இந்த 3 விஷயங்களையும் தவறியும் உங்க மூட்டுகளுக்கு நீங்க செய்யவே கூடாது? அவை என்ன?

Posted By:
Subscribe to Boldsky

10 இல் 5 பேருக்கு மூட்டு வலி இருக்கிறது. அதுவும் 40 வயதிலேயே தொடங்கிவிட்டது. அதற்கு எல்லாரும் நினைக்கும் முக்கிய காரணம் மூட்டு வலி எலும்பு பலவீனமா இருந்தா வரும். கால்சியம் மாத்திரை எடுத்துக்கிட்டா சரியா போயிடும் ந்னு பலரும் நினைக்கிறாங்க .

ஆனா அப்படியில்லை.மூட்டு வலி வருவதற்கு இதுதான் காரணம் என்று சொல்லமுடியாது. சாதரண வாய்வுப் பிடிப்புகளிலிருந்து , புற்று நோய் வரை பல காரணங்கள் சொல்லலாம்.

அதற்காக பதட்டம் அடையாதீங்க. மூட்டு வலியை பற்றி கொஞ்சமாவது நீங்கள் தெரிந்து கொண்டிருந்தால் பின்னாளில் எதனைப் பற்றியு கவலைப்படாமல் இருக்கலாம். மூட்டு வலி ஏன் வருகிறது? எத்தனைவகையான மூட்டு வலி இருக்கிறது? எவை வாழ்க்கையை முடக்கி வைத்திடும்? எதெல்லாம் உங்கள் மூட்டுக்கு பாதகம் தரும்? என்ன மாதிரியான உணவுகள் மூட்டு வலியை தடுக்கும் என பலவிஷயங்களையும் இந்த கட்டுரையில் இப்போ பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட்டு வலி ஏன் வருகிறது?

மூட்டு வலி ஏன் வருகிறது?

கை, கால் மற்றும் விரல்களில் மூட்டுகளின் இணைப்புகளில் மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை, கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு தன்மையுடன் கூடிய ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு திசுக்கள் பாதிக்கப்பட்டு, வீக்கம் ஏற்படுகின்றன..

மூட்டு வலி வேறு, முடக்கு வாதம் வேறா?

மூட்டு வலி வேறு, முடக்கு வாதம் வேறா?

ஆமாம். மூட்டு வலி வேறு. முடக்கு வாதம் வேறு. மூட்டு வலிக்கு பிசகிய த்சைகள், இணைப்புத் திசு பாதிப்பு போன்றவை காரனமாக இருக்கலாம். மூட்டு வலியை சரிப்படுத்தலாம்.

முடக்கு வதம் என்பது நீண்ட காலம் இருக்கும் நோய். வலியை கட்டுப்படுத்தவே முடியும். மூட்டு வலி மற்று பிற்காலத்தில் ஆர்த்ரைடிஸ் வராமால் தடுக்க நீங்கள் இப்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . எப்படின்னு கொஞ்சம் பார்க்கலாம்.

ருமடாய்டு ஆர்த்ரைடிஸ்- அறிகுறிகள் :

ருமடாய்டு ஆர்த்ரைடிஸ்- அறிகுறிகள் :

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் வரலாம். இதில் ஆண்களை விட பெண்களே பாதிக்கப்படுகிறார்கள்.

இதன் அறிகுறிகளாக அதிகாலை நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு மூட்டுகளில் ஏற்படும் இறுக்கம் 6 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக காணப்படும். இப்படி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதயமும் பாதிக்கும் :

இதயமும் பாதிக்கும் :

மூட்டுகளை தவிர நுரையீரல், இருதயம், கண்கள் இவற்றிலும் பாதிப்பு உண்டாக கூடும். இவ்வாதத்தில் முக்கிய அறிகுறியாக மூட்டுகளில் சிறு, சிறு கட்டிகள் உண்டாகி மூட்டுகளின் அசைவற்ற தன்மைக்கு ஒரு காரணமாகிறது.

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் - அறிகுறிகள் :

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் - அறிகுறிகள் :

மூட்டு எலும்புகளின் உள்ளேயும், வெளியேயும் யூரிக் அமிலத்தின் படிமங்கள் படிவதின் காரணமாக முடக்குவாதம் ஏற்படுகிறது. தொடக்க நிலையில் இந்த வியாதி இரவு நேரங்களில் கால் பெருவிரல் வீக்கம் உண்டாகி சிவந்த பளப்பள தோற்றத்துடன் கடுமையான வலிகளுடன் ஏற்படுகிறது.

நாளடைவில் பிற மூட்டுக்களையும் பற்றி மூட்டுகள் செயல் இழந்த நிலையை ஏற்படுத்துகிறது.

சிறு நீரக பாதிப்புகள் :

சிறு நீரக பாதிப்புகள் :

இவ்வியாதி பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக காணப்படுகிறது. சிறு நீரகங்கள் செயல்பாட்டை கவனித்தபடியே இருக்க வேண்டும். உடலில் யூரிக் அமிலம் தங்காதவாறு பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

1. சூடான ஒத்தடங்கள்!!

சிலர் மூட்டுகளில் அடிப்பட்டால் உடனே சூடான ஒத்தடம் தருவார்கள். அது மிகவும் தவறு. பாதிக்கப்பட்டவுடன் 48- 72 மணி நேரத்திற்கு சூடான ஒத்தடத்தை தவிருங்கள். அது இன்னும் மோசமானா விளைவையே தரும்.

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

பின் என்ன செய்யலாம் :

குளிர்ச்சியான ஐஸ் ஒத்தடம் தரலாம். மூட்டுகளுக்கென்று இருக்கும் ப்ரத்யோக பேண்டேஜ்களை பயன்படுத்தலாம். காலையே தூக்கியே வைத்திருக்க வேண்டும்.

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

2. ஷூ அணிதல் :

உங்களுக்கு மூட்டு வலி இருந்தால் ஷூ போடுவதை தவிர்க்க வேண்டும். ஷூ போடுவதால் மூட்டு வலி இன்னும் சிக்கலாகிவிடும். இவற்றினால் உண்டாகும் நரம்புகளில் அழுத்தம் உங்கள் மூட்டுகளையும் பாதிப்பதால் மூட்டு வலி இன்னும் தீவிரமாகும்.

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

மூட்டுகளை பாதிக்கும் 3 விஷயங்கள் :

3. இஞ்சி சாப்பிடுதல் :

மூட்டு வலிக்காக நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டால் அந்த சமயத்தில் இஞ்சி உணவுகளை தவிர்க்கவும். ஏனென்றால் இஞ்சி மருந்துகளுடன் வினைபுரிந்து பாதிப்புகளை உண்டாகும். அதுபோல் மூட்டு வலியுடன் கூடுதலாக உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் இஞ்சி உணவுகள் தவிர்த்தல் நல்லது.

அதிகம் நடந்தா மூட்டு வலி வராது!!

அதிகம் நடந்தா மூட்டு வலி வராது!!

உங்களுக்கு தெரியுமா? மூட்டு வலியை வர விடாமல் தடுப்பதில் பெரும்பங்கு நடப்பதில் இருக்கிறது. கிராமத்தில் இருப்பவர்கள் யாராவது மூட்டு வலி, கால் வலி என சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

யாருக்கெல்லாம் நடை கம்மியா இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு வலி உண்டாகிறது. அதிகமாக நடக்கும்போது மூட்டுகளில் இருக்கும் சவ்வில் அதிகம் ஜெல் சுரக்கிறது. இது எலும்புகள் உராயாமல் தடுப்பதால், மூட்டு தேய்மானம் உண்டாவதில்லை.

காஃபி குடிக்கலாமா?

காஃபி குடிக்கலாமா?

யெஸ் ப்ளீஸ்... நீங்கள் தாரளாமாக குடிக்கலாம். மூட்டு வலி இருந்தால் காபி டீ எல்லாம் குடிக்காதீங்க என பலர் சொல்ல நீங்க கேட்டிருப்பீங்க. ஆனால் உண்மையில் தாரளமாக நீங்கள் காஃபி குடிக்கலாம். இதிலிருக்கும் பாலிஃபினால் உங்கள் மூட்டு பாதிப்புகளை விலக்கி நமைகளையே தருகிறது.

மூட்டு வலியை குறைக்கும் அற்புத ஜூஸ் :

மூட்டு வலியை குறைக்கும் அற்புத ஜூஸ் :

வேக வைத்த ஓட்ஸ்

1கப் நீர்

1 கப் அன்னாசி சாறு

1 கப் ஆரஞ்சு ஜூஸ்

2 ஸ்பூன் தேன்

1 ஸ்பூன் பட்டை பொடி

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

மேலே சொன்ன எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஸ்மூத்தியாக செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்மூத்தியை கொஞ்சம் கொஞ்சமாக 3 வேளைக்கு பிரித்து காலை, மதியம், மாலை என மூன்று வேளைக்கு குடிக்க வேண்டும்.

 நன்மைகள் :

நன்மைகள் :

இந்த ஜூஸை குடிப்பதால் மூட்டுகளில் இருந்த சிதைந்த திசுக்கம் மீண்டும் உருவாகும். மூட்டைச் சுற்றி பலம் பெறும். மூட்டுவலி நாளைடவில் குறையும்.

மூட்டு வலியை குறைக்க ஆப்பிள் சைடர் :

மூட்டு வலியை குறைக்க ஆப்பிள் சைடர் :

ஆப்பிள் சைடர் வினிகர் மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் மேஜிக் மருந்தாகும். அதனைக் கொண்டு எப்படி வலியை போக்கலாம் என பார்க்கலாம்.

தேவையானவை :

ஆப்பிள் சைடர் வினிகர் - 1 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடு செய்து அதில் ஆப்பிள் சைடரை கலந்து ஒரு பஞ்சினால் மூட்டுகளில் தேய்த்தால் வலி பறந்துவிடுவது உறுதி.

தினமும் 2 முறை அல்லது 3 செய்து பாருங்கள். குறிப்பாக இரவு தூங்குவதற்கு முன் இப்படி செய்து படுத்தால் நாளடைவில் எழுந்து நடக்கும்படி பலம் பெறுவீர்கள்.

குப்பை மேனி ஜூஸ் :

குப்பை மேனி ஜூஸ் :

மூட்டு வலிக்கு குப்பை மேனிச் செடி எப்போதுமே சிறந்த நிவாரணம் தருகிறது. குப்பை மேனிச் செடியுடன் எலுமிச்சை சாறு கலந்து செய்யப்படும் இந்த ஜூஸ் மூட்டு வலிக்கு அற்புத நன்மைகளை தரும்.

தேவையானவை :

குப்பை மேனி இலைகள்

நீர் - 1லிட்டர்

எலுமிச்சை சாறு - 1

தேன்- 8 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

நீரில் குப்பை மேனி இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். ஆறியதும் வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து அதனை குடிக்கவும். தினமும் இப்படி செய்தால் உங்களுக்கு வந்த மூட்டு வலி காணாமல் போய்விடும்.

வெங்காய ஜூஸ் :

வெங்காய ஜூஸ் :

ஆர்த்ரைடிஸ் வருவதற்கு காரணம் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்து, உப்பாக எலும்பு இணைப்புகளில் தேங்கி இறுக்கத்தை உண்டாக்குவால்தான். வெங்காயம் யூரிக் அமிலத்தை சிறு நீரகம் வழியாக வெளியேற்றும் தன்மை பெற்றது. இதனால் மூட்டுகளில் வலி இல்லாமல் நிம்மதி பெருமூச்சு விடலாம்.

தேவையானவை :

தேவையானவை :

வெங்காயம் - 1/2 துண்டு

நீர் - 2 கப்

தேன்- 1 ஸ்பூன்

செய்முறை :

செய்முறை :

நீரில் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பின்னர் ஆறிய பின் வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இதனை 2 வாரங்களுக்கு தொடர்ந்து குடித்தால் மூட்டுகள் புத்துணர்வு பெறும். மூட்டு வலி குறைந்துவிடுவதை காண்பீர்கள்.

.மூட்டு வலியை தடுக்கும் உணவுகள் :

.மூட்டு வலியை தடுக்கும் உணவுகள் :

கேரட் ஜூஸ் :

கேரட்டில் அதிகமாக விட்டமின் ஏ, சி, டி, கே, என பல அற்புத சத்துக்கள் உள்ளது. தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் உங்களுக்கு மூட்டு தொடர்பான எந்த நோயும் வராது.

 ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸுடன் பெர்ரி பழ வகைகளையும் கலந்து சாப்பிட்டால் உங்களுக்கு இரட்டிப்பு பலன் தரும். ஓட்ஸ் மூட்டுத் தேய்மானத்தை தடுக்கிறது. அதிலுருக்கும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் மூட்டிற்கு அற்புத போஷக்காகும்.

பிரத்யோக உடற்பயிற்சி :

பிரத்யோக உடற்பயிற்சி :

மூட்டு வலி குறைவதற்கு அமர்ந்தபடியே உடற்பயிற்சி செய்யலாம். இதற்காக நீங்கள் நேரமெல்லாம் ஒதுக்க தேவையில்லை. வெறும் 1 நிமிடம் செலவழித்தால் போதும். எப்படி என பார்க்கலாம்.

நாற்காலியில் அமர்ந்தபடி கால்களை மெதுவாக தூக்கி நேராக நீட்டி வைத்துக் கொள்ளுங்கள். உடலை நிமிர்த்தி வைத்தபடி கால்களை விறைப்பாக நீட்டியபடி இருக்க வேண்டும். 10 நொடிகளுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இப்படி 5 முறை செய்யுங்கள். தினமும் இப்படி செய்தால் மூட்டு வலி குறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you should not do for your knee pain

Things you should not do for your knee pain
Story first published: Thursday, November 23, 2017, 15:13 [IST]