Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
மாதவிலக்கு நிக்காம உதிரப்போக்கு அதிகமா வந்துகிட்டே இருக்கா? அப்படி எத்தனை நாள் வரலாம்?
அதிகமான உதிரப்போக்கு மற்றும் அதனால் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்திய முறைகள் சில கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் பெண்கள் கடந்து வரும் ஒரு கடினமான காலம் மாதவிடாய் காலம். அந்த காலத்தில் சிலருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். இதனால் அவர்களின் துயரம் அதிகரிக்கும். இதனைப் போக்க சில இயற்கை தீர்வுகள் உள்ளன.

பொதுவாக அதிக உதிரப்போக்குடன், நீடித்த வலி, சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளும் சில பெண்களுக்கு ஏற்படலாம்.

மாதவிடாய்
அதிகரித்த உதிரப்போக்குடன் கூடிய மாதவிடாயை எளிய முறையில் போக்குவதற்கான வழி இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. எந்த ஒரு மருந்தின் உதவியும் இல்லாமல் ஹார்மோன்களை சமச்சீரான நிலையில் வைக்க இந்த வழி உங்களுக்கு பெரிதும் உதவும்.

வேறுபாடு
ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு விதமான மாதவிடாய் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் மாதவிடாய் உணர்வுகள் வெவ்வேறானது. சிலருக்கு மாதவிடாய் காலங்கள் வருந்தும் அளவிற்கு கடினமாக இருப்பதில்லை. சிலருக்கு உண்டாகும் சில அறிகுறிகள் அவர்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும். அவற்றுள் சில,

அறிகுறிகள்
1. வயிறு கனமாக இருப்பது போல் ஓர் உணர்வு
2. மனநிலையில் மாற்றம்
3. அழற்சி
4. வலி
5. உணர்ச்சி தூண்டல்
இந்த வகை அறிகுறிகள் சாதாரண நிகழ்வாகவும் இருக்கலாம். ஆனால் மன அழுத்தம், உணவில் மாற்றம் அல்லது புதிய உடல் கோளாறு போன்றவற்றால் உண்டாகும் திடீர் மாற்றங்களை கவனிப்பது நல்லது.

காரணிகள்
மேனோராகியா என்னும் மாதவிடாய் மிகைப்பு என்ற பாதிப்பால் பல பெண்கள் அவதிப்படுகின்றனர். பொதுவாக இது மரபணு அல்லது பாரம்பரிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த பாதிப்பு ஏற்பட பல்வேறு இதர காரணிகளும் உள்ளன. அவை,
1. எண்டோமேட்ரியோசிஸ் - இடமகல் கருப்பை அகப்படலம்
2. கருப்பை பைப்ராய்டு கட்டி
3. கருப்பை கட்டி
4. தைராய்டு தொந்தரவு
5. ஹார்மோன் மாற்றம்
6. மனஅழுத்தம்

அறியாமை
மாதவிடாய் மிகைப்பு குறித்த தகுந்த சான்றாதாரங்கள் இல்லாமல் இருப்பதால் பல பெண்களுக்கு இது குறித்த அறியாமை உள்ளது. ஆகவே பின்வரும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதில் இருப்பின் உங்களுக்கு இதன் பாதிப்பு இருக்கலாம்.
1. உங்கள் மாதவிடாய் காலம் 8-10 நாட்கள் நீடிக்கலாம்.
2. ஒரு நாளில் 8 சானிடரி நாப்கின் அல்லது டம்பூன் பயன்படுத்துகிறீர்களா? அல்லது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஒரு, முறை இதனை மாற்றுகிறீர்களா?
3. 21 நாட்களுக்கு முன்னதாக உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறதா?
மாதவிடாய் மிகைப்பு என்ற பாதிப்பிற்கான தீர்வுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செஸ்ட் பெர்ரி (Chaste Berry)
செஸ்ட் பெர்ரி (Vitex agnus-castus) என்பது ஒரு மருத்துவ செடியாகும். இது பெண்களுக்கு மிகுந்த பலனளிக்கக் கூடியதாக உள்ளது. மாதவிடாய் மிகைப்பு அல்லது அதிக உதிரப்போக்கு கொண்ட பெண்களுக்கு இது சிறந்த முறையில் பலனளிக்கிறது.
இந்த மருந்து ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் அளவை நிர்வகிக்க உதவுகிறது.
இதனை மாத்திரை வடிவில் பயன்படுத்துவதால் மாதவிடாய் கால வலி குறைகிறது. இது ஒரு சிறந்த தீர்வை தந்தாலும், இதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதால் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். இந்த மாத்திரை எடுத்துக் கொண்ட அடுத்த சில மாதங்களில் உங்களுக்கு சிறந்த மாற்றம் தென்படும்.

மேக்கா (Maca)
எந்த வயதில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் ஹார்மோன்களை கட்டுப்படுத்துவதில் மகா சிறந்த தீர்வைத் தருகிறது. குறிப்பாக பெண்கள் கருவுறுதலை ஊக்குவிக்க இதனை எடுத்துக் கொள்கின்றனர், மற்றும் மெனோபாஸ் காலகட்டத்திலும் இதனை பயன்படுத்துகின்றனர்.
சிலருக்கு இது ஒரு வகை பதட்டத்தை உண்டாக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே இதனை எடுத்துக் கொள்ளத் தொடங்கும்போது மிகக் குறைந்த அளவில் தொடங்கி மெது மெதுவாக இதனை அளவை அதிகரிக்கலாம்.

மஞ்சள் ஜென்டியன்: (Yellow Gentian)
மாதவிடாய் மிகைப்பை கட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், இரத்த சோகையைப் போக்கவும் இந்த மஞ்சள் ஜென்டியன் உதவுகிறது. ஒவ்வொரு மாதம் மாதவிடாய் உண்டாகும்போது இரும்பு சத்தை அதிக அளவில் இழக்கும் பெண்களுக்கு இது சிறந்த பலனைத் தருகிறது.
செரிமானம், கல்லீரல் செயல்பாடு, பசியைத் தூண்டுவது, சருமத்தில் உண்டாகும் கொப்பளங்களை போக்குவது போன்றவற்றிலும் இது உதவுகிறது. இதனை ஊசி மருந்தாகவும் வெளிப்புறம் உபயோகிக்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

யாரோ : (Yarrow)
அகிலியா மில்லிபோலியம் அல்லது யாரோ என்பது வியத்தகு தன்மைகள் கொண்ட ஒரு மருந்து செடியாகும். இது அத்தியாவசிய எண்ணெய், கனிமம் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் கொண்டுள்ளதால் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
யாரோ ஒரு ஹார்மோன் ஒழுங்குபடுத்தியாக செயல்படுகிறது. இதன் வலி குறைப்பு தன்மை காரணமாக , இது ஒரு இயற்கை வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. ஆகவே மாதவிடாய் வலியைக் குறைக்க இதனை பயன்படுத்தலாம்.
இது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள், மூல நோய் , முகப்பரு, வடுக்கள், மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இதனை ஊசி மருந்தாக பயன்படுத்தலாம் அல்லது க்ரீம் போல் மேல்புறம் தடவியும் பயன்படுத்தலாம். இதனை நீங்கள் வீட்டில் கூட வளர்க்க முடியும்.

கீரை ஸ்மூதி
எந்த ஒரு உடல் பாதிப்பிற்கும் ஏற்ற ஒரு உணவு கீரை ஸ்மூதி. பச்சைக் கீரையில் உள்ள போலிக் அமிலம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி இரத்தத்தின் தன்மையை தரமாக மாற்றுகிறது. இந்த கீரை ஸ்மூதியுடன் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
பசலை கீரை
பீட்ரூட் இலைகள்
முள்ளங்கி இலைகள்
வாட்டர் க்ரெஸ்
ஆகியவற்றைக் கொண்டு ஸ்மூதி தயாரித்து பருகுங்கள். இதன் விளைவுகள் உங்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும். உங்கள் உடல் நலத்தில் ஒரு முன்னேற்றத்தை உணர முடியும். மேலும் உங்கள் ஆற்றல் அதிகரித்திருப்பதை உங்களால் உணர முடியும். இதனால் உங்கள் எடையும் சீராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











