Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 'ஒரு' விஷயத்தை ஃபாலோ பண்ணா போதுமாம்... உங்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராதாம்!
உலகெங்கிலும் உள்ள மக்களின் மரணத்திற்கு மிகவும் முக்கியமான காரணமாக இதய நோய்கள் இருக்கின்றன. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள மக்களின் மரணத்திற்கு மிகவும் முக்கியமான காரணமாக இதய நோய்கள் இருக்கின்றன. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டிருக்க வேண்டும்.
இதய ஆரோக்கியத்திற்கு இடைப்பட்ட உண்ணாவிரதம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது முதல் சகிப்புத்தன்மையை உருவாக்குவது வரை, பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

இடைப்பட்ட உண்ணாவிரதம்(Intermittent fasting) என்பது வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக சாப்பிடாமல் தவிர்ப்பது.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்கள், இடைப்பட்ட உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறார்கள். இது மிகவும் பிரபலமானது. ஆதலால், பாரம்பரிய முறையை விட இந்த உண்ணாவிரதத்தை மக்கள் அதிகமாக கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும், அதிகரித்து வரும் மாரடைப்பு வழக்குகளின் எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுகிறது.
மேலும், நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், சரியாக சாப்பிட்டாலும், இதய நோய்கள் மக்களின் மரணத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது. உங்கள் கலோரி எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஆரோக்கியமான இதயத்திற்கும் உண்ணும் உணவிற்கும் நிறைய தொடர்புள்ளது.
இதய நோயை ஏற்படுத்தும் இரண்டு முக்கிய காரணிகளாக சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு நம் உடல் பதிலளிக்கும் விதத்தை இடைப்பட்ட உண்ணாவிரதம் மேம்படுத்த உதவும். இந்த இன்சுலின் தான் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொதுவாக, இடைவிடாத உண்ணாவிரதம் சூரியன் மறையும் போது சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது. மாலை 6 முதல் 8 மணி வரை, மற்றும் ஓய்வு நிலையில் இருக்கும்போது உடலை மீட்டெடுக்க அனுமதிக்கிறது. அறிவியலின் படி, இடைப்பட்ட உண்ணாவிரதம் பெரும்பாலும் உணவுப் போக்காகப் பின்பற்றப்படுகிறது, ஆனால் இந்த வகையான உணவு முறை இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இடைவிடாத உண்ணாவிரதம் மாரடைப்பு மற்றும் இருதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் அறிகுறிகளை குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உணவு முறை இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.
இடைப்பட்ட உண்ணாவிரதத்தை முயற்சிக்க விரும்புபவராக நீங்கள் இருந்தால், 12 மணிநேர உண்ணாவிரதத்துடன் மெதுவாகத் தொடங்குங்கள். புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை சாபபிடுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். கர்ப்பமாக இருப்பவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு தேர்வுகளை அனுமதிக்கும் எந்தவொரு முறையும் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும் சாப்பிடுவது மற்றும் கலோரிகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இடைப்பட்ட உண்ணாவிரதம் மிகவும் நிலையானது மற்றும் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகளவில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதால், இடைப்பட்ட உண்ணாவிரத உணவுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், உணவு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் மற்ற நன்மைகள்
உங்கள் எடை இழப்புக்கு உதவுதல், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைத்தல், மேம்பட்ட இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது போன்றவை இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் பிற நன்மைகள். மேலும், இது உடல் செயல்திறன் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
உலகெங்கிலும் உள்ள மக்களின் மரணத்திற்கு மிகவும் முக்கியமான காரணமாக இதய நோய்கள் இருக்கின்றன. இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டிருக்க வேண்டும்.
இதய ஆரோக்கியத்திற்கு இடைப்பட்ட உண்ணாவிரதம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பது முதல் சகிப்புத்தன்மையை உருவாக்குவது வரை, பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இடைப்பட்ட உண்ணாவிரதம்(Intermittent fasting) என்பது வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக சாப்பிடாமல் தவிர்ப்பது.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்கள், இடைப்பட்ட உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறார்கள். இது மிகவும் பிரபலமானது. ஆதலால், பாரம்பரிய முறையை விட இந்த உண்ணாவிரதத்தை மக்கள் அதிகமாக கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும், அதிகரித்து வரும் மாரடைப்பு வழக்குகளின் எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுகிறது. மேலும், நீங்கள் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், சரியாக சாப்பிட்டாலும், இதய நோய்கள் மக்களின் மரணத்திற்கு முக்கிய காரணியாக உள்ளது. உங்கள் கலோரி எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஆரோக்கியமான இதயத்திற்கும் உண்ணும் உணவிற்கும் நிறைய தொடர்புள்ளது.
இதய நோயை ஏற்படுத்தும் இரண்டு முக்கிய காரணிகளாக சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இன்சுலின் என்ற ஹார்மோனுக்கு நம் உடல் பதிலளிக்கும் விதத்தை இடைப்பட்ட உண்ணாவிரதம் மேம்படுத்த உதவும். இந்த இன்சுலின் தான் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகள் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பொதுவாக, இடைவிடாத உண்ணாவிரதம் சூரியன் மறையும் போது சிறந்த முடிவுகளைக் காட்டுகிறது. மாலை 6 முதல் 8 மணி வரை, மற்றும் ஓய்வு நிலையில் இருக்கும்போது உடலை மீட்டெடுக்க அனுமதிக்கிறது. அறிவியலின் படி, இடைப்பட்ட உண்ணாவிரதம் பெரும்பாலும் உணவுப் போக்காகப் பின்பற்றப்படுகிறது, ஆனால் இந்த வகையான உணவு முறை இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், இடைவிடாத உண்ணாவிரதம் மாரடைப்பு மற்றும் இருதய நோய் அபாயத்தை ஏற்படுத்தும் அறிகுறிகளை குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த உணவு முறை இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.
இடைப்பட்ட உண்ணாவிரதத்தை முயற்சிக்க விரும்புபவராக நீங்கள் இருந்தால், 12 மணிநேர உண்ணாவிரதத்துடன் மெதுவாகத் தொடங்குங்கள். புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை சாபபிடுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். கர்ப்பமாக இருப்பவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் இதை முயற்சிக்க வேண்டாம்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு தேர்வுகளை அனுமதிக்கும் எந்தவொரு முறையும் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும் சாப்பிடுவது மற்றும் கலோரிகளைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இடைப்பட்ட உண்ணாவிரதம் மிகவும் நிலையானது மற்றும் நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகளவில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதால், இடைப்பட்ட உண்ணாவிரத உணவுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், உணவு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் மற்ற நன்மைகள்
உங்கள் எடை இழப்புக்கு உதவுதல், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைத்தல், மேம்பட்ட இதயம் மற்றும் மூளை ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது போன்றவை இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் பிற நன்மைகள். மேலும், இது உடல் செயல்திறன் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Click it and Unblock the Notifications