Latest Updates
-
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு பால் கொழுக்கட்டை - ஈஸியா எப்படி செய்யணும்? -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் நிகழப்போகும் ஆபத்தான மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? -
ஒரு கையளவு உப்புக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்!' -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி பால் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - தித்திப்பா சூப்பரா இருக்கும் -
ஆடி மாதத்தில் ஏன் திருமணம் செய்யப்படுவதில்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
சனி-செவ்வாயால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இன்னும் 2 நாட்களில் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அவல் குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம் தேடிவரப்போகுதாம்
International Tea Day: டீ குடிக்கும் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து!
International Tea Day: உலகம் முழுவதும் தண்ணீருக்குப் பிறகு அதிக மக்களால் நுகரப்படும் பானமென்றால் அது தேநீர்தான். மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்த இந்த பானத்தை சிறப்பிக்கும் வகையில் மே 21 அன்று உலகளவில் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது. தேநீர் உற்சாகத்தை அளிக்கும் பானமாக இருந்தாலும் சிலர் அதனை வெறும் தேநீராக குடிப்பதில்லை, சில உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

தேநீருடன் சாப்பிடுவதற்கு எண்ணற்ற உணவுகள் உள்ளன, ஆனால் அந்த அனைத்து உணவுகளும் ஆரோக்கியமானதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும். தேநீர் உற்சாகத்தை அளிக்கும் பானமாக இருக்கும் அதேவேளையில் ஆரோக்கியமான பானமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட உணவுகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்தைக் குறைக்கும். இந்த பதிவில் தேநீருடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பால் பொருட்கள்
பால், சீஸ் அல்லது தயிர் போன்ற பால் பொருட்களுடன் தேநீரை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக்கூடாது. பிளாக் டீயில் பால் சேர்ப்பது பல கலாச்சாரங்களில் பொதுவானது என்றாலும், பாலில் உள்ள புரதங்கள் தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களுடன் இணைந்து, அதன் ஆரோக்கிய நன்மைகளைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. தேநீரில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களான கேடசின்கள், பால் சேர்க்கப்படும் போது குறைவான பலனைத் தரலாம்.
காரமான உணவுகள்
டீ குடிக்கும் போது பஜ்ஜி, வடை போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமானதாகும். ஆனால் இதுபோன்ற காரமான பொருட்களுடன் தேநீர் பருகுவது மிகவம் ஆபத்தானது என்று ஆய்வு கூறுகிறது. காரமான அல்லது மசாலாப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் தேநீரின் சுவைகளைப் பாதிக்கலாம்.
கார உணவுகளில் உள்ள கேப்சைசின் சுவை மொட்டுக்களை அதிகமாகத் தூண்டி, தேநீரின் சுவையை அனுபவிப்பதைக் கடினமாக்குகிறது. மேலும் காரமான உணவுகள் தேநீரில் உள்ள டானின்களுடன் இணைந்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களுடன் ஒருபோதும் தேநீரை எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த பழங்களின் அதிக அமிலத்தன்மை தேநீரில் உள்ள டானின்களுடன் குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம், இதன் விளைவாக கசப்பான சுவை ஏற்படும். மேலும், சிட்ரஸ் பழங்கள் வயிற்றில் உள்ள pH சமநிலையை மாற்றும், இது வயிற்றில் அசௌகரியத்தையும், நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும்.
சாக்லேட்
சாக்லேட் பலரும் விரும்பும் பொருளாக இருந்தாலும், அதனை தேநீருடன் எடுத்துக் கொள்வது என்பது ஆபத்தானது. சாக்லேட்டின் தீவிரமான சுவை குறிப்பாக டார்க் சாக்லேட் போன்றவை தேநீரின் சுவையை மறக்கடிக்கலாம். சாக்லேட் மற்றும் தேநீர் இரண்டிலுமே காஃபின் உள்ளதால், அது அதிக காஃபின் உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். இதனால் நடுக்கம் அல்லது தூக்கம் தொந்தரவுகள் ஏற்படலாம்.
மேலும் தேநீரில் உள்ள டானின்கள் மற்றும் சாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் ஆகியவை இணையும்போது இந்த கலவையானது விரும்பத்தகாத துவர்ப்பு சுவையை உருவாக்கலாம்.
இறைச்சி
தேநீர் அருந்தும்போது மட்டன் போன்ற வலுவான சுவையுள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். இந்த இறைச்சிகளின் தீவிர சுவைகள் மற்றும் அதிக கொழுப்பு உள்ளடக்கம் தேநீரின் சுவையைப் பாதிக்கலாம். இந்த இறைச்சிகளின் கொழுப்பு அளவானது தேநீரின் காஃபைன் உள்ளடக்கத்துடன் இணையும்போது அது பொருந்தா கூட்டணியாக இருக்கும்.
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயம், பல சுவையான உணவுகளுக்கு இன்றியமையாதவை என்றாலும், தேநீருடான் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. அவற்றின் காரமான மற்றும் நீடித்த சுவைகள் தேநீரின் மென்மையான மற்றும் நறுமணத்தை மாற்றி, சமநிலையற்ற சுவை அனுபவத்திற்கு வழிவகுக்கும். பூண்டு மற்றும் வெங்காயத்தின் வலுவான சுவை நீண்ட நேரம் சுவை மொட்டுகளில் நீடிக்கலாம், இதனால் தேநீரின் குடிப்பது மோசமான அனுபவமாக மாறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
