந்த 5-15 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே ஜிகா தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக சான்றுகளும் உள்ளன.
ஜிகா வைரஸ் சிசுக்களை எப்படியெல்லாம் பாதிக்கலாம்?
கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா தொற்று ஏற்பட்டால் அது கருவில் உள்ள சிசுவிற்கு மைக்ரோசெபாலியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதாவது இந்நிலையில காந்தைகளின் தலை மற்றும் மூளை வழக்கத்தை விட சிறியதாக இருக்கும். இதன் விளைவாக அறிவுசார் குறைபாடுகள் மற்றும் வளர்ச்சியில் தாமதம் ஏற்படக்கூடும்.
அதுமட்டுமின்றி, இது விழுங்குவதில் சிரமம், காது கேளாமை, பார்வை பிரச்சனைகள், வலிப்பு, நகர்த்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கடினமான தசைகளை உண்டாக்கும். அதற்காக ஜிகா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை இருக்காது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன. சில குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஜிகா வைரஸ் தொற்றின் தாக்கம் தெரியலாம்.
எனவே வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருந்தால், முடிந்தவரை பாதுகாப்பாக கொசுக்கள் கடிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தங்கள் ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications