Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
உங்க வயித்துல பானையை கவுத்து வச்ச மாதிரி தொப்பை இருக்கா? அப்ப ஒரு கிளாஸ் நீரில் 'இத' கலந்து குடிங்க!
Fat Loss In Tamil: பெரும்பலான மக்களின் முக்கிய பிரச்சனையாக தொப்பை கொழுப்பு உள்ளது. இது உடல் தோற்றத்தை பாதிப்பதோடு, உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொப்பை கொழுப்பு மற்றும் அதிகரித்த எடை சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதில், ஒரு கிளாஸ் நீரில் சில இயற்கை பொருட்களை கலக்கும்போது, அவை ஆரோக்கியமான பானமாக மாறும். அவை, உங்கள் எடையை குறைப்பதோடு, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கலாம்.

நம் உடலுக்கு அவ்வப்போது சில டிஎல்சி தேவைப்படுகிறது, மேலும் உடலை சுத்தப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் டிடாக்ஸ் தண்ணீரை குடிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை.
வீக்கம், எடை அதிகரிப்பு, வெளிர் தோல் மற்றும் குறைந்த ஆற்றல் போன்ற அனைத்தும் உங்கள் உடலில் நச்சுகள் குவிந்திருப்பதற்கான அறிகுறிகள். இந்தச் சிக்கலுக்கு முதல் தீர்வு என்னெவென்றால், 'டிடாக்ஸ் வாட்டர்' குடிப்பதுதான். இது குடல் சுத்திகரிப்பு மற்றும் எடை இழப்புக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்கள் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்ய உதவுவது மட்டுமல்லாமல், மந்தமான தன்மையை நீக்குகிறது மற்றும் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக, தண்ணீரை மட்டுமே குடிப்பது உங்களுக்கு சிறந்த முடிவுகளைக் காட்டாது. அதனால்தான், நீங்கள் உங்கள் வழக்கத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.
ஒரு கிளாஸ் நீரில் சில சமையலறை பொருட்களை சேர்க்கும்போது, அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது. அந்த வகையில், இந்த டிடாக்ஸ் தண்ணீருக்கு தேவையான பொருட்கள் என்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த எளிய சமையலறை பொருட்கள் உங்கள் தண்ணீரில் அதிக ஊட்டச்சத்துக்களை சேர்க்கும். மேலும் எந்த நேரத்திலும் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
கருப்பு மிளகு
பல மருத்துவ குணங்கள் கொண்ட கருப்பு மிளகு மிகவும் பிரபலமான மசாலாப் பொருள். பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்படும் கருப்பு மிளகு, உங்கள் சமையலறையில் எப்போதும் இருக்கும். இந்த மூலப்பொருளை உட்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. இந்த வெப்ப விளைவு உறுப்புகளை தூக்கத்திலிருந்து எழுப்புகிறது.
அதே நேரத்தில் உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. இதனால், உங்கள் தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடை குறையும். கருப்பு மிளகில் வைட்டமின் ஏ, கே மற்றும் சி உள்ளது. மேலும், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்களின் களஞ்சியமாகவும் மிளகு உள்ளது. எனவே நீங்கள் தோல் நிறமியால் பாதிக்கப்பட்டிருந்தால், கருப்பு மிளகு கலந்த தண்ணீரை பருகுவது உங்களுக்கு நன்றாக வேலை செய்யும்.
மிளகு தண்ணீர் உங்கள் உடலில் இருந்து திரட்டப்பட்ட நச்சுகளை வெளியேற்றவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். அதுமட்டுமின்றி, அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.
தேன்
வறண்ட சருமம் உங்களுக்கு இருந்தால், இனி கவலை வேண்டாம். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும். தேன் சரியான அளவு இனிப்பு மற்றும் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், திசு மீளுருவாக்கம் மற்றும் உங்கள் உடலை எந்த நேரத்திலும் உற்சாகப்படுத்த உதவுகிறது.
அதனால்தான் வொர்க்அவுட்டிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது உங்களின் பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்க உதவுவதோடு, உங்களை ஹைட்ரேட்டிங் செய்யவும் ஒளிரும் சருமத்தை உங்களுக்கு வழங்கும் உதவும்.
இலவங்கப்பட்டை தூள்
வயிற்று உப்புசம் என்பது நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். அதுவும் பெண்களிடையே மாதவிடாய் காலங்களில் இது அதிகம் ஏற்படும். உங்கள் வயிற்று உப்புசத்தை போக்க இலவங்கப்பட்டை தூள் கலந்த வெதுவெதுப்பான டம்ளர் தண்ணீரைக் குடிக்கவும். மேலும், இந்த தண்ணீர் உங்கள் தொப்பையை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
ஓர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இலவங்கப்பட்டையை 16 வாரங்கள் வாய்வழியாக உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. கூடுதல் எடையையும் தொப்பையையும் வேகமாக குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை
மிகவும் பிரபலமாக அறியப்படும் எலுமிச்சையில், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உங்கள் சருமத்தை ஜொலிக்கவும் வைக்க உதவுகிறது.
எடை இழப்புக்கு எலுமிச்சை ஓர் சிறந்த பானமாகும். ஆம், எலுமிச்சையில் இருக்கும் என்சைம்கள் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக எரிக்கிறது. தினமும் ஒரு கிளாஸ் நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து அருந்துவது, உங்கள் தொப்பை கொழுப்பை விரைவில் குறைக்க உதவும்.
மேலும், எலுமிச்சை நீர் உங்கள் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் இருக்கும். எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும் என்பதால், உங்கள் உணவு சரியாக ஜீரணிக்கப்படும். மேலும் வெளியிடப்பட்ட ஆற்றல் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் விநியோகிக்கப்படுகிறது, இதனால் கொழுப்பு உடலில் சேராமல் கரைந்துவிடும்.
காய்கறி மற்றும் பழ க்யூப்ஸ்
உடல் எடையை குறைக்க இந்த டிடாக்ஸ் தண்ணீர் மிகவும் எளிதான மற்றும் சுவையான வழி. நீங்கள் எப்போதும் பிஸியாக இருந்தால், வெள்ளரி, கீரை, ஆப்பிள், பெர்ரி போன்ற காய்கறிகளை ஜூஸ் செய்து, ஐஸ் கியூப் தட்டுகளில் உறைய வைக்கவும். தினமும் காலையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் சில ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து குடிக்கவும்.
இது எடை இழப்புக்கான மந்திரம் போல் செயல்படுகிறது. அதே நேரத்தில், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும் சரும பிரச்சனைகளை சமாளிக்கவும் இது உதவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பொருட்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு உங்கள் டிடாக்ஸ் தண்ணீரை உருவாக்கி, உங்கள் எடை இழப்பு பயணத்தை இன்றே தொடங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

