Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
காதுக்குள்ள ஏதாவது பூச்சி போய்ட்டா உடனே என்ன பண்ணணும்?... அட இவ்ளோ தானா?
காதுவலி வந்தா உடனே அழ ஆரம்பிச்சிட்டு ஏதாவது மருந்தை வாங்கி காதுக்குள்ள விடாதீங்க. நம்ம வீட் இருக்கிற சின்ன சின்ன பொருள்களை வெச்சே சரி பண்ணிடலாம்.
'யானையின் காதுக்குள் எறும்பு புகுந்ததுபோல' என்று ஒரு பழமொழி உண்டு. மிகப்பெரிய விலங்கான யானைக்குக்கூட காதில் பிரச்னை என்றால் தாங்க முடியாது.

நமக்கும் காதில் வலி வந்துவிட்டால் எவ்வளவு அவதிப்பட்டு விடுகிறோம். காதுக்குள் சத்தம் கேட்பது, கேட்கும் திறன் பாதிக்கப்படுவது என்று காதுவலியுடன் சில துணை உபாதைகளும் சேர்ந்தே வரும்.

காரணங்கள்
பொதுவாக, இன்பெக்ஷன் என்னும்தொற்று ஏற்படுவது, காதுக்குள் இருக்கும் மெழுகு போன்ற பசை அதிகரித்து செவிக்குழலை அடைத்துக்கொள்வது அல்லது உட்காதில் காயம் ஏற்படுவது போன்ற காரணங்களால் காதில் வலி ஏற்படுகிறது.
காதின் நடுப்பகுதி திரவம் உட்செவிக்குழல் என்னும் யூஸ்டசியன் குழலில் வழியும். செவிக்குழல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நோய் தொற்று ஏற்படுவதால் நடுக்காது பகுதியில் அடைப்பு உருவாகும். இந்த திரவம் சரியான முறையில் அகற்றப்படாவிட்டால் தொற்று தீவிரமாகி காதுக்குள் அழுத்தம் ஏற்படும் உணர்வு உருவாகும். பெரும்பாலான நேரங்களில் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
சைனஸில் தொற்று, திடீரென அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல், தொண்டையில் ஏற்படும் தொற்று, தாடையில் ஏற்படும் ஆர்த்ரைடிஸ் பாதிப்பு, ஈறு மற்றும் பற்களில் ஏற்படும் தொற்று, செவிப்பறை கிழிதல், காதுக்குள் அதிகப்படியான மெழுகு சேர்தல் போன்றவை காதில் வலியை ஏற்படுத்துகின்றன.

சேர்ந்து வரும் உபாதைகள்
தொண்டை வலி அல்லது எரிச்சல், இலேசான காய்ச்சல், காதுக்குள் ரீங்காரம் போன்ற ஒலி கேட்டல், கேட்கும் திறன் குறைதல், தலைவலி, கவனம் செலுத்த இயலாமை போன்றவையும் காதுவலியுடன் சேர்ந்து வரக்கூடும்.
காதுவலி அதிகமாக இருந்தால், மருத்துவரை பார்ப்பது நலம். வலி குறைவாக இருந்தால், கை வைத்தியம் செய்யலாம்.

சில வீட்டு வைத்திய முறைகள் ஒத்தடம்
பாதிக்கப்பட்ட பகுதியில் இரத்த ஓட்டத்தை தூண்டும் சுடுநீர் ஒத்தடம் பாரம்பரிய வைத்திய முறையாகும். சுடுநீரில் துண்டினை (டவல்) முக்கி, ஐந்து நிமிடங்கள் காதுகளில் ஒத்தடம் வைக்கலாம். இல்லையெனில் அதற்கென கிடைக்கும் ஹீட்டிங் பேடு அல்லது டிரையர் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும்போது, வெப்பத்தின் அளவை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமானால், காதில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடும்.

வெள்ளைப்பூண்டு
வெள்ளைப்பூண்டு பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்க்கக்கூடியது. காதுவலியை போக்கக்கூடிய இயல்பு வெள்ளைப்பூண்டுக்கு உண்டு. வெள்ளைப்பூண்டு பல் ஒன்றினை எடுத்து நசுக்கி, சாறு எடுத்து ஒன்று அல்லது இரண்டு துளி காதில் விடவும். வலி குணமாகும் வரைக்கும் தினமும் இரண்டு வேளை இந்த வைத்தியத்தை கைக்கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய், காதுவலியை குணமாக்காது. ஆனால், செவிக்குழலை அடைத்திருக்கும் மெழுகின் கடினத்தன்மையை இது குறைக்கும். அதன்மூலம் வலி குறையும். கொஞ்சம் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, மூன்று துளிகள் காதுக்குள் விடவும். மெழுகு இளகும்வரை அந்தக் காதினை ஒருபக்கமாக சரித்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம்
வெங்காயத்துக்கும் வெள்ளைப்பூண்டை போன்று மருத்துவ குணம் உண்டு. காதுக்குள் பிரச்னையை கொண்டு வரும் கிருமிகளை இது அழிக்கும். வெங்காயம் ஒன்றை நறுக்கி துணிக்குள் வைத்து நசுக்கி, காதினுள் விட்டு ஐந்து நிமிடங்கள் விட்டு வைக்கவும். தினமும் இருமுறை இப்படி செய்யவேண்டும்.

இஞ்சி
நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் இஞ்சிக்கும் உண்டு. இது உங்கள் செவிக்குழலை சுத்தமாக்கி விரைவில் குணம் கிடைக்கச் செய்யும். இஞ்சியை துண்டாக்கி, சாறு பிழியவும். காதினுள் மூன்று சொட்டு விட்டு, பஞ்சினை கொண்டு அடைத்துக்கொள்ளவும். வலி குறையும் வரைக்கும் தினமும் செய்து வரவும்.
குறைவான வலி இருந்தால் இந்த முறைகளை கைக்கொண்டு நிவிர்த்தி பெறுங்கள். வலி தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பதே நல்லது.

தண்ணீர்
காதுக்குள் எறும்பு அல்லது பூச்சிகள் நுழைந்துவிட்டால், காதுக்குள் குடைந்து நம்மை படாத பாடு படுத்திவிடும். அதற்காக வருத்தப்படாதீர்கள். உடனே கொஞ்சம் தண்ணீரை எடுத்து காதுக்குள் விடுங்கள். எறும்பு மற்றும் வேறு பூச்சிகள் ஏதாவது இருந்தால் உடனே வெளியே தண்ணீரில் மிதந்து வந்து விடும்.

தேங்காய் எண்ணெய்
தண்ணீரை எப்படி பயன்படுத்துகிறோமோ அதேபோல தான் தேங்காய் எண்ணெயும். தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி, ஆறவைத்து, கை பொறுக்கும் சூடு வந்தபின் வெதுவெதுப்பாக காதுக்குள் விட வேண்டும். இரவில் இப்படி செய்து விட்டுப் படுத்தால் போதும். காதுகளுக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும்.



Click it and Unblock the Notifications
