For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கே தெரியாமல் ஆண்களின் உடலில் வரலாற்று பூர்வமாக நடந்த மாற்றங்கள் என்னென்ன தெரியுமா...?

|

விஞ்ஞான படி ஆணின் உடலுக்கும் பெண்ணின் உடலுக்கும் பலவித மாற்றங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உடலானது ஒவ்வொவரு கால கட்டத்திலும் பலவித மாற்றங்களை அடைந்துள்ளது. கி. மு முதல் கி. பி வரை எண்ணற்ற மாற்றங்கள் மனித உடலில் நடந்துள்ளது. ஆணின் உடலில் தனிவித மாற்றங்களும் பெண்ணின் உடலில் தனிவித மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது.

அன்று முதல் இன்று வரை- ஆண்களின் உடலில் வரலாற்று பூர்வமாக நடந்த மாற்றங்கள் என்னென்ன..?

PC:1970gemini

குறிப்பாக பேச போனால் ஆணின் உடலில் ஆச்சரியமூட்டும் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இந்த வகை மாற்றங்கள் ஆண்களுக்கே தெரிவதில்லை. ஆண்களின் உடலில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க பல்வேறு மாற்றங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். இத்தகைய மாற்றங்கள் அனைத்துமே விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கால கிரேக்கர்கள்

பழங்கால கிரேக்கர்கள்

பொதுவாக கிரேக்கர்கள் அவர்களது உடலை கட்டுமஸ்தாக வைத்து கொள்வர் என்றே வரலாறு கூறுகின்றது. மேலும், தசை வளர்ச்சி இவர்களுக்கு அதிகமாக இருந்ததாம். 21 ஆம் நூற்றாண்டில் இருக்க கூடிய ஏராளமான ஜிம் நுணுக்கங்களும் இங்கு இருந்தான் வந்ததாம்.

கி. மு 12,000-8000

கி. மு 12,000-8000

இந்த காலகட்டத்தில் தான் மனித இனம் வேட்டையாட தொடங்கியது. கிட்டத்தட்ட மிருங்கங்களுக்கு ஈடாக நாம் இருத்திருந்தோம்.

நமது உடல் அமைப்பும், ஆற்றலும் அதிகமாகவே இருந்தது. ஆனால், இந்த காலகட்டத்தில் உடல் பருமனும் ஆண்களுக்கு கொஞ்சம் கூடவே இருந்ததாம்.

கி. பி 800-1000

கி. பி 800-1000

இந்த காலகட்டத்தில் ஆண்களின் உடல் அதீத வளர்ச்சியை கண்டது. ஆண்கள் உயரமானவர்களாகவும், அதிக ஆரோக்கியத்துடனும் இருந்தார்களாம்.

தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆணின் உடலை பற்றிய ஆய்வின் போது இந்த தகவல் வெளி வந்துள்ளது. அத்துடன் ஆண்களின் எலும்புகளும் கி. மு-வில் இருந்ததை விட நீட்டமாக இருந்ததாம்.

டாவின்சியின் கோட்பாடு

டாவின்சியின் கோட்பாடு

மனித உடல் பற்றிய வளர்ச்சியை உலக புகழ்பெற்ற லியானார்டோ டாவின்சி வரையறுத்தார். குறிப்பாக ஆணின் தசை, வடிவம், தசை வளர்ச்சி, போன்ற பலவித நுணுக்கங்களை இவர் தந்தார்.

இது அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஆண்களின் உடல் அமைப்பையே குறிக்கிறது.

MOST READ:உடலுறவு வைத்து கொள்வது போன்ற கனவு வந்தால், அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

18 ஆம் நூற்றாண்டுகளில்

18 ஆம் நூற்றாண்டுகளில்

இந்த நூற்றாண்டில் ஆணின் உடலில் கொஞ்சம் மோசமான தாக்கமும் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.

இந்த காலகட்டத்தில் கொழுப்புகள் அதிகமாகவே இவர்களுக்கு இருந்தது. உயரமும் அதன் கூடவே உடல் பருமனும் அதிகரித்திருந்தது.

19 ஆம் நூற்றாண்டில்

19 ஆம் நூற்றாண்டில்

இதற்கு முன் இருந்த நூற்றாண்டை விட இந்த 19 ஆம் நூற்றாண்டில் சிறிது ஆண்களில் உடலில் கவர்ச்சி அதிகரித்ததாக ஆய்வுகள் சொல்கிறது.

ஆண்கள் பார்ப்பதற்கு கவர்ந்திழுக்கும் அழகுடனும், சீரான உடலுடனும் இருந்தார்களாம். மேலும், உடல் ரீதியாக தங்களுக்குள்ளே பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வந்தனர்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்

இந்த நூற்றாண்டின் முன்பகுதியில் சீரான உடலமைப்புடன் இருந்த ஆணின் உடல், இறுதி காலகட்டத்தில் கொஞ்சம் மாறிவிட்டது. ஆண்மை அதிகரித்தாலும் மெல்லிய உடல் அமைப்புடன் இவர்கள் இருந்தார்கள்.

மேலும், six-pack என்கிற கலாசாரமும் இந்த் காலகட்டத்தில் அதிகமாகவே இருந்தது.

20 ஆம் நூற்றாண்டில்

20 ஆம் நூற்றாண்டில்

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பலவித மாற்றங்கள் நடைபெற்றன. ஆண்களின் உடல் உழைப்பு சற்று குறைய தொடங்கியது.

காரணம் கணினியின் வருகைதான். பலரும் கணினி துறையில் வேலை வாய்ப்பை பெற தொடங்கியதால் உடல் உழைப்பு குறைந்து, மூளைக்கான வேலை அதிகரித்தது.

MOST READ: ஆண்களே! வாரத்திற்கு 1 முறையாவது இவற்றையெல்லாம் சாப்பிடணும்..! இல்லையெனில் என்ன நடக்கும்..?

21 ஆம் நூற்றாண்டில்

21 ஆம் நூற்றாண்டில்

பலவித மாற்றங்களை கண்ட மனித இனம், இன்று மோசமான உடல் அமைப்புடன் தான் இருக்கிறது. உடலுக்கான வேலை முற்றிலுமாக குறைந்து கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றில் நமது உழைப்பு செல்கிறது. வேட்டையாடிய மனிதன் இன்று சோம்பேறியாகவே மாறியுள்ளான்.

விளைவு..!

விளைவு..!

என்னதான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும், அவற்றை இன்னும் சரியான அளவில் பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும்.

மனிதன் அவனின் உடலை பற்றி அறிவியலையும் வரலாற்றையும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் சீரான உடல் அமைப்புடன் ஆரோக்கியமாக வாழ முடியும்.

PC:Mikael Häggström

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Men's Body Types Have Changed Throughout History

Here we talks about How mens's body types have changes throughout history.
Desktop Bottom Promotion