Latest Updates
-
July Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் வெண் பொங்கலும், டிபன் சாம்பார், சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
10 நிமிசத்துல பருப்பே இல்லாம் இட்லி, தோசைக்கு ஈஸியான சாம்பாரை செய்யணுமா? இந்த மாதிரி செஞ்சு பாருங்க -
பாபா வங்காவின் ஆபத்தான கணிப்பு மீண்டும் பலித்துள்ளது? இன்னும் என்னென்ன கணிப்புகள் உள்ளது தெரியுமா? -
1 கப் புதினா இருந்தா இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும்
தீபாவளி பலகாரங்களால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..
Post Diwali Detox Tips In Tamil: தீபாவளி பண்டிகையை அனைவருமே வெகு விமரிசையாக பட்டாசுகளை வெடித்து, பலவிதமான இனிப்புகள் மற்றும் பலகாரங்களை சாப்பிட்டு கொண்டாடியிருப்போம். இத்தனை நாட்களாக டயட்டில் இருந்தவர்கள், இந்த தீபாவளி பண்டிகை நாளில் அந்த டயட்டிற்கு குட்-பை சொல்லிவிட்டு, விருப்பமானதை கட்டுப்பாடின்றி சாப்பிட்டிருப்பார்கள். இப்படி சாப்பிட்டதால், உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை எப்படி வெளியேற்றுவது என்று பலரும் யோசிப்பதுண்டு.
முந்தைய காலத்தில் எல்லாம் மக்கள் உடலுக்கு பலவிதமான வேலைகளை கொடுத்து வந்தார்கள். இதனால் முந்தைய காலத்தில் இதுக்குறித்த எண்ணம் மக்களுக்கு வந்ததில்லை. ஆனால் தற்போது அனைவருமே உட்கார்ந்தவாறே வேலை செய்வதால், உடல் எடை அதிகரித்துவிடுவதோடு, பலவிதமான பிரச்சனைகளையும் உடலில் தூண்டவிடுகிறது.

எனவே இதைத் தவிர்க்க மக்கள் பண்டிகை காலங்களுக்கு பின் உடலில் இருந்து நச்சுக்களை எப்படி வெளியேற்றுவது என்று அறிய விரும்புகிறார்கள். இப்போது பண்டிகை காலங்களுக்கு பின் உடலை சுத்தம் செய்ய பின்பற்ற வேண்டியவைகள் குறித்து காண்போம்.
செயற்கை சர்க்கரையை தவிரக்கவும்
தீபாவளிக்கு பின் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமானால், 1-2 வாரத்திற்கு செயற்கை சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஸ்வீட்டுகள், பேக்கரி உணவுகள், கோலா பானங்கள் போன்றவற்றை 2 வாரத்திற்கு சாப்பிடவே கூடாது. அப்படி சாப்பிடுவதைத் தவிர்க்கும் போது, தீபாவளி நாளில் உட்கொண்ட இனிப்புக்களால் உடலின் செரிமான மண்டலத்தில் ஏற்பட்ட சுமைகள் குறைந்து, விரைவில் உடல் சுத்தமாகும்.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிக்கவும்
தீபாவளிக்கு பின், தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சர்க்கரை ஏதேகும் சேர்க்காமல் குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது விரைவில் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
நீர் அதிகம் அருந்தவும்
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டுமானால், நீரை அதிகம் அருந்த வேண்டும். குறிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 8-9 டம்ளர் நீரை அருந்த வேண்டும். இப்படி குடிக்கும் போது உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்கும் மற்றும் உடலில் இருந்து நச்சுக்களும் சிறுநீர் மற்றும் வியர்வை வழியாக வெளியேற்றப்படும்.
இறைச்சிகளைத் தவிர்க்கவும்
தீபாவளிக்கு பிறகு, உடலை சுத்தம் செய்ய நினைப்பவர்கள், லைட்டான உணவுகளை உட்கொள்ள வேண்டும். செரிமான மண்டலத்திற்கு அதிக வேலைகளை கொடுக்கும் படியான கடினமான உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக விலங்கு வகை புரோட்டீன் நிறைந்த இறைச்சிகளைத் தவிர்த்து, தாவர வகை புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணவும்
தீபாவளிக்கு பின் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் நார்ச்சத்துள்ள உணவுகளான வெள்ளரிக்காய், கேரட், சாலட், முளைக்கட்டிய பயிர்கள், கீரைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராவதோடு, கழிவுகளும் உடலில் இருந்து எளிதில் வெளியேற்றப்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை ஒருவர் தீபாவளிக்கு பின் குறைந்தது 2 வாரங்கள் தொடர்ந்து தவறாமல் பின்பற்றி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications