Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்கள் படுக்கை விரிப்பை நீங்கள் அடிக்கடி மாற்றாவிட்டால் என்னென்ன ஆபத்துகள் உண்டாகும் தெரியுமா?
இந்த உலகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாத அளவில் கோடிக்கணக்கான பூச்சிகள் வாழ்கின்றன. இந்த கிருமிகள் மற்றும் பூச்சிகள் அழுக்கு நிறைந்த இடங்களில் அதிகமாக பல்கிப் பெருகி வாழக் கூடியது.
குறிப்பாக நாம் தினசரி வீட்டில் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள், வீட்டுச் சாமான்கள் இவற்றில் பல்கிப் பெருகி வாழும். இந்த கிருமிகள் மற்றும் பூச்சிகளால் நமக்கு சுவாச அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், கண்கள் அரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகளை அவர்கள் சந்திக்கின்றனர். தோலில் ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்ற பல பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர்.
சரி வாங்க உங்கள் படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாவிட்டால் நீங்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஈரமான வீட்டில் வசிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
ஒரு வீடு என்றால் அங்கு திறந்த காற்றோட்டமான வசதி மற்றும் சூரிய ஒளிக்கதிர்கள் போன்றவை உள்ளே வர வேண்டும். ஈரப்பதம் அதிகமான இடத்தில் நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. ஈரமான வீடுகள் எப்பொழுதும் அச்சுகள் மற்றும் நுண்ணுயிர் மையங்களின் ஆதாரமாக செயல்படுகிறது.
இந்த அச்சுகள் மற்றும் நுண்ணுயிர்கள் போன்றவை உங்கள் மெத்தை, போர்வை மற்றும் தலையணை போன்ற இடங்களில் செழித்து வளரும். இந்த ஈரப்பதம் மற்றும் பூஞ்சை நறுமணம் உங்கள் நுரையீரலை பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான ஈரமான வீட்டில் வசிப்பவர்கள் ஆஸ்துமா போன்ற நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, குழந்தைப் பருவ ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இந்த உட்புற ஈரப்பதம் மற்றும் பூஞ்சை வாசனை ஒரு காரணமாக அமைகிறது. இத்தகைய வீடுகளில் இருப்பவர்களுக்கு மனச்சோர்வு, ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உங்கள் படுக்கை துர்நாற்றம் உங்கள் சுவாசத்தை தொந்தரவு செய்கிறதா?
அச்சுகள் என்பது சிதைந்த உடல்களில் வாழும் ஒரு வகை பூஞ்சை யாகும். இந்த அச்சுகள் ஈரமான, மோசமான காற்றோட்டங்களில் குவிந்து கிடக்கின்றன. இந்த அச்சு வாசனையை உள்ளிழுப்பது உங்கள் சுவாசப் பாதையில் வீக்கத்தைக் உண்டாக்குகிறது. இது ஒரு வகை நாசி நெரிசலை உண்டாக்குகிறது. மேலும் இதனால் அடிக்கடி மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், இருமல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
சுவாசிப்பதில் சிக்கல் உண்டாதல்
உங்கள் படுக்கையால் ஏற்படும் ஒவ்வாமை நீண்ட கால நுரையீரல் செயல்பாட்டை குறைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மூச்சுத் திணறலின் அறிகுறிகளாக மார்பு வலி, இறுக்கம், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
படுக்கை விரிப்பை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் சுவாச பிரச்சினைகளை போக்க வழிகள்
நீங்கள் படுக்கையில் இருக்கும் போது உங்கள் படுக்கையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் முதுகெலும்பை ஆதரிக்கும் மெத்தையை பயன்படுத்துங்கள். உங்கள் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
படுக்கையில் ஏறுவதற்கு உங்கள் பாதங்களை நன்றாக சுத்தம் செய்து விட்டு ஏற வேண்டும். இரவும் பகலும் வெவ்வேறு படுக்கை விரிப்புகளை பயன்படுத்துங்கள்.
உங்களால் மெத்தையை துவைக்க முடியாவிட்டால் வேறு மெத்தை கவரை பயன்படுத்துங்கள். இது கிருமிகளிடம் இருந்து உங்களை காப்பாற்ற உதவுகிறது.
படுக்கையில் அமர்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது. உணவை ஒரு போதும் படுக்கைக்கு கொண்டு வரக் கூடாது. படுக்கையில் வைத்து உணவு உண்பது கிருமிகளை பெருகச் செய்யும்.
வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் சுவாசத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் உட்கொள்ளுதலையும் அதிகரிக்கிறது.
உறங்கும் போது நல்ல தோரணையில் உறங்குவது நல்லது. ஏனெனில் ஒழுங்கற்ற விதத்தில் படுத்து உறங்குவது உங்கள் சுவாசத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள், ஏனெனில் அதுவும் உங்கள் சுவாசத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் தவறாமல் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.
பிராணாயாமம் செய்யுங்கள். இந்த மூச்சுப் பயிற்சி உங்களுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
