For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்மார்ட் போன் உபயோகிப்பதினால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்ன?

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

போன் என்பது நமது கையின் ஆறாம் விரல் ஆகிவிட்டது. ஒரு நாள் தவறுதலாக போனை மறந்து வீட்டில் வைத்து விட்டு வந்தால் அன்றைய நாள் முழுவதும் நாம் எதோ ஒன்றை இழந்தது போல் இருக்கிறோம். முன்பெல்லாம் எவ்வளவோ தொலைபேசி எண்களை தனது ஞாபகத்தில் வைத்திருந்தவர்கள் கூட இன்று தன் வீட்டில் இருப்பவரின் எண்ணை கூட போனில் இருந்து தான் பார்த்து கூறுகிறார்கள்.

உங்க ஸ்மார்ட் போன்ல ஏன் இந்த விஷயமெல்லாம் பண்ணக் கூடாதுன்னு உங்களுக்கு தெரியுமா?

அந்த அளவுக்கு நாம் மொபைல் போனை சார்ந்து தான் வாழ்கிறோம். 24*7 என்பது மனிதருக்கும் மொபைல் போனுக்கும் ஆன பந்தத்தின் குறியீடாக மாறி இருக்கிறது .

ஸ்மார்ட் போனின் வரவிற்குப் பிறகு மனிதனின் வாழ்வியலில் ஒரு பெரிய மாற்றம் வந்தது உண்மை . ஒரு பொருள் பல வேளை என்பதுபோல் ஒரு போன் அலாரமாக,ரேடியோவாக,டீவியாக,கணினியாக,விளை யாட்டு களமாக,இப்படி அதன் பயன்களை அடுக்கி கொன்டே போகலாம்.

How smart phone is affecting your health

மல்டி டாஸ்கிங் என்று சொல்லக்கூடிய ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறன் ஸ்மார்ட் போனின் பயன்பாட்டிற்கு பிறகு மனிதனுக்கு அதிகரித்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட் போன் மோகம் காலப்போக்கில் ஸ்மார்ட் போனுக்கு மனிதன் அடிமை என்ற நிலையில் தான் இருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் மாணவிகள் ஒரு நாளைக்கு சராசரியாக 10 மணி நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இது அவர்கள் தங்கள் தோழிகளுடன் செலவழிக்கும் நேரத்தை விட அதிகமானது.

அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆய்வு , 5இல் 3 பேர் தங்களின் ஸ்மார்ட் போன் இல்லாமல் வெளியில் 60 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை என்பதை சுட்டி காட்டுகிறது.

82% அமெரிக்கர்கள் ஸ்மார்ட் போன் என்பது ஒரு தீவிர போதை தருகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

நோமோபோபியா என்பது மொபைல்போன் தன் கையில் இல்லாத போது ஏற்படுகின்ற ஒரு அச்சம் தழுவிய நிலை. இந்த மன நோய் சமீபத்தில் பரவலாக பலரிடம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து மீண்டு வருவதற்கான மறுவாழ்வு மையங்களும் தொடங்கப் படுகின்றன.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு பிறகு முதுகு வலி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்று பிரிட்டிஷ் சிரோபிராக்டிக் அசோசியேஷன் குறிப்பிடுகின்றது.

ஸ்மார்ட்போனை தொடர்ந்து உபயோகிப்பதால், குறுகிய கால பாதிப்புகளை தாண்டி நீணட காலபாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. Occipital neuralgia என்ற நரம்பியல் நிலை உருவாகிறது. இந்நிலையில் உச்சந்தலையில் இருந்து முதுகெலும்புக்கு செல்லும் நரம்புகள் சுருக்க படுகின்றன அல்லது வீக்கமடைகின்றன. இதனால் தீராத தலைவலி உண்டாகிறது.

இதனை குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது. ஸ்டீராய்டு மற்றும் ஊசி, யோகா, மசாஜ் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை முற்றிலும் முடக்குவது போன்றவை அந்த நேரத்து வலியை கட்டு படுத்தும்.

நீண்ட நேரம் ஸ்மார்ட் போன் திரையினை பார்த்து கொண்டே இருப்பது ஒரு வித பதற்றத்தை மனதில் ஏற்படுத்துகிறது. போனில் நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது தொடர்ந்து அவர்களின் பதில்களுக்காக காத்துகொன்டே இருப்பதால் இந்த சூழல் உருவாகிறது. எதிர்பார்த்தபடி பதில் வராத போது ஒரு அழுத்தம் உண்டாகிறது.

மொபைல் போனில் விளையாடும் ஒவ்வொரு நிமிடமும் நமது ஆரோக்கியமான நேரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அந்த நேரத்தில் உடற் பயிற்சி, ஆரோக்கியமான சமையல், யோகா, வெளி உலகை காண்பது போன்ற சுவையான விஷயங்களை நாம் புறக்கணிக்கிறோம் .

ஒரு ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் செல் போன் பயன்பாடு, ஓய்வு நடவடிக்கைகள் மற்றும் உடல் செயல்பாடு பற்றி 300 கல்லூரி மாணவர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினர்.

அவரக்ளின் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை பரிசோதித்தனர். 14 மணி நேரம் தொடர்ந்து தொலைபேசியில் நேரத்தை செலவழித்தவர்களின் உடல் நிலை குறைந்த பட்சம் 1.5 மணி நேரம் செலவழிபவர்களின் உடல் நலத்தை விட பின் தங்கி இருந்தது.

ரிசோனா பல்கலைக் கழகத்திலிருந்து செய்யும் ஆராய்ச்சியில் , சராசரியாக ஒரு கழிப்பறை இருக்கையில் காணப்படும் பாக்டீரியாக்களின் அளவைவிட 10 மடங்கு அதிகமாக ஒரு ஸ்மார்ட் போனில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது!

சாதாரணமாக அலைபேசியில் காதை வைத்து பேசுவதால் காதுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஹெட்போன் உபயோகித்து இசை அல்லது பாடல்கள் கேட்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

காதின் உட்புறம் சிறு சிறு முடிகள் வளர்ந்திருக்கும். இவை இரசாயன சிக்னல்களை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. அதிக அளவு சத்தத்தால் இந்த முடிகள் சேதமடையலாம்.

85 டசிபீல்களை விட அதிகமான சத்தங்கள் வெளிப்படுத்தப்படுவது, கேட்கும் திறனில் இழப்பு ஏற்படுத்தும் என்று பொது சுகாதார பிரச்சாரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஸ்மார்ட் போனின் அதிகபட்ச அளவு 105 டிசிபில்கள் ஆகும் குறைந்தபட்சம் 94 டிசிபில்கள் ஆகும்.

ஸ்மார்ட் போன்கள் நம்மை இந்த சமூகத்துடன் இணைப்பதை காட்டிலும் அதிகமாக தனிமை படுத்துகிறது. நம் ஆழ் மனதிலிருந்து கூட நாம் தனிமைப்படுத்த படுகிறோம். ஸ்மார்ட் போனை அதிகம் சார்த்திருப்பவர்கள் அவர்கள் துணையுடனான தருணங்களை கூட அர்த்தமற்றதாக உணர்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதன் பயன்பாடு நம்மை ஒரு சுயநலவாதியாக மாற்றுகிறது. சமுதாயத்திற்கோ அல்லது நம்மை சார்த்தவருக்கோ நன்மை பயக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகி மனித தன்மை அற்றவனாக மனிதன் மாறுவதாக தெரிகிறது இந்த ஸ்மார்ட் போனின் பயன்பாட்டால்...

English summary

How smart phone is affecting your health

Excess smartphone use may cause for many health problems
Story first published: Tuesday, August 8, 2017, 15:28 [IST]
Desktop Bottom Promotion