Latest Updates
-
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன?
சர்க்கரை நோயாளிகளுக்கு சிக்கன் நல்லதா? கெட்டதா? எப்படி சமைத்து சாப்பிடணும்?
Diabetes And Chicken: உலகில் உள்ள மொத்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் 17 சதவீத நோயாளிகள் இந்தியாவில் இருப்பதால், உலகின் நீரிழிவு தலைநகரமாக இந்தியா குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்தியாவில் 80 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2045-க்குள் இந்த எண்ணிக்கை 135 மில்லியனாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இது உடலால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியாத போது ஏற்படுகிறது. கணையத்தால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் போனாலோ அல்லது உடல் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாமல் போனாலோ இந்நிலை ஏற்படலாம்.

இப்படிப்பட்ட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இத்தகையவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அது நேரடியாக உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது அது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, திடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் பலரது மனதில் இருக்கும் ஒரு கேள்வி சிக்கன் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா, கெட்டதா என்பதாகும். இதில் பெரும்பாலானோர் சிக்கன் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதாக கருதப்படுகிறது. ஆனால், இது உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதையா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சிக்கன் ஆரோக்கியமானதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, சிக்கனை சரியான முறையில் சமைத்து சாப்பிடும் போது சர்க்கரை நோயாளிகளுக்கு அது ஆரோக்கியமானதாகவும், புரோட்டீன் நிறைந்த உணவாகவும் இருக்கும். முக்கியமாக இறைச்சிகளிலேயே சிக்கன் தான் மெலிந்த புரோட்டீனின் சிறந்த ஆதாரமாகும். இது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது மற்றும் இதில் கார்போஹைட்ரேட்டும் குறைவு. இதில் உள்ள கொழுப்பு பற்றி நீங்கள் கேட்கலாம்.
கொழுப்பு பற்றி கூற வேண்டுமானால், சிக்கனை நீங்கள் எப்படி சமைக்கிறீர்களோ, அதைப் பொறுத்து தான் உள்ளது. அதுவும், சிக்கனை ஆவியில் வேக வைத்தோ, க்ரில் செய்தோ, பேக்கிங் செய்தோ சாப்பிடும் போது, அதில் உள்ள கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இது தவிர, சிக்கனை தோல் நீக்கிவிட்டு சாப்பிடுவது தான் இன்னும் நல்லது. ஏனெனில் இந்த மாதிரியான சிக்கனில் தான் கொழுப்புகள் குறைவாக இருக்கும் மற்றும் அது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகள் சிக்கனை எப்படியெல்லாம் சமைத்து சாப்பிடலாம் ?
சர்க்கரை நோயாளிகள் சிக்கனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, க்ரில்டு தந்தூரி சிக்கன், சிக்கன் மற்றும் வெஜிடேபிள் பிரியாணி, சிக்கன் கபாப், சிக்கன் தால், பேக்டு சிக்கன் கட்லெட், சிக்கன் புலாவ் என்று செய்து சாப்பிடுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
