பாடி ஸ்ப்ரே பயன்படுத்துவதால் இவ்ளோ பெரிய ஆபத்தான நோய் தாக்கும் அபாயம் ! பெண்களே வேண்டாம்!!

Posted By:
Subscribe to Boldsky

சமீபமாக கண்டுபிடித்த ஆராய்ச்சியில் இது மிக முக்கியமானது . பெண்களுக்கு வரும் முக்கிய புற்று நோயான மார்பக புற்று நோய்க்கு அலுமினியம் நிறைந்த நச்சுப் பொருளே காரணம்.

இந்த அலுமினியம் எதில் அதிகம் இருக்கிறது தெரியுமா? பாடி ஸ்ப்ரே!! நம்முடைய மார்பக பகுதியை விட அக்குள் பகுதியில் ஏற்படும் பாதிப்பு மார்பகங்களை எளிதாக தாக்கிவிடுமாம்.

Under arm detox to prevent Breast cancer

அக்குளில் நீங்கள் பயன்பத்தும் நச்சு மிகுந்த பாடி ஸ்ப்ரே, சென்ட் போன்றவற்றில் அதிக அலுமினியம் இருப்பதால் அவை அக்குள் மூலமாக எளிதில் மார்பகங்களை அடைந்துவிடுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி தாக்குகிறது?

எப்படி தாக்குகிறது?

அலுமினியம் எளிதில் மார்பகத் திசுக்களுடன் வினைபுரிந்து சிஸ்டிக் திரவத்தை அதிகப்படுத்துகிறது. டியோடரன்டில் இருக்கும் ட்ரைக்ளோசன் என்ர மற்றொரு பொருளும் ஆபத்தானது. இரண்டும் சேர்ந்து புற்று நோய் செல்களை உண்டாக்குவதாக சமீப ஆய்வு ஒன்று விளக்குகிறது.

அக்குள் டிடாக்ஸ் :

அக்குள் டிடாக்ஸ் :

டியோடரன்ட் மற்றும் பாடி ஸ்ப்ரேக்களால் உருவாகும் அலுமினியன் நச்சுக்கள் மார்பகத்தில் தேங்கினால் மார்பக புற்று நோய் உண்டாகும். இந்த நச்சுக்களை நீங்கள் அகற்றலாம். டிடாக்ஸ் அக்குளில் செய்வதால் அலுமினிய நச்சுக்கள் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம்.

வியர்வை :

வியர்வை :

உங்களுக்கு வியர்ப்பதால் வேண்டாத கழிவுகள் வெளியேறுகின்றன. இயற்கை நமக்கு கொடுத்த அற்புத மெக்கானிசம். ஆனால் அதற்கு நாம் தடை ப்படுகின்றோம். வியர்வை வழியக் கூடாது என , வியர்வையை தடுக்கும் டியோடரென்ட், அருகில் வந்தால் வாசம் வருவதற்கென ஒரு பாடி ஸ்ப்ரே என நாள் முழுதும் நாம் வெளியேற்ற வேண்டிய கழிவுகளை உடலிலேயே தங்க வைக்கறோம், இத விளைவைத்தான் அனுபவிக்க வேண்டியதாகிறது.

வீட்டில் செய்யக் கூடிய டிடாக்ஸ் :

வீட்டில் செய்யக் கூடிய டிடாக்ஸ் :

நீங்கள் வீட்டிலேயே நச்சுக்களை வெளியேற்ற டிடாக்ஸ் செய்து கொள்ளலாம். இயற்கை வைத்தியங்களால் உங்கள் உடலில் தங்கும் அலுமினியம் போன்ற நச்சுக்கள் வெளியேறுகின்றன். இவை இயற்கையானது என்பதால் பக்க விளைவுகள் இல்லை. தினமும் இப்படி டி டாட்க்ஸ் செய்யும்போது மார்பகங்களில் தேங்க்யிர்க்கும் நச்சுக்கள் அழிகின்றன.அவ்வாறான அற்புத கைவைத்தியங்களைப் பார்க்கலாம்.

ரெசிபி -1

ரெசிபி -1

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 ஸ்பூன்

ரோஸ்மெரி எண்ணெய் - 3 துளி

பென்டோனைட் மண் - 1ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

பென்டோனைட் மண் (bentonite clay ) என்பது கடைகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். முதலில் வினிகரை இந்த மண்ணுடன் சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ரோஸ்மெரி எண்ணெய் சில துளி சேர்த்து கலக்கி க்ரீம் போல் செய்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த க்ரீமை உங்கள் அக்குள் பகுதியில் தடவ வேண்டும். நன்றாக காய்ந்த பின் நன்றாக கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் மார்பகங்களில் இருக்கும் நச்சுகள் வெளியேறிவிடும். இந்த கலவை மோசமான நச்சுக்களை உறிஞ்சக் கூடியது. குறிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதிலுள்ள எல்லா பொருட்களையும் கலப்படம் இல்லாமல் வாங்குவது உங்கள் கையில் உள்ளது.

ரெசிபி-2 :

ரெசிபி-2 :

தேவையானவை :

சமையல் சோடா- 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

தேங்காய் எண்ணெயில் சமையல் சோடாவை கலந்து பேஸ்ட் போல் செய்து உங்கள் அக்குள் பகுதியில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது வியர்வை நாற்றத்தையும் கூட தடுக்கும். நச்சுக்களுக்கு எதிராக செயல் புரியும். தினமும் இரவுகளில் செய்யலாம்.

மார்பக புற்று நோயை தடுக்கும் உணவுகள்!!

மார்பக புற்று நோயை தடுக்கும் உணவுகள்!!

கருப்பு திராட்சை, தக்காளி, கேரட், மாதுளம் பழம், குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புருக்கோலி, பூண்டு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். இவை புற்று நோய்க்கு எதிரான உணவுகள்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

மார்பகங்கள் வழக்கத்து மாறாக வலித்தாலோ, சிறு கட்டி போன்று தென்பட்டாலோ அவற்றை தொடர்ந்து கவனியுங்கள். அந்த கட்டி நாளுக்கு நால் பெரிதானால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

வலி :

வலி :

மார்பகங்கள் மாதவிடாய்க்கு சில நாட்கள் முன்பு வலிக்கும். இது இயற்கைதான். ஆனால் தொடர்ந்து வலி மற்றும் பாரமாக உணர்ந்தால் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் :

தாய்ப்பால் :

குழந்தைப் பெற்ற பெண்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிக அவசியம். குழந்தைக்கு பால் கொடுப்பதால் மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

சுயபரிசோதனை :

சுயபரிசோதனை :

படுக்கையில் படுத்தபடி ஒரு கையை தலைமாட்டில் வைத்துக் கொண்டு மறு கையால் மார்பங்களை வட்டமாக சுழன்று தடவிப் பார்க்க வேண்டும். அங்கே ஏதேனும் வலி இருந்தால் அல்லது கட்டி போல் தென்படுகிறதா என கண்காணியுங்கள். ஒவ்வொரு மாதமும் மாதவிடய் முடிந்து வது நாட்களிலிருந்து ஏதாவது ஒரு நாளில் பரிசோதிக்கலாம்.

யாரை அதிகம் தாக்கும் :

யாரை அதிகம் தாக்கும் :

தாய் அல்லது சகோதரிகளுக்கு புற்றுநோய் இருந்திருந்தால், தாய்மை அடையாதவர்கள் அல்லது 35 வயதுக்கு மேலே முதலாவதாக கர்ப்பம்ஆனவர்கள். சிறு வயதிலே மாதவிலக்கு நின்று போனவர்கள்.

மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போனவர்கள், தாய்ப்பால் தராதவர்களுக்கு, மற்றும் டியோடரன்ட், பாடி ஸ்ப்ரே பயன்படுத்துபவர்களுக்கு அதிகம் தாக்கும் வாய்ப்புகள் உள்ளது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Under arm detox to prevent Breast cancer

Under arm detox to prevent Breast cancer
Story first published: Monday, January 1, 2018, 14:00 [IST]