சொத்தையான கால் நகங்கள் உள்ளதா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க!

Written By: Hemalatha
Subscribe to Boldsky

கை விரல்கள் போலல்லாமல் கால் நகங்கள் நிறைய பேருக்கு அழுக்கடைந்து, உடைந்தும் சொத்தையாகவும் இருக்கும்.

இது சரியாக பராமரிப்பு இல்லாததால் ஏற்படுகின்றன. இறந்த செல்கள் நகங்களுக்கு அடியில் தங்கி நகங்களில் ரத்த ஓட்டம் குறைந்து சொத்தையாகின்றன.

Natural remedies for decayed toenail

நகங்கள் பழுதடைந்தால், வலி ஏற்படும். சாக்ஸ் ஷூ அல்லது சாதரண செருப்பே போடமுடியாதபடி இருக்கும். நகங்கள் பழுப்பாக அல்லது மஞ்சளாக காணப்படும்.

ஆகவே இதனை சிறிது நேரம் எடுத்துக் கொண்டு தினமும் நகங்களை பராமரித்தால், நகங்கள் உயிர் பெறும்.

இங்கே உங்கள் நகங்களை சரி செய்ய சில தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை பயன்ப்படுத்திப் பாருங்கள்.

தேயிலை மர எண்ணெய் :

இரவு தூங்குவதற்கு முன் தேயிலை மர எண்ணெயில் பஞ்சை நனைத்து நகங்களை சுத்தம் செய்யுங்கள். தினமும் செய்து வர, இறந்த செல்கள் அகன்று ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நகங்கள் புதுபிக்கப்படும்.

Natural remedies for decayed toenail

மஞ்சள் :

தினமும் குளிப்பதற்கு முன், மஞ்சள் பொடியை ஆலிவ் எண்ணெயில் கலந்து, நகங்களில் தடவி வட்ட வடிவமாக மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம். இது நல்ல பலனைத் தரும். நகங்களில் ஏற்படும் தொற்றினை இது எதிர்க்கும்.

Natural remedies for decayed toenail

லாவெண்டர் எண்ணெய் :

லாவெண்டர் எண்ணையில் சிறிது தேயிலை மர எண்ணெயை கலந்து, அதனுள் சில துளி ஆலிவ் எண்ணெயை சேர்த்து, நன்றாக கலக்குங்கள். இந்த எண்ணெயைக் கொண்டு நகத்தில் தடவி மசாஜ் செய்தால், நாளடைவில் சொத்தை மறைந்து நல்ல நகங்கள் உருவாகும்.

Natural remedies for decayed toenail

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறினை எடுத்து, ஒரு பஞ்சினால் எடுத்து, அதனை நகங்களில் பூசி வந்தால், பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குகள் நீங்கும்.

வேப்பிலை :

வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை. ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து, ஒரு கப் அளவுள்ள நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். நன்றாக கொதி வந்ததும், வடிகட்டி, அந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அந்த நீரில் சிறிது பூண்டு எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெயை ஊற்றி ,அனத கலவையை நகங்களில் தடவி வந்தால், சொத்தை மறைந்து, நகங்கள் பலம் பெறும்.

Natural remedies for decayed toenail

சாமந்தி :

சாமந்தி பூக்கள் மருத்துவ குணங்கள் பெற்றுள்ளவை. சருமத்தில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்க்கும். சாமந்தி பூக்களை தனித் தனி இதழ்களாக பிரித்து, சுடு நீரில் போட்டு மூடி வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து அந்த நீரில் கால்களை அமிழ்த்துங்கள். இவை நகங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

Natural remedies for decayed toenail

அதிமதுரம் :

Natural remedies for decayed toenail

அதி மதுரத்தை நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் நீர் வெதுவெதுப்பானவுடன் அந்த நீரில் பஞ்சை நனைத்து, மெதுவாய் நகங்கள் மீது தடவவும். இது நகத்தில் தங்கும் கிருமிகளை அழித்து, நகங்களை பாதுகாக்கும்.

English summary

Natural remedies for decayed toenail

Natural remedies for decayed toenail