Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பா இத படிங்க... மிஸ் பண்ணிடாதீங்க...
கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அல்லது மருத்துவர்களால் கண்ணாடி அணிய வற்புறுத்தப்படுகிறவர்கள் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். எளிதில் இந்த பார்வை குறைபாட்டை சரிசெய
கண்ணாடி அணிவதென்பது பொதுவாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்ற இரண்டு பார்வை சம்பந்தப்பட்ட கோளாறுகளால் தான். அதுதவிர தலையில், மூளையில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளோ அதீத தலைவலியோ இருந்தால், அதனால் சில சமயங்களில் பார்வைக் குறைபாடுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது.

அப்படி எதற்காகவாவது கண்ணாடி அணிந்திருப்பவர்கள் அல்லது மருத்துவர்களால் கண்ணாடி அணிய வற்புறுத்தப்படுகிறவர்கள் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். எளிதில் இந்த பார்வை குறைபாட்டை சரிசெய்து விட முடியும்.

அற்புத மருந்து
பார்வைக் கோளாறை சரி செய்யும் அரு மருந்தாக முருங்கைப் பூ பயன்படுகிறது. அந்த முருங்கைப் பூவை வைத்து உங்களுடைய பார்வைக் கோளாறை சரி செய்யும்.
முருங்கைப் பூவை அப்படி எந்தெந்த பொருள்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.

பசும்பால்
முருங்கைப் பூவை நன்கு அலசி, சுத்தம் செய்து, அதை சுத்தமான பசும்பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி காலையும் மாலையுமாக தினமும் இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஈரப்பதம் அதிகரிக்கும். அதனால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.

தேன்
கண்களில் வெள்ளெழுத்துப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த முருங்கைப் பூ மிகப்பெரிய தீர்வாக அமையும். முருங்கைப் பூவை நன்கு சுத்தம் செய்து அதை வெயிலில் உலர்த்தி, காய வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த மலர்களைப் பொடி செய்து, அந்த பொடியை தேனில் கலந்து தினமும் இரண்டு முறை காலையும் இரவும் சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து பிரச்னை குறையும்.

முருங்கைப்பூ கஞ்சி
முருங்கைப் பூவினை நன்கு அலசி சுத்தம் செய்துகொண்டு, அதை சுத்தமான பசும்பாலில் சேர்த்து நன்கு கஞ்சிபோல காய்ச்ச வேண்டும். அதனுடன் சுவைக்காக சிறிது சீரகம், வெள்ளைப்பூண்டு, சிறிது மிளகும் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சுவை பிடித்தவர்கள் சில துளிகள் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

சந்திர தரிசனம்
இரவு உணவு முடித்துக் கொண்ட பின்பு, கைகளை நன்கு சுத்தமாகக் கழுவி விட்டு, சில துளிகள் சுத்தமான தண்ணீரை எடுத்து கண்களுக்கு விட்டுக் கொண்டு, கண்களை சில நொடிகள் மூடி வைத்திருங்கள். அதன்பின், கண்களை மெதுவாகத் திறந்து, சந்திர தரிசனம் செய்யுங்கள். அப்படி சந்திர தரிசனம் செய்வது நல்லது. கண்களில் உள்ள தூசியும் வெளியேறிவிடும்.

எண்ணெய் குளியல்
வாரம் இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்போது கண்களில் உள்ள நரம்புகள் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி அடையும். பார்வை தெளிவாகும்.

கீரைகள்
தினசரி உணவுடன் பண்ணைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, சிறுகீரை, கேரட் ஆகியவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால் சாதம்
அடிக்கடி இரவு உணவாக பால் சாதம் சாப்பிடுவது நல்லது. அதேபோல், இரவு உணவுக்குப் பின்னர் பால், பழம் சாப்பிடலாம்.

பேதி மருந்து
நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து, மாதம் ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய மருந்து எடுத்துக் கொண்டால், அன்மூலம் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தீரும்.



Click it and Unblock the Notifications
