Latest Updates
-
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
இந்த 5 உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க.. அப்புறம் உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க..
Morning Healthy Food In Tamil: கொரோனா பரவலுக்கு பின் நிறைய பேர் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மேல் அதிக அக்கறை கொள்கிறார்கள். இதற்காக பலவிதமான ஆரோக்கியமான உணவுகளை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். ஒருநாளில் காலை உணவு மிகவும் இன்றியமையாதது. அதுவும் காலை உணவிற்கு முன் ஒருசில உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
ஏனெனில் வெறும் வயிற்றில் சில சத்தான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதோடு நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்பாக செயல்படவும் உதவுகிறது.

தற்போது இணையத்தில், குறிப்பாக இன்ஸ்டாவில் ஏராளமான ஊட்டச்சத்து நிபுணர்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அதில் ஊட்டச்சத்து நிபுணரான சாக்ஷி லால்வானி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அது என்னவென்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. ஜாதிக்காய் பொடி
காலையில் வெறும் வயிற்றில் ஜாதிக்காய் பொடியை உட்கொள்ளும் போது, உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதுவும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு மில்லிகிராம் ஜாதிக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வரும் போது, மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜாதிக்காய் பொடியை கர்ப்பிணிப் பெண்கள் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அதேப் போல் ஒரே நாளில் அளவுக்கு அதிகமாகவும் ஜாதிக்காய் பொடியை உட்கொள்ளக்கூடாது.
2. உலர்ந்த அத்திப்பழம்
அத்திப்பழத்தில் இரும்புச்சத்து, ஃபோலேட், நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இது தவிர வைட்டமின்கள், கனிமச்சத்துக்களான பொட்டாசியம், கால்சியம் போன்றவைகளும் இதில் அதிகமாக உள்ளன.
இந்த உலர்ந்த அத்திப்பழத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த உலர்ந்த அத்திப்பழத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விடுபடலாம். இது ஹீமோகுளோபின் அளவை சட்டென்று அதிகரிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி தெரிவித்துள்ளார்.
3. வெந்தயம் மற்றும் இஞ்சி
வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்துவதிலும் சிறந்தது. அதே சமயம் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும்.
இப்படிப்பட்ட வெந்தயம் மற்றும் இஞ்சியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ-க்கு பதிலாக குடித்து வந்தால், அசிடிட்டி பிரச்சனையே வராது. குடலியக்கமும், செரிமான செயல்பாடும் சிறப்பாக நடைபெறும்.
4. ஹலீம் விதைகள்
ஹலீம் விதைகளில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற எலும்புகள் மற்றும் இரத்தத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கூடுதலாக ஹலீம் விதைகளில் உள்ள மருத்துவ பண்புகள், சுவாச மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இப்படிப்பட்ட ஹலீம் விதைகளை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால், உயர் இரத்த சர்க்கரை அளவு சட்டென்று குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறையும் என ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி கூறியுள்ளார்.
5. கொள்ளு பவுடர்
கொள்ளு பவுடர் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு. மேலும் இந்த கொள்ளு பவுடர் செரிமான பிரச்சனைகளையும் போக்கக்கூடியது.
நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவராயின், இந்த கொள்ளு பவுடரை உட்கொள்வது நல்லது. அதுவும் இந்த கொள்ளு பவுடரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை சட்டென்று சரியாவதோடு, வேறு எவ்வித குடலியக்க பிரச்சனைகளும் ஏற்படாது என்று ஊட்டச்சத்து நிபுணர் சாக்ஷி லால்வானி தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications