Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்களுக்கு பீரியட் பிரச்சனை இருக்கா? அப்ப இந்த உணவுகளை அதிகமா சாப்பிடுங்க சரியாயிடும்...
Irregular Periods: ஒரு பெண்ணிற்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நிகழும். ஆனால் இது ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடும். சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது அடிக்கடி ஒரு வாரத்திற்கு மேல் தாமதமாக இருந்தால், அப்பெண் ஒலிகோமெனோரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதை ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என்று அழைப்பர்.
ஒரு பெண்ணிற்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியானது பல காரணங்களால் ஏற்படலாம். அதில் மோசமான உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, பிசிஓடி மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுமட்டுமின்றி, தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை மற்றும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் போன்றவையும் இப்பிரச்சனைக்கு காரணங்களாக உள்ளன.

பெண்கள் சந்திக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்க ஒருசில உணவுகள் உதவி புரிகின்றன. அந்த உணவுகளை அடிக்கடி உட்கொண்டு வந்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.
இஞ்சி
சளி முதல் அஜீரண கோளாறு வரை, பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த ஒரு உணவுப் பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சியில் வைட்டமின் சி மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் இருப்பதால், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சியை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அதுவும் இஞ்சி டீ தயாரித்து குடித்து வந்தால, அது மிகவும் நல்லது. இதனால் கருப்பை சுருங்கி மாதவிடாய் சுழற்சி ஏற்பட உதவும்.
பப்பாளி
பப்பாளியை பெண்கள் வழக்கமாக உட்கொண்டு வந்தால், அது கருப்பை தசையில் சுருக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. பப்பாளி உடலில் வெப்பத்தை அதிகரிப்பதோடு, இதில் உள்ள கரோட்டீன், உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது. எனவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்திக்கும் பெண்கள் பப்பாளியை தினசரி உணவில் சேர்த்து வர முயற்சி செய்து, நற்பலனைப் பெறுங்கள்.
அன்னாசி
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதிப் பொருள் உள்ளன. இது கருப்பை சுவரின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இந்த புளிப்புச் சுவையைக் கொண்ட அன்னாசிப் பழம் இரத்த வெள்ளை மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும் மற்றும் மாதவிடாய் சுழற்சியும் ஒழுங்காக நடைபெறும்.
சீரகம்
சீரகத்தில் உள்ள உட்பொருட்கள் கருப்பை தசைகளை சுருங்கச் செய்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். எனவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியைக் கொண்ட பெண்கள் தினமும் இரவு ஒரு கப் நீரில் 2 டீஸ்பூன் சீரகத்தை ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை குடிக்க வேண்டும். இப்படி சில மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சோம்பு
சோம்பு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி நடக்கும் பெண்களுக்கான ஒரு அருமருந்து. இது ஹார்மோன்களை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, ஓவுலேசனை ஊக்குவிக்கிறது. மேலும் இது மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அதற்கு 2 டீஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அந்நீரை தினமும் இரண்டு வேளை தொடர்ந்து குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications