மரண பயத்தை கொடுக்கிறதா பன்றிக் காய்ச்சல்? இந்த சூப் குடிங்க... காய்ச்சல் உங்க பக்கமே வராது...

பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க செய்ய வேண்டியவை, பரவும் காரணங்கள், அறிகுறிகள் பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பன்றிக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. அதோடு பன்றிக் காய்ச்சலால் தினசரி உயிரிழப்புகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. அதனால் மாறிவரும் பருவ சூழலால் லேசான சளியோ காய்ச்சலோ ஏற்பட்டால் கூட அது பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்று மக்கள் பயப்படுகிறார்கள். அரசு என்ன தான் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தாலும் பன்றிக் காய்ச்சல் பற்றி போதிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாததால் தான் உயிரிழப்பும் பன்றிக் காய்ச்சல் குறித்த மரண பயமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

causes, sympotoms and preventing from swine flu

அந்த பயத்தைப் போக்கி, நம்மை நாமே நோய் பரவாமல் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி இங்கே விளக்கமாகக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது

பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது

பன்றிக் காய்ச்சல் எச்1என்1 (H1N1) என்ன வைரஸ் கிருமியால் பரவுகிறது. இந்த காய்ச்சல் 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் 60 வயதுக்கும் முற்பட்டவர்களுக்கும் மிக வேகமாகப் பரவுகிறது.

இந்த வைரஸ் உடலில் பரவ ஆரம்பித்ததும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். அதோடு உடல் சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்ற அசௌகரியங்கள் ஏற்படும்.

மூன்று நிலைகள்

மூன்று நிலைகள்

இந்த பன்றிக் காய்ச்சலுக்கு மூன்று நிலைகள் உண்டு. அவை ஒவ்வொன்றுக்குமான அறிகுறிகளும் வேறுபடுகின்றன. அவை என்ன என்று விளக்கமாகக் காண்போம்.

முதல் நிலை

முதல் நிலை

லேசான உடல் சூடு, உடல் சுார்வாக இருத்தல், தொண்டை வலி ஆகியவற்றோடு வயிற்றுப் போக்கும் வாந்தியும் உண்டாகும்.

இரண்டாம் நிலை

இரண்டாம் நிலை

கடுமையான காய்ச்சலும் கடுமையான தொண்டை வலியும் இருக்கும். உணவு எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

மூன்றாம் நிலை

மூன்றாம் நிலை

இந்த மூன்றாம் நிலையில், முதல் இரண்டு நிலைகளுடைய அறிகுறியும் இருக்கும். அதோடு மூச்சுத் திணறல் அதிகமாகும். அதனுடன் நெஞ்சு வலி, குறைந்த ரத்த அழுத்தம், தலை சுற்றுவது போல் இருப்பது, மயக்க நிலையில் இருத்தல், எந்த வேலையும் செய்ய முடியாத மந்த நிலை ஆகியவற்றோடு கை, கால்கள் நீலநிறமாக மாறும் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தீவிரமும் உயிரிழப்பும்

தீவிரமும் உயிரிழப்பும்

முதல் ஐந்து நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போன்று தான் இருக்கும். பின்னர் காய்ச்சல் சிறிது சிறிதாக கடுமையாக ஆரம்பிக்கும். தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உடல் வலியும் வாந்தியும் உண்டாகும். அதோடு வயிற்றுப் போக்கும் ஏற்பட்டால் நோய் தீவிரமடைந்து உயிரிழப்பு ஏற்படும்.

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

இந்த நோய் தாக்கியிருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டறிய முடியாது. இது பல்வேறுகட்ட சுாதனைகளின் பின்பு தான் தெரிய வரும். தொண்டையில் உள்ள சளியை எடுத்து சோதனை செய்தால் தான் இந்த வைரஸ் தாக்கியிருப்பதன் தீவிரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும்.

பன்றிக் காய்ச்சலுக்கான சுாதனைகளுக்கு மாதிரிகள் சேகரிக்க வேண்டும். அந்த சமயங்களில் ஏழு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது.

மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இரண்டு நாட்கள் வரை ஆகலாம். அந்த மாதிரி ஆய்வில் பாசிடிவ் என்று முடிவு வந்து விட்டால், பன்றிக் காய்ச்சல் வைரஸிற்கான சோதனையும் சிகிச்சையும் கொடுக்கப்படும்.

மருத்துவமளையிலோ அல்லது வீட்டில் மற்றவர்களிடம் இருநு்து தனிமைப்படுத்தப்பட்டோ சிகிச்சை அளிக்கலாம்.

மற்றவர்களுக்கு தொற்றாமல் இருக்க

மற்றவர்களுக்கு தொற்றாமல் இருக்க

நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் தொற்றிக் கொள்ளாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் சில வழிமுறைகளைக் குறிப்பிடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளை உடன் இருந்து பராமரிக்கின்றவர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களும் இந்த வைரஸ் தாக்குததலை தடுக்கும் சில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளவர்களை வைத்து பராமரிக்கும் பகுதிக்கு தேவையின்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சளி, இருமல் இருப்பவர்கள் கைக்குட்டை பயன்படுத்துங்கள். இருமல், தும்மல் வரும்போது வாயை மூடிக் கொள்ளுங்கள்.

சளி, இருமல் உள்ள குழந்தைகளாக இருந்தால் வீட்டிலேயே பராமரிக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பினால் அது மற்றவர்களுக்குப் பரவுவதோடு குழந்தையும் பலவீனமாகிவிடும்.

காயச்சல் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வராமல் இருக்க

வராமல் இருக்க

பன்றிக் காய்ச்சல் பரவி வரும் இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் வராமல் இருக்க, மத்திய சுகாதார நிறுவனம் சில வழிமுறைகளைக் குறிப்பிடுகிறது.

தினமும் ஒருமுறையாவது சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். நோயெதிர்ப்பு திறன் கொண்ட சோப்பை பயன்படுத்தி, அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.

குழாய் தண்ணீரில் பதினைந்து விநாடிகளாவது கைகளை அலச வேண்டும்.

வெளியில் சென்றுவிட்டு வந்ததும் கை, கால், முகம், கழுத்துப்பகுதி ஆகியவற்றை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.

இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாகத் தூங்க வேண்டும்.

தினமும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மது அருந்தக் கூடாது.

மிதமான உடற்யிற்சியின் மூலம் (வாக்கிங்) உடலில் ஆக்சிஜன் அதிகரிக்கச் செய்து கொள்ள வேண்டும்.

நன்கு சத்துள்ள வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.

நண்டு சூப்

நண்டு சூப்

நண்டில் மிக அதிக அளவில் மருத்துவ குணங்கள் உண்டு. அது உடலுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்திடும். இந்த நண்டு சூப்பை அடிக்கடி குடித்து வந்தால், சளி, உடல் வலியும் தீரும். வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம்.

நாட்டு நண்டை உரலில் போட்டு நன்கு இடித்து, அதில் 20 கிராம் பூண்டு, 20 கிராம் மிளகு, 20 கிராம் சீரகம் இடித்துப் போட்டு, தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்கு வேகவையுங்கள்.

இந்த சூப்பை வாரத்துக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், காய்ச்சல், சளி உங்களை எட்டிப் பார்க்காது.

கிராம்பும் ஏலக்காயும்

கிராம்பும் ஏலக்காயும்

20 கிராம்பு மற்றும் 20 ஏலக்காய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு பொடி, அதை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிய மூட்டை போல கட்டி வைத்துக் கொண்டு அதை அடிக்கடி மூக்கால் நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இது வைரஸ் நம்மைத் தாக்காமல் காப்பாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, November 14, 2018, 15:53 [IST]
Desktop Bottom Promotion