Latest Updates
-
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம்
எச்சரிக்கை! மீண்டும் கே.எப்.சி சிக்கனில் புதிய கலப்படம் கண்டுபிடிப்பு... அதுவும் தமிழ்நாட்டில் தானாம்...
Magnesium Silicate Found In KFC Chicken: சமீப காலமாக கடைகளில் விற்கப்படும் உணவுகளில் கலப்படம் அதிகம் செய்யப்படுவதாக செய்தி வந்தவாறு உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள வேலவன் ஹைப்பர் மார்கெட் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபலமான கே.எப்.சி சிக்கன் கடையில் மக்னீசியம் சிலிகேட் சிந்தெடிக் பயன்படுத்தப்பட்டு வந்ததையடுத்து, தூத்துக்குடி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, கடையின் உரிமத்தை ரத்த செய்துள்ளனர்.
உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு சிக்கன் தான் கே.எப்.சி சிக்கன். இந்த சிக்கன் கடை இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். ஏனெனில் இந்த சிக்கனுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. முக்கியமாக இன்றைய தலைமுறையினர் அதிகம் சாப்பிடக்கூடியது இந்த கே.எப்.சி சிக்கனைத் தான். இந்த சிக்கன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், அதன் ருசியால் மக்கள் அதை கண்டு கொள்ளாமல் இன்று வரை உட்கொண்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூத்துக்குடியில் உள்ள கே.எப்.சி சிக்கன் கடையில், சிக்கனைப் பொரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயில் மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்ற கெமிக்கல் கலப்பது தெரிய வந்துள்ளது. அதுவும் இந்த கெமிக்கலானது கெட்டுப் போன எண்ணெய் சுத்திகரிக்க பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது இந்த கடையில் இருந்து 18 கிலோ மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக், 45 லிட்டர் கெட்டுப்போன சமையல் எண்ணெய் மற்றும் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக பயன்படுத்தாமல் வைத்திருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்றால் என்ன? இது எங்கு பயன்படுத்தக்கூடியது, இதை உட்கொள்வதால் எந்த மாதிரியான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதை இப்போது காண்போம்.
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்றால் என்ன?
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் என்பது ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் ஒரு ஆபத்தான கனிம பொருளாகும். இது வெள்ளை நிறத்தில், மணம் ஏதும் இல்லாமல் இருக்கும். முக்கியமாக இது நீரில் எளிதில் கரைந்துவிடும். இந்தியாவில் உணவுப் பொருட்களில் இதன் பயன்பாடு FSSAI ஆல் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மக்னீசியம் சிலிகேட் மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நீண்ட காலமாக கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பயன்படுகிறது.
உணவுகளில் எதனால் பயன்படுத்தப்படுகிறது?
மக்னீசியம் சிலிகேட் உணவுகளை மொறுமொறுப்பாக வைத்திருக்கும் என்பதால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுகள் ஒன்றாக ஒட்டிக் கொள்வதைத் தடுக்கவும், உணவின் அமைப்பை பராமரிக்கவும், இந்த கெமிக்கல் அடிக்கடி உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இந்த மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் உலகெங்கிலும் பல பகுதிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படடாலும், இந்தியாவில் மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக்கை பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த கெமிக்கலை மிகச்சிய அளவில் உணவில் பயன்படுத்தினால் பாதுகாப்பானது, ஆனால் அதிகமாக பயன்படுத்தினால், ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கை விளைவிக்கும்.
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்?
மக்னீசியம் சிலிகேட் சிந்தடிக்கை அதிகமாக பயன்படுத்தினால் அது ஆரோக்கியத்தை அழித்துவிடும். அதுவும் இதை சுவாசித்தால் சுவாசக்குழாயில் அழற்சி ஏற்படலாம். இதன் விளைவாக இருமல், தொண்டை புண், முச்சுத்திணறல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். அதிகளவில் உட்கொள்ளும் போது குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
குறிப்பு: என்ன தான், இந்த நிகழ்வு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் கிளைகள் அதிகம் உள்ளன. எங்கு எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே மக்களே! உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், கடைகளில் விற்கப்படும் உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து, முடிந்த வரை வீட்டிலேயே வேண்டியதை சமைத்து சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
