Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
பின்மூலத்தை உடனடியாக சரிசெய்யும் மாங்கொட்டை... எப்படி யூஸ் பண்ணனும்?
பைல்ஸ் என்பது மூல நோய் என்று அறியப்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் ஹேமிராய்டு என்று கூறுகின்றனர். மூலத்தை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்களை இங்கே குறிப்பிட்டள்ளோம்.
பைல்ஸ் என்பது மூல நோய் என்று அறியப்படுகிறது. இதனை மருத்துவ மொழியில் ஹேமிராய்டு என்று கூறுகின்றனர். மலக்குடல் அல்லது ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே நரம்புகள் வீக்கம் அடைவதால் இந்த பிரச்சனை தோன்றுகிறது. மலம் கழிக்கும்போது கடினமாக உணர்வது, எரிச்சல், வலி போன்றவை இதன் அறிகுறிகள். மலம் கழிக்கும் போது, அந்த இடத்தில் அழுத்தம் அதிகரிப்பதால் மூல நோய் அதிகரிக்கிறது. சில நேரங்களில் இதன் அபாயம் அதிகரிக்கும்போது இரத்தப்போக்கும் உண்டாகலாம்.

இந்த மூல நோயை குணப்படுத்த சில எளிய முறைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இவை எளிய முறையில் வீட்டிலேயே பின்பற்றக் கூடியவை ஆகும். இந்தப் பதிவை முழுவதும் படித்து அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

அத்திப்பழம்
மூன்று அல்லது நான்கு அத்திப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் அதனை சிறிதளவு நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இந்த நீருடன் சேர்த்து ஊற வைத்த அத்திப்பழத்தையும் இரண்டு முறை உட்கொள்ளுங்கள். ஃபிரஷ்ஷான அத்திப் பழங்கள் அப்படியே சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைத் தரும்.

மாதுளை தோல்
மாதுளம் பழத்தின் தோலை எடுத்து, நீரில் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் . இந்த நீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும். இது வெறுமனே மூலத்தை மட்டுமல்லாது வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியையும் தீர்க்கும்.

முள்ளங்கி
தினமும் இரண்டு வேளை முள்ளங்கி சாறு பருகுவது என்பது மூல நோய்க்கான பொதுவான சிகிச்சை முறையாகும். 1/4 கப்பில் தொடங்கி மெதுவாக 1/2 கப் வரை பருகலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனைப் பருக வேண்டும்.

ஆட்டுப்பால்
மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க, மோரில் கல் உப்பு சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இரண்டு முறை பருகி வாருங்கள். மூல நோயால் ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க, அரை கப் ஆட்டுப் பாலுடன், ஒரு ஸ்பூன் தூள் செய்த கடுகை சேர்த்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து பருகவும். காலையில் வெறும் வயிற்றில் இதனைப பருகுவதால் இரத்தப்போக்கில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மாங்கொட்டை
காய்ந்த மாங்காய் கொட்டைகளை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்த பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வரவும். அதேபோல் ஒரு ஸ்பூன் இஞ்சி, மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு புதினா இல்லை மற்றும் தேன் சேர்த்து பருகவும். இதனை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.

நூல்கோல்
மூல நோய்க்கு நூல்கோல் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. கேரட், கீரை மற்றும் நூல்கோல் இலைகளைக் கொண்ட ஒரு சாற்றை தினமும் 50 மில்லி பருகுவதால் மூல நோய் கட்டுப்படுகிறது.

பாகற்காய் இலை சாறு
தினமும் காலையில் நீர் மோருடன் பாகற்காய் இலையின் சாற்றை சேர்த்து பருகுவதால் மூல நோய் குணமாகிறது. இதில் சிறிது மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் இதில் குணப்படுத்தும் தன்மை உள்ளது. ஆகவே தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.

வாழைப்பழம்
மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க ஒரு கனிந்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதில் ஒரு கப் பால் சேர்த்து பருகலாம். இதனை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பின்பற்றலாம்.

கருப்பு சீரகம்
ஷாஜீரா என்னும் கருப்பு சீரகத்தை தூளாக்கிக் கொள்ளவும். இந்த தூளை ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து தினமும் ஒரு முறை பருகவும். குறிப்பாக காலையில் இந்த நீரை பருகவும்.

வெங்காயம்
ஒரு முழு வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிடவும். மூலத்தை சரிசெய்ய வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.

நாவல் பழம்
நவாப்பழம் அல்லது நாவல் பழம் , மூல நோய்க்கு சிறந்த ஒரு தீர்வாகும். இந்த பழம் பொதுவாக கோடை காலத்தில் அதிகமாகக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி மூல நோயைப் போக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு நாவல் பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

எள்
ஒரு கையளவு கருப்பு எள்ளை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இரண்டு பங்கு நீர் ஆவியாகும் வரை கொதிக்க வைத்து பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், வெண்ணெய் சேர்த்து தினமும் ஒருமுறை சாப்பிடவும்.
மேலே கூறிய வழிமுறைகளைத் தெரிந்து கொண்டீர்களா? எது எப்படி இருந்தாலும், இவற்றை முயற்சிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பின்பு பயன்படுத்தவும்.



Click it and Unblock the Notifications