Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
மீண்டும் சூடுபடுத்தும் போது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் 8 உணவுகள்.. என்னென்ன தெரியுமா?
மீதியை மீண்டும் சூடுபடுத்துவதால் உணவு வீணாகாது என்பது உண்மைதான். ஆனால் இதைச் செய்வது பரவாயில்லை என்றாலும், சிலருக்கு இது ஆபத்தாக முடியும். சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும்..
சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும்போது அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன.. மற்றவை நமக்கு விஷமாக மாறுகின்றன. எனவே, நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதை எப்போதுமே மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.. அதிலும் இந்த 8 உணவுகளை சூடுபடுத்தவேக் கூடாதாம்.. ஏன் தெரியுமா? வாங்க இந்த பதிவில் அது பற்றி தெரிந்துக் கொள்ளலாம்..

எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு உங்களுக்கு மிகவும் நல்லது.. அவை மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றை அதிக நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு இழக்க வாய்ப்புள்ளது. அவற்றை சூடாக்குவது நச்சுத்தன்மையுடையதாக மாறும்.
கீரை
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
முட்டை
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
கோழி
பொதுவாக மீண்டும் சூடுபடுத்தப்படும் உணவுகளில் சிக்கன் ஒன்றாகும். ஆனால் அதை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் ஆரோக்கியமற்றது, ஏனெனில் இதில் அதிக புரதம் உள்ளது மற்றும் மீண்டும் சூடாக்குவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் உண்மையிலேயே சாப்பிட விரும்பினால், குளிர்ச்சியாக சாப்பிடுங்கள் தவறில்லை..
காளான்கள்
காளான்கள் எப்போதும் பறிக்கப்பட்ட உடனேயே உண்ணப்படும். சமைத்த பிறகு அதிக நேரம் வைத்திருந்தால், அவற்றில் உள்ள புரதங்கள் மாறி, ஜீரணிக்க கடினமாகிவிடும். அதனால் அதனை சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.
சாப்பாடு
அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
சமையல் எண்ணெய்
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.
பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications