Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
இளையராஜாவின் 82-வது பிறந்த நாளான இன்றுவரை அவரிடம் உள்ள சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். உலகில் இசையை ரசிக்கும் அனைவருமே நிச்சயம் இளையராஜாவை பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். தமிழ்நாட்டின் தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் ஜூன் 3, 1943 ஆம் ஆண்டு பிறந்தார். அவருக்கு ஞானதேசிகன் என பெயர் வைத்தார்கள்.
ஆனால் அவர் தந்தை அவரை பள்ளியில் சேர்க்கும் போது ஞானதேசிகன் என்னும் பெயரை மாற்றி ராஜய்யா என வைத்தார். பின் அவரை அனைவரும் ராசையா என அழைக்க ஆரம்பித்தார்கள். பின் இசைக்கருவிகளை இசைக்க கற்று கொள்ள தன்ராஜ் மாஸ்டரிடம் மாணவராக சேர்ந்த போது, ராசையா என்ற பெயரை "ராஜா" என மாற்றினார்.

அவரது முதல் படமான அன்னக்கிளியில் (1976) பணிபுரிந்தபோது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலம் "ராஜா" என்ற பெயருடன் "இளைய" என்ற முன்னொட்டைச் சேர்த்து, அவரை "இளையராஜா" என்று மறுபெயரிட்டார். அதற்கு காரணம் 1970-களில் ஏ. எம். ராஜா என்கிற பெயருடன் மற்றொரு பிரபலமான இசை இயக்குனர் இருந்தார்.
பாடல்களின் எண்ணிக்கை
இளையராஜா நான்கு தசாப்தங்களுக்கும்(49 ஆண்டுகளுக்கு) மேலாக 1,000க்கும் மேற்பட்ட படங்களில் ஏழு வெவ்வேறு மொழிகளில் 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இவர் 380 பாடல்களை பாடியுள்ளார். இவர் இசை அமைத்த பாடல்கள் மட்டும் அல்லாது இவரது மகன்கள் இசை அமைத்த படங்களிலும் பாடியுள்ளார். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இசை அமைத்த உன்னை சரணடைந்தேன் படத்திலும் ஒரு பாடல் பாடி இருக்கிறார் இளையராஜா.
இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். பல்வேறு படங்களில் அற்புதமாக இசையமைத்ததற்கு ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் பெற்றிருக்கிறார். 2010-ல் பத்ம பூஷண் மற்றும் 2018-ல் பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றார். மேலும் மறைந்த முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இவருக்கு இசைஞானி என்னும் பட்டத்தை வழங்கினார்.
இந்திய நடிகர்கள்
இவர் இந்தியாவின் டாப் நடிகர்களாக இருந்த அமிதாப்பச்சன், கமலஹாசன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, நாகார்ஜூனா, மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சகோதரர் சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இயக்குனர் மற்றும் நடிகரான சசிக்குமார் நடித்த தாரைதப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருதை பெற்றார். இது அவரது 1000-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். சூரி நடிப்பில் வெளி வந்த விடுதலை மற்றும் அப்புக்குட்டியின் நடிப்பில் வெளி வந்த அழகர்சாமியின் குதிரை படத்திற்கும் இசை அமைத்துள்ளார். 80 மற்றும் 90-களில் இவரின் இசைக்காகவே திரையரங்குகளில் ஓடிய படங்கள் ஏராளம்.
இயக்குனர்கள்
இவர் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் "நாயகன், தளபதி, கீதாஞ்சலி" படங்களுக்கும், பாரதிராஜா அவர்களின் "16 வயதினிலே, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்கே போகும் இரயில்" படங்களுக்கும், பாலுமகேந்திரா அவர்களின் "மூன்றாம் பிறை, வீடு" படங்களுக்கும், கே.பாலசந்தர் அவர்களின் சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி" படத்திற்கும் இசையமைத்துள்ளார். இதில் நாயகன் மற்றும் தளபதி பட பாடல்கள் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகிறது.
சொந்த ராகம்
இசையில் பல வகையான புதுமையை புகுத்தி இசைஞானி, பத்மபூஷன், மற்றும் பத்மவிபூஷன் பட்டம் மற்றும் விருதுகளை பெற்ற இளையராஜா "பஞ்சமுகி" எனும் தனது புதிய ராகத்தையும் உருவாக்கி உள்ளார்.
பிளாக் ஐட் பீஸ் மற்றும் இளையராஜா
அமெரிக்க இசைக் குழுவான பிளாக் ஐஸ் குரூப் 2003 ஆம் ஆண்டு 'தி எலிஃபங்க் தீம்' பாடலுக்காகப் பெயர் பெற்றத. ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்னவென்றால், அதற்கும் இளையராஜாவுக்கும் இடையே ஆன தொடர்பு தான். பிளாக் ஐட் பீஸ் குழு 'ஸ்ரீ ராகவேந்திரா' படத்தில் அவர் இசையமைத்த 'உனக்கும் எனக்கும்' என்ற பாடலை அடிப்படையாக கொண்டது.
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே வருடத்தில் 56 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற பெருமை இளையராஜாவுக்கு மட்டுமே உண்டு. அதுமட்டுமின்றி உலக புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கி உள்ளார். பொதுவாக சிம்பொனி இசையை உருவாக்க குறைந்தது ஆறு மாத காலங்கள் ஆகுமாம். ஆனால் நம் இசைஞானி சிம்பொனி இசையை வெறும் 13 நாட்களில் இசையமைத்து முடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கை
இன்று இளையராஜாவின் 82-வது பிறந்தநாள். ஆனால் அவரின் செயல்பாடுகளையும், சுறுசுறுப்பையும் பார்த்தால் நிச்சயம் அதனை நம்ப முடியாது. அதற்கு காரணம் அவரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான். இளையராஜாவிற்கு புகையிலை, மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இதை சொன்னது இளையராஜா கூட இல்லை. ஏ.ஆர்.ரகுமான் தனது ஒரு நேர்காணலில் இதை வெளிப்படுத்தினார். அந்த நேர்காணலில் ஒரு மனிதன் எப்படி தீய பழக்கங்கள் இல்லாமல் வாழ வேண்டுமென்ற ஒழுக்கத்தை இளையராஜாவிடமிருந்துதான் கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
இளையராஜாவின் சொத்து மதிப்பு
ரூ.150 கோடிக்கு மேல் இவரது சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு இசை அமைக்க சம்பளமாக இரண்டு முதல் மூன்று கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. இது மட்டுமின்றி அவருடைய சொந்த ஊரான பண்ணைபுரத்திலும், சென்னையிலும் பல சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
