Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வருவது எதனால்?
28 நாட்கள் சுழற்சியில் ஒரு கருமுட்டை தயாரானதும், கருவுறுதலுக்கு எதிர் நோக்கி காத்திருக்கும். விந்தணுக்கள் வராததால், அவை ஏமாற்றமடைந்து, இறுகியிருந்த தசைகளை தளர்க்கும்போது உதிரப்போக்கு ஏற்படும். இதைத்தான் மாதவிடாய் என்று கூறுவோம்.

அந்த சமயத்தில் தசைகளில் உண்டான தளர்வுறும் இறுக்கம் காரணமாக பெண்களுக்கு அடிவயிற்றில் வலியை ஏற்படுத்துகிறது. அதனால் கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி மற்றும் உதிரப்போக்கின் காரணமாக உடல் அசதி என பிரச்சனைகள் உருவாகும்.
இது தவிர்த்து சிலருக்கு வாந்தி, தலைவலி, வயிற்றுப் போக்கும்கூட ஏற்படும். இந்த பிரச்சனைகள் முதல் மூன்று நாட்களிலிருந்து 5 நாட்கள் வரை இருக்கும்.
இந்த வலி சாதரணமானதுதான். எல்லா பெண்களுக்கும் மாதவிலக்கு சமயத்தில் ஏற்படக் கூடியது. அந்த காலத்தில் அதனால்தான் மாதவிலக்கு சமயத்தில் ஓய்வு கொடுத்து தனியாக அமர வைத்தார்கள். இதனால் உடலுக்கு போதிய ஓய்வும், சக்தியும் கிடைக்கும்.
ஆனால் இப்போது யாரும் அதை கண்டுகொள்ளாமல், எப்போதும் போல வேலைகளைத் தொடர்வதால், அதிக வலி, பலஹீனம் ஏற்படுகின்றன.
டிஸ்மெனோரியா :
வழக்கத்திற்கும் மாறாக வலி அதிகமாகவும், தசைபிடிப்பு, உடல் அசதி, அதிக உதிரப்போக்கு இருந்தால், அதனை டிஸ்மெனோரியா என்று அழைப்பார்கள்.
ஏழில் ஒருவருக்கு இந்த பாதிப்புகள் இருக்கும்.இந்த சமயத்தில் மிதமான வேலைகள், போதுமான தூக்கம், நல்ல உணவு ஆகியய்வற்றை கடைபிடித்தால், இந்த வலியை சரிசெய்யலாம்.
என்டோமெட்ரியோஸிஸ் :
முறையற்ற மாதவிலக்கு மற்றும் கடும் வயிற்று வலி சிலருக்கு இருக்கும். மேலும் 7 நாட்கள் அல்லது அதற்கும் மேல் உதிரப்போக்கு இருக்கும். அதற்கு என்டோமெட்ரியோஸிஸ் காரணமாக இருக்கலாம். இதற்கு தகுந்த மருத்துவரை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்வது முக்கியம் .
ஏன் வலி வருகிறது :
இப்படி மாத விலக்கு சமயத்தில் வயிற்று வலி வருவதற்கு, பாதிப்பை எதிர்க்கும் காரணிகளுக்கும் மற்றும் பாதிப்பை உருவாக்கக் கூடிய காரணிகளுக்கும் இடையே சம நிலையற்ற தன்மை இருப்பதுதான் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மாதிரியான சமயத்தில் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் கொண்ட உணவுகளை உண்ணும்போது, சம நிலை ஏற்படும்.
மற்ற சப்ளிமென்ட்ரிகளையும் எடுத்துக் கொள்ளும்போது, பாதிப்பிலிருந்து விடுபடலாம். விட்டமின் ஈ, மெக்னீசியம், ஜிங்க்,விட்டமின் பி1 ஆகியவை உடலுக்குள் உண்டாகும் வலியை போக்கும் சத்துக்கள் என்று ஆய்வுகள் நிருபிக்கின்றன.
எனவே வலி அதிகமாக இருக்கும்போது, இந்த சப்ளிமென்ட்ரிகளை எடுத்துக் கொள்வது நல்லது. உடலுக்கு பலமும் கிடைக்கும்.
அதேபோல், அக்குப் பஞ்சர், சூடான ஒத்தடம், மசாஜ் ஆகியவை தசைகளுக்குள் ஏற்படும் இருக்கத்தை தளர்த்தி, புத்துணர்ச்சி தர வைக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



