Latest Updates
-
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம்
இரவு நேரத்தில் சாதம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? - உண்மை என்ன?
Rice At Night In Tamil: சாதம் இந்தியாவின் மிகவும் முக்கியமான உணவாகும். இந்திய மக்களால் சாதம் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சாதத்தை சாப்பிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பசி அடங்காது. அப்படிப்பட்ட சாதத்தை பெரும்பாலும் மதிய வேளையில் தான் சமைத்து சாப்பிடுவோம்.
ஒருவேளை மதியம் சமைத்த சாதம் மீந்து போனால், அதை இரவு நேரத்தை வைத்து சாப்பிடுவோம். ஆனால் இரவு நேரத்தில் சாதம் சாப்பிடக்கூடாது என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. அது உண்மை தானா? எதனால் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடக்கூடாது என்பதற்கான உண்மையான காரணத்தை இக்கட்டுரையில் காண்போம்.

சாதத்தில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன மற்றும் இவை எளிதில் உடைந்து ஜீரணமாகிவிடும். அதனால் சாதம் மிகவும் நல்லது என்று நினைத்துவிட வேண்டாம். சாதமானது எளிதில் உடைந்துவிடுவதால், இது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். அதனால் தான் சாதத்தை உண்ட பின் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது.
அதே சமயம் சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. இந்த கார்போஹைட்ரேட்டுகள் உடலால் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது உடலில் கொழுப்புக்களாக தேங்கி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
இப்படிப்பட்ட சாதத்தை பகல் வேளையில் உட்கொண்டால், உடல் செயல்பாடுகளால் கொழுப்புக்களாக தேங்காமல் இருக்கும். அதையே இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும்.
அதுவும் இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடும் போது, அது எளிதில் ஜீரணிக்கப்பட்டு, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. அதன் பின் சில மணிநேரங்களில் மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து, பசியுடனேயே இருப்பதால் இரவு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் போகும்.
சாதம் எளிதில் ஜீரணமாவதால், நிறைய பேர் சாதம் ஒரு சிறந்த இரவு நேர உணவாக நினைக்கிறார்கள். ஆனால் இரவு நேரத்தில் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது தான் நல்லது. எனவே இரவு நேரத்தில் சாதத்தை சாப்பிடுவதற்கு பதிலாக சப்பாத்தியை சாப்பிடுங்கள்.
இதனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைப்பதுடன் பிற ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். அதுவும் முழு கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அது ஜீரணமாக நேரமாகும். இதனால் இரவு முழுவதும் பசியும் எடுக்காது, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
சிலருக்கு சப்பாத்தி ஆகாது. அத்தகையவர்கள் சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு பதிலாக, சாலட் மற்றும் சூப்புகளை உட்கொள்ளலாம். ஆனால் இந்திய உணவுகளை சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், சாதத்தை விட சப்பாத்தியை சாப்பிடுங்கள். முக்கியமாக சாதத்தில் கைக்குத்தல் அரிசி சாதத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாம். ஏனெனில் இந்த சாதம் ஜீரணமாக நேரம் எடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவும் சட்டென அதிகரிக்காது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
