Latest Updates
-
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
உங்களுக்கு ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோய் வரமால் தடுக்க... ஜப்பான் டயட் சொல்லும் இந்த உணவுகள சாப்பிடுங்க!
Japanese Diet In Tamil: கொழுப்பு கல்லீரல் நோய் என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சுகாதார நிலை. சில நேரங்களில் இது மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சமீபத்திய ஆய்வில், ஜப்பானிய உணவுமுறை கொழுப்பு கல்லீரல் நோயின் வளர்ச்சியை மெதுவாக்கும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது.
பல நாடுகளில் ஜப்பானிய உணவுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது உடல் மற்றும் சருமம் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை மக்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில், ஜப்பானிய உணவுமுறை கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகுவதை தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மூன்று முக்கிய உணவுகள் உள்ளன.

உடல் பருமன், உடல் செயல்பாடு இல்லமால் இருப்பது, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் காரணமாக இந்தியாவில் கொழுப்பு கல்லீரல் நோய் அதிகரித்து வருகிறது. கூடுதலாக, ஸ்டெராய்டுகள் போன்ற சில மருந்துகள், கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஜப்பானிய உணவு முறை
ஜப்பானிய உணவுமுறையானது காய்கறிகள், அரிசி, மீன் மற்றும் கடற்பாசி ஆகியவற்றை அதிக அளவில் உட்கொள்வது. அதேநேரம் விலங்கு புரதங்கள் மற்றும் கொழுப்புகளை குறைவாக உட்கொள்வது ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம், உங்கள் கல்லீரல் ஆரோக்கியமாக செயல்படும்.
ஜப்பானிய உணவில் அரிசி, மிசோ சூப், ஊறுகாய், சோயா பொருட்கள், பச்சை மற்றும் மஞ்சள் காய்கறிகள், பழங்கள், கடல் உணவுகள், காளான்கள், கடற்பாசி, கிரீன் டீ, காபி மற்றும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற 12 உணவுகள் மற்றும் உணவுக் குழுக்கள் உள்ளன.
ஜப்பானிய உணவில் நார்ச்சத்து அதிகமாகவும், நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இது கொழுப்பு கல்லீரல் நோயின் முன்னேற்றத்தைக் குறைப்பதற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, இந்திய மக்கள் கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
கொழுப்பு கல்லீரல் நோய்க்கான ஜப்பானிய உணவுமுறை
கொழுப்பு கல்லீரல் நோயை நிர்வகிப்பதற்கான மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வது. சோயா உணவுகள், கடல் உணவுகள் மற்றும் கடற்பாசி ஆகியவை கல்லீரலின் ஃபைப்ரோஸிஸின் வளர்ச்சியைக் குறைப்பதில் மிகவும் வலுவாக தொடர்புடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொழுப்பு கல்லீரல் நோயைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் ஜப்பானிய உணவைத் தொடங்க உங்களுக்கு உதவும் சில குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான கொழுப்பு உட்கொள்ளல்
ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளின் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். கொழுப்பு கல்லீரல் நோய் உடலில் அதிகளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துவது முக்கியம். ஆலிவ் எண்ணெய், அவகோடா, நட்ஸ்கள் போன்ற உணவுகளையும், சால்மன் மற்றும் டுனா போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களையும் தேர்வு செய்ய வேண்டும்.
கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைக்க வேண்டும்
எளிய கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். வெள்ளை ரொட்டி மற்றும் சர்க்கரை தின்பண்டங்கள் போன்ற எளிய கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை அதிகரிக்கும். உங்கள் ஆபத்தை குறைக்க, இந்த வகையான உணவுகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளுடன் அவற்றை மாற்றவும்.
தாவர அடிப்படையிலான உணவுகள்
தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் உண்ணுங்கள். தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். உங்கள் உணவில் அதிக காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த உணவுகளில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
புளித்த உணவுகள்
உங்கள் உணவில் புளித்த உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். புளித்த உணவுகளான மிசோ, நாட்டோ, கிம்ச்சி போன்றவை உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவும் புரோபயாடிக்குகள் நிறைந்தவை. அவை உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க உதவும் பயனுள்ள நொதிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.
கிரீன் டீ
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கிரீன் டீயை நீங்கள் தினமும் அருந்த வேண்டும். கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் வரை கிரீன் டீ குடிக்கலாம். மேலும், இது கொழுப்பு கல்லீரல் வருவதற்கு காரணமாக இருக்கும் உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவுகிறது.
இறுதிக் குறிப்பு
கொழுப்பு கல்லீரல் நோயை நிர்வகிப்பதில் உங்கள் உணவில் மாற்றங்கள் ஒரு முக்கிய பகுதியாகும். நோயின் வளர்ச்சியைக் குறைக்க சோயா உணவுகள், கடல் உணவுகள் மற்றும் கடற்பாசி ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பராமரிப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
