Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவிலும் அதிகரிக்கும் கொரோனா... அதுக்கு இந்த புதிய வைரஸ் தான் காரணமாம்.. உஷார்.
New Covid Variant JN1: கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டோம் என்று முழுமையாக சந்தோஷப்படுவதற்குள், மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் இந்த புதிய வகை கொரோனா வைரஸானது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.
கொரோனா வைரஸின் கடைசி வகை தான் பைரோலா அல்லது BA.2.86. இந்த வைரஸ் தற்போது உருமாற்றமடைந்துள்ளது. அதாவது இந்த வைரஸின் ஒரு புதிய ஸ்பைக் புரோட்டீனில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய வகை கொரோனா வைரஸிற்கு JN.1 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள புதிய பிறழ்வால் இது வேகமாக பரவும் திறன் கொண்டது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இந்த வைரஸ் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் JN.1 மாறுபாடு குறித்து பலரது மனதில் எழும் கேள்விகளுக்கான விடைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய கோவிட் JN.1 மாறுபாடு என்றால் என்ன?
புதிய கோவிட் JN.1 மாறுபாடு என்பது ஒமிக்ரானின் வகையைச் சேர்ந்த BA.2.86-ன் புதிய மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த பிறழ்வினால் இந்த வகை வேகமாக பரவும் திறன் கொண்டது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் திறனையும் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஒரு காரணத்தினால் இந்த மாறுபாடு ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே இந்த மாறுபாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
JN.1 எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த புதிய வகை JN.1 மாறுபாடு முதன்முதலாக 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் சுகாதார அமைப்புகளின் கூற்றுப்படி, இந்த புதிய மாறுபாட்டினால் இதுவரை அமெரிக்காவில் உள்ள மொத்த கொரோனா வழக்குகளில் 15-29 சதவீத வழக்குகள் இந்த மாறுபாட்டினால் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
வேகமாக பரவும் திறனைக் கொண்டிருந்தாலும், இந்த வகை கொரோனாவில் உயிர்சேதம் எதுவும் இல்லை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் மோசமாக இல்லை என்றும் அமெரிக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
JN.1 மாறுபாடு இந்தியாவில் உள்ளதா? எத்தனை கொரோனா வழக்குகள் இதுவரை உள்ளன?
அறிக்கைகளின் படி, இந்த புதிய கோவிட் மாறுபாடான JN.1 பிறழ்வானது முதன்முதலாக கேரளாவில் டிசம்பர் 13 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) கேரளாவில் அதன் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இந்தியாவில் கொரோனாவின் வழக்குகள் அதிகரித்து வருவதற்கு இந்த JN.1 மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று தேசிய இந்திய மருத்துவ சங்க கோவிட் பணிக்குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் மொத்தம் 1,296 கொரோனா வழக்குகள் உள்ளன.
JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
இந்த புதிய JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் மற்ற மாறுபாடுகளில் இருந்து வேறுபட்டவை அல்ல. இதுவரை உள்ள அனைத்து கொரோனா மாறுபாடுகளின் அறிகுறிகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளைத் தான் கொண்டிருந்தன. அதேப் போல் தான் இந்த புதிய மாறுபாட்டின் அறிகுறிகளும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் காய்ச்சல், மூக்கு ஒழுகல், தொண்டை புண், தலை வலி, ஆகியவை கொரோனாவின் முக்கியமான அறிகுறிகளாகும்.
மேலும் இந்த வைரஸ் மாறுபாடு குறித்து அதிகம் தெரியாது என்பதாலும், இதன் வேகமாக பரவும் திறன் காரணமாகவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த JN.1 மாறுபாடு குறித்து கவலைப்பட வேண்டுமா?
கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அல்லும் பகலும் அயராது உழைத்து தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தனர். ஆனால் இப்படிப்பட்ட தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கும் திறனை இந்த JN.1 மாறுபாடு கொண்டிருப்பதால், இது கவலைப்பட வேண்டிய ஒரு விகாரம்.
இருப்பினும், இந்த மாறுபாடு உலகில் தோன்றி 3 மாதங்கள் ஆகியிருந்தும், இன்னும் இந்த மாறுபாட்டினால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதுவாயினும், நாம் சுத்தமாக இருப்போம், கொரோனாவில் இருந்து நம்மை காப்போம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications