Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
நம்ம CSK கேப்டன் தல தோனியின் 42-ஆவது பிறந்தநாள்... இந்த வயசுலையும் எப்படி இவ்வளவு ஃபிட்டா இருக்காரு தெரியுமா?
Ms Dhoni Birthday In Tamil: தோனி விக்கெட் கீப்பராக களமிறங்கியதில் இருந்தே, தனது கிரிக்கெட் திறமையால் அனைவரையும் இன்று வரை கவர்ந்து வருகிறார். அவருடைய சிக்ஸர்களையும் சிக்ஸர் ஷாட்டுகளையும் யாரால் மறக்க முடியும்? சிறிய குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் அதுபோல சிக்ஸ்ர் அடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
இந்தியா முழுவதும் தோனிக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தமிழர்கள் " தல" தோனி என்ற அடையாளத்தோடு எம்.எஸ் தோனியை கொண்டாடுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக இருக்கும் தோனியை எப்போதும் தங்கள் வீட்டின் ஒரு நபராக தமிழக மக்கள் பார்க்கிறார்கள். "எங்க தல டோனிக்கு பெரிய விசுலு அடிங்க" என்ற பாடல் ஐபிஎல் டி20 போட்டி தொடங்கியதிலிருந்து நாம் கேட்கலாம்.

இன்று நம்ம CSK கேப்டன் தல தோனியின் 42-ஆவது பிறந்தநாள். தனது 42- ஆவது வயதிலும் வலுவான உடலமைப்போடு, முதல் நாள் களத்தில் இறங்கிய உற்சாகத்தை போலவே இப்பவும் கொண்டிருப்பதற்கு அவருடைய வாழ்க்கை முறை முக்கிய காரணம்.
இந்தியாவே கொண்டாடும் எம்.எஸ். தோனி கூல்லாக இருப்பதற்குப் பின்னால் நிறைய உடற்பயிற்சி மற்றும் டயட் போன்ற கடின உழைப்பு இருக்கின்றன. இவர் பெரும்பலான இளைஞர்களுக்கு ரோல்மாடலாக இருக்கிறார்.
கிரிக்கெட் களத்தில் அவரது செயல்திறனைத் தக்கவைக்க சமச்சீரான உணவு மிகவும் முக்கியமானது. அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் அடங்கிய ஆரோக்கியமான சமச்சீரான உணவுத் திட்டத்தை அவர் பின்பற்றுகிறார்.
எம்.எஸ்தோனியின் உணவில் மெலிந்த இறைச்சி, முட்டை, மீன், பருப்புகள் மற்றும் பீன்ஸ் போன்ற அதிக புரத உணவுகள் இருக்கும். இக்கட்டுரையில் எம்.எஸ் தோனி எப்படி ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் தனது உடலை வைத்திருக்கிறார் என்பதை பற்றி காணலாம்
வீட்டில் சமைத்த உணவு
எம்.எஸ். தோனி தனது உடற்தகுதிக்கு தொடர்ந்து மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என்று கூறுகிறார். இவர் பெரும்பாலும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை சாப்பிடவே அதிகம் விரும்பிகிறார். கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை எடுத்துகொள்கிறார்.
தோனி ஒவ்வொரு நாளும் ஓட்ஸ் போன்ற தானிய கஞ்சி, பழங்கள், நட்ஸ்கள் மற்றும் ஒரு முழு கிளாஸ் பாலுடன் தனது நாளை தொடங்குகிறார். மதிய உணவிற்கு சாதம், பருப்பு மற்றும் இரவு உணவிற்கு சப்பாத்தி, புதிய காய்கறி சாலடுகள் மற்றும் பட்டர் சிக்கன் போன்றவற்றை எடுத்துக்கொள்வதாகக் கூறுகிறார்.
தோனியின் டயட்
ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும் தோனி, போதுமான ஆற்றலைப் பெற, ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் கோதுமை போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளையும் சாப்பிடுகிறார். மேலும், அவர் தனது உடலை இயங்க வைக்க ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளையும் உட்கொள்கிறார்.
புரத பானங்கள்
தோனி வொர்க்அவுட் மற்றும் பயிற்சி செய்யும்போது ஏராளமான புரத பானங்களை அருந்துகிறார். நீங்கள் உங்கள் உடற்பயிற்சி பயணத்தை அதிகரிக்க விரும்பினால், உங்கள் வொர்க்அவுட்டில் புரோட்டீன் பானங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
புரோட்டீன் பானங்கள் புரதத்தின் உயர்தர மூலத்தைப் பெற வசதியான வழியை வழங்குகிறது. அவை சேதமடைந்த தசையை சரிசெய்யவும் மீண்டும் உருவாக்கவும் உதவுகின்றன. அத்துடன் தசை வெகுஜனத்தை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவுகின்றன.
இருப்பினும், அனைவருக்கும் புரதத்தின் கூடுதல் ஆதாரம் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இறைச்சி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டைகள் நிறைந்த உணவை உட்கொள்பவர்கள் மற்றும் தீவிர எடை பயிற்சி செய்யாதவர்கள் புரத உணவுகளை அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
புதிய சாறுகள்
சோடாக்கள் மற்றும் குளிர்பானங்களை விட புதிய பழச்சாறுகளை குடிக்கவே தோனி விரும்புகிறார். சோடாக்கள் மற்றும் குளிர்பானங்களை விட புதிய சாறுகளில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை, உடலுக்கு வலுவையும் ஆரோக்கியத்தையும் சேர்க்கின்றன. தன்னை நீரேற்றமாக வைத்துக்கொள்ள விரும்பும் தோனி, ஆற்றல் சாறுகள், புரோட்டீன் ஷேக்குகள் மற்றும் அதிக தண்ணீர் குடிப்பதை எப்போதும் நாம் காணலாம்
அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்
தோனி தனது உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்ட டயட்டை பராமரித்து வருகிறார். ஆரோக்கியமான உணவு டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்துவருவதால்தான் 42 வயதிலும், வலுவான கிரிக்கெட் பிளேயராக அவர் இருக்கிறார். நல்ல உடல் வடிவத்தை பராமரிக்க மிகவும் உந்துதல் பெற்றவர். எனவே, பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை எப்போதும் தவிர்த்து விடுவார்.
பால் பொருட்கள் பிடிக்கும்
தோனிக்கு பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ரொம்ப பிடிக்கும். பால் மற்றும் தயிர் ஆகியவை அவர் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் மற்ற உணவுகள். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை அதிகம் உள்ளன.
இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்தையும் தசை வலிமையையும் பராமரிக்க உதவுகின்றன. அவை சிறந்த ஆற்றல் மூலமாகவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகின்றன.
பலர் பொறாமைப்படக்கூடிய உடலமைப்பை பெற்றிருக்கும் தோனி, அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார். அவர் தனது வலிமை, எலும்பு அடர்த்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறார். அவர் செய்யும் சில பயிற்சிகளில் டம்பல் செஸ்ட் பிரஸ், ஒன் லெக் டெட்லிஃப்ட்ஸ், வி க்ரிப் புல் டவுன் மற்றும் மெஷின் செஸ்ட் பிரஸ் ஆகியவை அடங்கும்.
நடைப்பயிற்சி மற்றும் ரன்னிங் பயிற்சியையும் அவவவ்போது மேற்கொள்வார். சிறந்த விக்கெட் கீப்பரான டோனி, களத்தில் நீண்ட நேரம் தரையில் குனிந்து இருக்க வேண்டும். இது நிச்சயமாக எளிதான வேலை அல்ல. இதற்கு குந்துகை உடற்பயிற்சியை செய்வதில் தேர்ச்சி பெற்றுள்ளார். குந்துகை பயிற்சி எடை இழப்பு, இடுப்பை வலுப்படுத்துதல், டோனிங் போன்ற பலன்களை வழங்குகிறது.
தூக்கம்
தோனியிடம் எல்லாம் பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம், அது எப்போதும் தன்னை கூல்லாகவே வைத்துக்கொள்வதுதான். ஒரு நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி தவிர, கேப்டன் தோனியை கூல்லாக வைத்துக்கொள்ள உதவுவது நல்ல தரமான தூக்கம். ஒரு நல்ல இரவு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை தோனி அறிவார். அதனால், தினமும் 7-8 மணி நேரம் தவறாமல் தூங்குகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

