Latest Updates
-
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்!
நைட் நேரத்தில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா.. உங்க கிட்னி பெரிய ஆபத்துல இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
Kidney Damage Symptoms In Tamil: நமது உடலில் சிறிதும் ஓய்வெடுக்காமல் நாள்முழுவதும் வேலை செய்யக்கூடிய உறுப்பு என்றால், அது சிறுநீரங்கள் தான். இந்த சிறுநீரகங்கள் நமது உடலில் இருந்து நச்சுக்களையும், கழிவுகளையும் வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முக்கியமான வேலையை செய்கின்றன.
அதுவும் சிறுநீரகங்கள் நமது ஒரு நாளைக்கு சுமார் 50 கலோன்கள் இரத்தத்தை வடிகட்டுகிறது, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துகிறது, கழிவுகளை வெளியேற்றுகிறது மற்றும் முக்கியமான ஹார்மோன்களை உருவாக்குகிறது.

இவ்வளவு முக்கியமான வேலைகளை செய்யும் சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். அதுவும் அந்த அறிகுறிகள் நாம் தினமும் சந்திக்கும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், பலர் இந்த அறிகுறிகளை கவனிக்காமல் புறக்கணிக்கலாம்.
சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 90 சதவீத மக்கள் முற்றிய நிலையில் தான் இந்த பிரச்சனையை கண்டறிந்து சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஆரம்பத்திலேயே சிறுநீரகங்களில் இருக்கும் பிரச்சனையை அறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அவற்றை முழுமையாக குணப்படுத்திவிடலாம்.
பெரும்பாலும் சிறுநீரகங்களில் பிரச்சனை இருந்தால், அதன் அறிகுறிகள் இரவு நேரத்தில் அதிகமாக தெரியும். இப்போது சிறுநீரகங்கள் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து காண்போம்.
1. இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தால், அதை பலரும் சர்க்கரை நோயின் அறிகுறியாக கருதலாம். ஆனால் இப்படி சிறுநீர் கழிப்பது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதன் அறிகுறியாக இருக்கலாம். சொல்லப்போனால் சிறுநீரக நோயின் ஆரம்ப கால அறிகுறியே இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீரைக் கழிப்பது ஆகும். சிறுநீரகங்கள் சேதமடைந்து இருக்கும் போது, அவற்றால் சிறுநீரை குவிப்பதில் சிரமப்படலாம். இதனால் சிறுநீர் உற்பத்தி அதிகரித்து, இரவு நேரத்தில் தூங்க முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
2. தூங்குவதில் சிரமம்
நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தால், அது இரவு நேரத்தில் தூங்கவிடாமல் சிரமப்படுத்தும் அதுவும் கால் தசைப்பிடிப்பு, அரிப்பு போன்றவற்றை சந்தித்து, அதன் விளைவாக தூங்க முடியாமல் அவதிப்படக்கூடும். இறுதிகட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80% வரை தூக்கப் பிரச்சனைகளை அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
3. தூக்கத்தில் மூச்சுத்திணறல்
தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனையானது நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்பது தூக்கத்தின் போது காற்றுப்பாதையில் பகுதியளவு அல்லது முழுமையான அடைப்பு மீண்டும் மீண்டும் ஏற்படுவதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, அதன் விளைவாக தூக்கம் பாதிக்கப்படுகிறது.
4. தசைப்பிடிப்பு
உடலில் கால்சியம் குறைவாகவும், பாஸ்பரஸ் அதிகமாகவும் இருந்தால், அதன் விளைவாக இரவு நேரங்களில் கடுமையான தசைப்பிடிப்பால் அவதிப்படக்கூடும். இப்படியான தசைப்பிடிப்புகள் சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
5. வீக்கம்
சிறுநீரங்களின் செயல்பாடு குறையும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக பாதங்கள், கணுக்கால் போன்ற பகுதிகளில் வீக்கத்தை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த வீக்கம் இரவு நேரங்களில் தான் அதிகமாக காணப்படும்.
6. தோல் அரிப்பு
சரும வறட்சி மற்றும் அரிப்பு போன்றவற்றை ஒருவர் அதிகமாக சந்தித்தால், அதை சாதாரணமாக ஒருவர் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இது சிறுநீரங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கும் போது, ரத்தத்தில் நச்சுக்கள் குவிந்தாலும் இப்படியான அரிப்புக்களை சந்திக்கலாம். மேலும் இந்த அரிப்பு இரவு நேரத்தில் தீவிரமாக இருந்து, தூக்கத்தை பாதிக்கும்.
7. இரவு நேர உயர் இரத்த அழுத்தம்
ஆரோக்கியமான ஒருவருக்கு இரவு நேரத்தில் உயர் இரத்த அழுத்தத்தை சந்தித்தால், அந்நபரின் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே திடீரென்று இரவு நேரத்தில் அசாதாரண இரத்த அழுத்த அளவை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
8. சுவாசிப்பதில் சிரமம்
சுவாசிப்பதில் சிரமம் என்றாலே பலரும் நுரையீரல் பிரச்சனையாக மட்டும்மே இருக்க முடியும் என்று நினைக்கலாம். ஆனால் சிறுநீரக செயல்பாடு பலவீனமடைவதால் நுரையீரலில் திரவம் குவிந்து, சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த அறிகுறியை சந்தித்தால் கவனமாக இருங்கள்.
9. வாய் துர்நாற்றம்
இரத்தத்தில் நச்சுக்கள் அதிகமாக குவியும் நிலையை யுரேமியா என்று அழைப்பர். இந்த நிலையில் வாயில் உலோகச் சுவையும், வாயில் ஒருவித அம்மோனியாவின் துர்நாற்றமும் வீசும். இந்த அறிகுறியுடன், பசியின்மையும் இருந்தால், சிறுநீரகங்களில் பெரிய பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications