Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
முதுகு வலியால் நீங்க அவதிப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகள சாப்பிட்டுங்க... முதுகு வலி பறந்து போயிடுமாம்!
முதுகுவலி என்பது இன்றைய நாளில் எல்லாருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. பொதுவாக வயதானவர்களுக்குதான் முதுகுவலி பிரச்சனை வரும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இன்றைய நாளில் உட்கார்ந்த வாழ்க்கை முறையால் பெரும்பலான மக்கள் முதுவலியால் அவதிப்படுகிறார்கள்.
பொதுவாக, பெரும்பாலான மக்கள் கீழ் முதுகில் வலியை உணர்கிறார்கள். சில சமயங்களில் தவறான நிலையில் அமர்வதும் முதுகு வலியை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இது தவிர, உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டு உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

முதுகுவலியிலிருந்து விடுபட, தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது வலியிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி தசைகளை வலுப்படுத்த உதவும். இருப்பினும், சில உணவுகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அசௌகரியத்தைப் போக்க உதவும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன.
துடிப்பான பழங்கள் மற்றும் இலை கீரைகள் முதல் மெலிந்த புரதங்கள் மற்றும் ஒமேகா-3 நிறைந்த மூலங்கள் வரை, சரியான உணவுத் தேர்வுகள் உங்கள் முதுகெலும்பு மற்றும் தசைகளை வலுவாக பராமரிக்கலாம். எனவே, ஆரோக்கியமான மற்றும் வலியற்ற வாழ்க்கையை பெற உதவும் உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
நீங்கள் அடிக்கடி முதுகுவலியால் அவதியடைந்து வந்தால், உங்கள் உணவில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவுகளை சேர்க்க வேண்டும். இதற்கு மீன், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள், சியா விதைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதனால் எலும்புகள் வலுவாக இருக்கும். இது தவிர, ஆலிவ் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயை உங்கள் உணவில் பயன்படுத்தலாம். இதனால் வலியில் இருந்து விரைவில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
அழற்சி எதிர்ப்பு உணவுகள்
அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த பல மசாலாப் பொருட்களை உங்கள் சமையலறையில் காணலாம். அந்த வகையில், இஞ்சி, பூண்டு, இலவங்கப்பட்டை மற்றும் சிவப்பு மிளகாயை குறைந்த அளவில் உணவில் பயன்படுத்தலாம்.
இவை வீக்கத்தைக் குறைக்க உதவும். மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது, இது எந்த மூட்டு வலிக்கும் ஓர் சிறந்த தீர்வாகும். அதே சமயம் இஞ்சி மற்றும் பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது கீல்வாதம் அல்லது மூட்டு வலியைப் போக்க உதவும்.
புரதம் நிறைந்த உணவுகள்
உடலில் புரதம் சத்து இல்லையென்றால், அதிக வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, உங்களுக்கு மூட்டு வலி வராமல் இருக்க, புரதச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு முட்டை, பால், பருப்பு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது தசைகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மற்றும் முதுகுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும், புரத சத்து உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தியும் பாதுகாக்க உதவும்.
பச்சை காய்கறிகளை சாப்பிடுவது
முதுகு வலி பிரச்சனையிலிருந்து விடுபட, பச்சைக் காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். அவற்றில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-கே ஆகியவை நிறைந்துள்ளன. அவை வீக்கத்தைப் போக்க உதவுகின்றன. மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சைம்களைத் தடுக்கும் சல்ஃபோராபேன் என்ற கலவையும் அவற்றில் உள்ளது.
உங்கள் உணவில் கேரட், பீட்ரூட் மற்றும் பூசணி போன்ற வேர் காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இது முழங்கால் மற்றும் முதுகு வலியைக் குறைக்க உதவுகிறது. இந்த காய்கறிகளை சாலட் வடிவிலூம் நீங்கள் சாப்பிடலாம்.
புதிய பழங்கள்
நீங்கள் தினமும் புதிய பழங்களை உட்கொள்ளலாம். ஏனெனில், பழங்கள் உங்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஆப்பிள், அன்னாசி, பெர்ரி, செர்ரி, திராட்சை, சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

