சர்க்கரையை அதிகம் போட்டுக்கிறீங்களா? இந்த கொடிய நோய்க்கான அச்சாரம் போடறீங்க!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

நாவிற்கு இனிப்பான சர்க்கரை, வாழ்விற்கு கசப்பை உண்டாக்குகிறது. ஆம்! அதிகமான அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்வதால் உடலில் பல்வேறு நோய்களின் தாக்கம் ஏற்படுகிறது. சர்க்கரைக்கான தேடலில் புற்று நோய் மற்றும் வேறு சில அபாயகரமான நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. பதப்படுத்திய உணவுகள் மற்றும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் வழியாக அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களை நீங்களே நோயாளி ஆக்குகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

செயற்கை சர்க்கரை மற்றும் புற்று நோய் குறித்து பல்வேறு கட்ட ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை பற்றிய பதிவுதான் இந்த தொகுப்பு.

உடலை முழு செயலாற்றலுடன் வைக்க ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பது கார்போஹைட்ரெடில் உள்ள இயற்கை சர்க்கரையாகும். இது உடலுக்கு ஆற்றலை தருகிறது . அதுவே செயற்கை சர்க்கரையில் , ஆற்றல் அதிகமாக இருந்தாலும் மற்ற ஊட்டச்சத்துகள் இல்லாத காரணத்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையற்ற சக்தி :

தேவையற்ற சக்தி :

மூளை , இதயம் மற்றும் அணுக்களுக்கு இந்த தேவையற்ற சர்க்கரையை எங்கு வைப்பதென்று தெரியவில்லை. ஆகவே இவை கொழுப்பு அணுக்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. உடலுக்கு தேவைப்படாத ஆற்றல்கள் பொதுவாக கொழுப்பு அணுக்களில் தான் சேமித்து வைக்கப்படுகின்றன. இவை தான் ஒரு கட்டத்தில் உடல் பெருமை உண்டாக்குகின்றன.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

பொதுவாக நாம் பழங்கள் சாப்பிடுகிறோம். அவற்றிலும் சர்க்கரை உள்ளது. ஆனால் அவற்றில் இருக்கும் சர்க்கரையும், உருளை கிழங்கு சிப்ஸ், கேண்டி மற்றும் வேறு பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரையும் வெவ்வேறாகும்.

இத்தகைய சர்க்கரை, நாவிற்கு சுவையை அதிகப்படுத்தி, உணவு பொருளுக்கு அதிக கவர்ச்சியை கொடுத்து, அதிக நாட்கள் உணவு பொருள் கெடாமல், அதன் ஆயுளை அதிகப்படுத்துவதால் தயாரிப்பாளர்கள் இதனை பயன்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை.

இதயத்தை பாதிக்கிறது:

இதயத்தை பாதிக்கிறது:

அமெரிக்கர்களின் வாழ் நாளை குடிப்பதில் இதய நோய்க்கு அதிக பங்கு உள்ளது. "ஜாமா இன்டெர்னல் மெடிசின்" என்ற நிறுவனம் அதிகமான சர்க்கரை உட்கொள்ளலுக்கும் இதய நோயால் ஏற்படும் இறப்பு விகிதத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. இதய நோய் என்பது மோசமான உணவு பழக்கத்தால் உண்டாகும் ஒரு நாட்பட்ட நோய் என்றும் விவரிக்கிறது.

நீரிழிவு பாதிப்பு :

நீரிழிவு பாதிப்பு :

டைப் 2 நீரிழிவு நோய்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் எளிய முறையில் திருத்தம் செய்யக் கூடிய ஒரு முறை, உணவு பழக்கம். குறிப்பாக சர்க்கரை உணவை கைவிடுதல். அதிகமான சர்க்கரையை உட்கொள்வதால், இன்சுலின் தடுப்பு பாதிக்கப்படுகிறது, இதனால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களுக்கு வினை புரியும் அணுக்களின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

சரியான உணவு, சரியான பயிற்சி, தொடர்ச்சியான பயிற்சி, சரியான பானங்களை தேர்ந்தெடுத்து பருகுதல் போன்றவை பல்வேறு நோய்களை தடுக்கின்றன. இவை எல்லாவற்றையும்விட புற்று நோயின் அபாயத்தை குறைப்பது என்பது ஒரு சவாலான செயல் ஆகும்.

புற்று நோய்:

புற்று நோய்:

புற்று நோயை தடுப்பது என்பது மிகவும் சிரமம். புற்று நோய் ஏற்பட்டவுடன் அதனை களைவது அதைவிட சிரமம். ஆனால் நவீன ஆரய்ச்சிகள், புற்று நோயை முற்றிலும் போக்கி, மற்ற பாகங்களுக்கு பரவாமல் செய்ய பெரிதும் உதவுகின்றன .

புற்று நோய் அபாயம்:

புற்று நோய் அபாயம்:

ஜங்க் உணவுகள் எடுத்துக் கொள்ளும் பழக்கம் புற்று நோயின் அபாயத்தை உண்டாக்குகிறது. புற்று நோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை நேஷனல் கேன்சர் இன்ஸ்டியூட் தெரிவிக்கிறது. மோசமான உணவு பழக்கத்தை தவிர, நாட்பட்ட கட்டிகள், மது பழக்கம், ஹார்மோன்கள், வயது போன்றவையும் புற்று நோய்க்கான தாக்கத்தை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது.

நோய்க்கு ஆதாரம் :

நோய்க்கு ஆதாரம் :

அந்த ஆய்வுகளின்படி, அதிகமான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் கட்டிகளின் வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன என்று கூறப்படுகிறது. பொதுவாக, ஒரு ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் , புற்று நோய் அணுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஆகவே இத்தகைய உணவு புற்று நோயின் ஆதாரமாக விளங்குகிறது.

ஆகவே புற்று நோயை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட உணவு முறை, நோயாளிகளிடம் புற்றுநோயின் தாக்கத்தை மேலும் அதிகரிக்காமல் இருக்க பெரிதும் உதவுகின்றன.

சர்க்கரை உணவு:

சர்க்கரை உணவு:

அதிகமான சர்க்கரை உணவை தேடி தேடி சாப்பிடுவதை தவிர்ப்பது, புற்று நோய் மற்றும் பல வித நோய்கள் உடலை தாக்கும் அபாயத்தை குறைக்க உதவும். சமச்சீர் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவை தொடர்ந்து எடுத்துக் கொள்வது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் உண்டாகும் தாக்கம் குறையும்.

சர்க்கரை தேவையை குறைக்க :

சர்க்கரை தேவையை குறைக்க :

குறித்த நேரத்தில் உணவு அருந்தாமல் இருப்பது, செயற்கை சுவையூட்டிகளை சேர்த்துக் கொள்வது, ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, போன்றவை ஆரோக்கியமற்ற உணவு முறையாகும். நட்ஸ், பழங்கள் , பால் பொருட்கள் போன்றவற்றை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வதால் சர்க்கரைக்கான தேடல் குறைந்து ஆரோக்கிய உணவு பழக்கம் ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

So much of adding sugar increases risk of cancer- study reveals

So much of adding sugar increases risk of cancer- study reveals
Story first published: Thursday, November 2, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter