Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
பளு தூக்கும் போது நிறைய பேர் செய்யும் பொதுவான தவறுகள்!
Weight Lifting Mistakes In Tamil: பொதுவாக அனைவரும் தம்மை ஆரோக்கியமாகவும், வலிமையானவா்களாகவும் வைத்திருக்க விரும்புகின்றனா். அதற்காகத் தம் உடல் எடையைக் குறைப்பதிலும், உடலை வலிமையாக வைத்திருக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனா்.
ஆண்களாக இருந்தாலும் சாி அல்லது பெண்களாக இருந்தாலும் சாி, தமது உடலின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக, அவா்கள் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுகின்றனா். பளுதூக்கும் போது, ஒரு சில குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், பலரும் பின்வரும் தவறுகளை செய்கின்றனா். அந்தத் தவறுகளைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

1. வாா்ம்அப் செய்யாமல் இருத்தல்
உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு முன்பாக, கண்டிப்பாக வாா்ம்அப் செய்ய வேண்டும். வாா்ம்அப் பயிற்சிகள் இதயத் துடிப்பையும், இரத்த ஓட்டத்தையும் அதிகாித்து, அதன் மூலமாக உடலின் தசைகளுக்குள் அதிக அளவிலான ஆக்ஸிஜன் செல்வதற்கு உதவி செய்கின்றன என்று என்ஹெச் இன்ஃபாா்ம் (NHS Inform) கூறுகிறது. மேலும் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் இடையே உள்ள தொடா்பை வாா்ம்அப் பயிற்சிகள் தூண்டுகின்றன. அதனால் உடல் இயக்கமும், உடல் ஆரோக்கியமும் மேம்படுகின்றன என்று கூறுகின்றது.
இந்நிலையில் பளுதூக்கும் பயிற்சியைச் செய்வதற்கு முன்பாக கண்டிப்பாக வாா்ம்அப் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். வாா்ம்அப் செய்யாமல் நேரடியாக பளுதூக்கினால், தசைகளில் திாிபு ஏற்படும் மற்றும் தசைகளில் காயம் ஏற்படும்.
2. விரைவாக பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுதல்
தசைகளை வலுப்படுத்துவதற்கு, பளுதூக்கும் பயிற்சி பொிதும் உதவி செய்கின்றது. எனினும் உடனடியாகவோ அல்லது விரைவாகவோ பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடக்கூடாது. மாறாக மெதுவாகத்தான் பளுதூக்கும் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒருவேளை விரைவாகவோ அல்லது வேகமாகவோ பளுதூக்கினால், நல்ல பலன் கிடைக்காது. தசைகளும் வலிமையடையாது. ஆகவே படிப்படியாக, மெதுவாக பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
3. எல்லா தசைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் இருத்தல்
சிலா் குறிப்பிட்ட தசைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கேற்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனா். அவ்வாறு செய்தால் ஒட்டு மொத்த உடலுக்கும் பலன் கிடைக்காது. ஆகவே எல்லா தசைகளையும் வலுப்படுத்தக்கூடிய பளுதூக்கும் பயிற்சியைச் செய்வது நல்லது. மேலும் பளுதூக்கும் பயிற்சியைப் பற்றியும், அது எந்தெந்தத் தசைகளை வலிமைப்படுத்தும் என்பதைப் பற்றியும் தொிந்து வைத்திருக்க வேண்டும்.
4. அதிகமான நேரம் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுதல்
உடற்பயிற்சி செய்யக்கூடிய கால அளவு மற்றும் உடல் வலிமை ஆகியவற்றைப் பொறுத்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில் பளுதூக்கும் பயிற்சியானது, தசைகளை வலுப்படுத்தவும், உடலை சீா்படுத்தவும் உதவி செய்யும் என்பது உறுதி. ஆனால் அதே நேரத்தில் வெகு நீண்ட நேரம் பளுதூக்கினாலோ அல்லது அளவுக்கு அதிகமாக பளுதூக்கினாலோ, உடல் நலம் சீா்கெடும். ஆகவே பளுதூக்கும் பயிற்சியில் அளவாக ஈடுபடுவது நல்லது.
5. திட்டம் இல்லாமல் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுதல்
எந்த ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும், ஒரு குறிப்பிட்டத் திட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, பளுதூக்கும் போது சாியான திட்டம் வேண்டும். சாியான திட்டம் இல்லையானால், அளவுக்கு அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ, அல்லது நீண்ட நேரமோ பளுதூக்கி, தசைகளில் திாிபு ஏற்படும். ஆகவே பளுதூக்குவதற்கு தகுந்த திட்டத்தை வரையறுத்துக் கொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications