Latest Updates
-
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
புதிதாக திருமணமான தம்பதிகள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
திருமணமான புதிதில் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகள் பல. அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..
காதல் திருமணமோ, பெற்றோர் நடத்தி வைத்த திருமணமோ... பல குண வேறுபாடுகளோடுதான் ஆணும் பெண்ணும் திருமண வாழ்க்கையில் நுழைகின்றனர். அது இயல்பானதுதான். ஆனால், சரியான புரிந்துகொள்ளல் இல்லையென்றால், இருவருக்கிடையேயான அன்பை இந்த வேறுபாடுகள் அசைத்துப் பார்த்துவிடும்.

புதுமணத் தம்பதிகள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளின் பட்டியல்
1. எல்லைகள் என்று நாம் குறிப்பிடுவது திருமணதிற்கு பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பழகுவதற்கான கோடு ஆகும். நீங்கள் புதிதாக திருமணமான பெண் என்றால் இதுநாள் வரை வார இறுதி நாட்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவழித்திருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்கு பின் கணவர் அல்லது கணவர் குடும்பத்தாருடன் வார இறுதி அல்லது விடுமுறை நாட்கள் நேரத்தை செலவழிப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சேர்த்து தான்.
2. திருமணத்திற்கு பின் உங்கள் புதிய வாழ்க்கை துணை எந்தத் தவறும் செய்ய கூடாது என்று நினைப்பதும், எதிர்பார்ப்பதும் தவறானது மற்றும் நியாயமற்றது. ஏனென்றால் அவரும் மனிதர்தான், நீங்களும் மனிதர்தான். எனவே இருவருமே தவறு செய்யும் சூழல் என்பது சகஜமானது. அதை பெரிது படுத்தாமல் கண்டிக்க வேண்டியதற்கு லேசாக கண்டித்து விட்டு அதை கடந்து செல்வதே புத்திசாலித்தனம்.
3. உங்கள் புதிய வாழ்க்கை துணைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்தான். ஆனால் அதே சமயம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை முற்றிலும் மறந்து விட்டு குறுகிய எல்லையில் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் மாதத்தில் ஒரு நாளாவது வெளியே சென்று வரும் பழக்கத்தை வைத்து கொள்ளலாம். உங்கள் துணையையும் அவரது நம்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே சென்று நேரத்தை செலவழிக்கலாம்..
4. ஒரே வீட்டில் இருப்பதால் டூத் பேஸ்ட்டை ஷேர் செய்து கொள்வதில் துவங்கி பல விஷயங்கள் உங்களுடன் ஒன்றாக வரும். இது நல்ல விஷயம் தான் என்றால் கூட இப்பழக்கத்தால் கூட பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக உங்களில் யாராவது ஒருவர் பேஸ்ட்டை பயன்படுத்திய பிறகு மூடி வைக்க மறந்து விட்டால் அது குறித்து இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் ஏற்படும்.
5. நீங்கள் தனியாக இருக்கும் போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை அலங்கரிப்பது ஓகே. ஆனால் திருமண வாழ்வில் நுழைந்த பிறகு உங்கள் துணையின் ரசனைக்கு ஏற்பவும் வீட்டை அலங்கரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
6. திருமணத்துக்கு முன்பு, தனக்கு வரும் துணை இப்படியெல்லாம் இருக்க வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அவையெல்லாம் பலருக்கும் பூர்த்தியாவதில்லை. எனவே, இணையை அவரின் நிறை, குறையோடு ஏற்றுக்கொள்வதே திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க எடுத்து வைக்க வேண்டிய முதல் படி.
7. சிலர் விட்டுக் கொடுக்கிறேன்' என்ற பெயரில் சுயவிருப்பு, வெறுப்பு அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிடுவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அது கடுமையான மன உளைச்சலுக்கு வழிவகுக்கும். வெறுப்புகளைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தி, தெரியப்படுத்த வேண்டும். அவற்றில் எது முடியும், எது முடியாது என்பதையும் பேசி ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











