உங்க வீட்டிலிருக்கும் இவையெல்லாம் ஆபத்தான கிருமிகளின் கூடாரம் என தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

கூடுமானவரை நீங்கள் வீட்டின் தரை, அலமாரிகள், சமையல் திட்டு, சிங்க் பிறகு தூசு படும் இடமெல்லாம் மாங்கு மாங்கென சுத்தம் செய்வீர்கள்.

ஆனால் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத சில இடங்கள்தான் கிருமிகள் அதிகம் தங்கும் இடம் என்பது தெரியுமா? தெரிந்து கொள்ள இதை தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பிரஷ் ஸ்டேண்ட் :

பிரஷ் ஸ்டேண்ட் :

நீங்கள் பிரஷ் ஸ்டேண்டை எங்கே வைத்திருக்கிறீர்கள். பெரும்பாலோனோர் அவர்கள் கழிவறையில்தான் வைத்திருப்பார்கள்.

கழிவறையின் மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்திருப்பீர்கள். ஆனால் பிரஷ் ஸ்டேண்டை சுத்தம் பண்ணியிருக்கிறீர்களா?

நம்புங்கள் உங்கள் கழிவறையை விட உங்கள் பிரஷ் ஸ்டேண்டில்தான் மோசமான கிருமிகளான ஸ்டெஃபைலோகோக்கஸ், மோல்ட், ஈஸ்ட் போன்ற கிருமிகள் வசிக்கின்றன்.

அங்கே இருக்கும் பிரஷைதான் நாம் சாதரணமாக கழுவி, அப்படியே பல்லை சுத்தம் செய்கிறோம்.

கழிப்பறை மிதியடி :

கழிப்பறை மிதியடி :

கழிப்பறையிலிர்ந்து ஈரக்கால்களை துடைக்க கால்மிதியை பயன்படுத்துவோம். ஆனால் அந்த கால் மிதியின் ஈரப்பசையில் பலகிருமிகள் நான்கு மடங்காக பெருகும் என்பது தெரியுமா?

காரணம் அவை உலராமல் ஈரத்துடனே இருப்பதால் , மோசமான கிருமிகள் அதிகம் உருவாகும் இடங்களில் அதுவும் ஒன்று.

தவறாமல் இவைகளை துவைத்து வெயிலில் காய வைத்து உபயோகிக்கவும்.

குளிர்சாதனப் பெட்டியின் கைப்பிடி :

குளிர்சாதனப் பெட்டியின் கைப்பிடி :

குளிர்சாதனப் பெட்டியை நன்றாக வாரம் ஒருமுறை துடைத்து அதன் கதவையும் பளிச்சென்று சுத்தம் செய்து வைத்திருப்போம்.

ஆனால் அதன் கைப்பிடியை சுத்தம் செய்திருக்கிறீர்களா? ஏனென்றால் கைகளை வைத்து திறக்கப்படும் அந்த இடங்களில் அதிகம் கிருமிகள் தங்குகிறது. எனவே மறக்காமல் கைப்பிடியையும் சுத்தம் செய்து விடுங்கள்.

மொபைல் :

மொபைல் :

மொபைலில் மிக அதிகமாக நுண் கிருமிகள் வசிக்கும் என்பது தெரியுமா?

அழுக்கான கைகளா, வியர்வை பிசுபிசுப்பில், சர்ட் பாக்கெட்டில் , பேன்ட்டில் ஏன் கழிப்பறைக்கும் சென்று என எல்லா இடங்களில் அதிகம் பயணிக்கும் பொருள் மொபைலாகத்தான் இருக்கும்.

அதுவும் வயிற்றிற்கு தண்ணி காட்டும் சால்மோனெல்லா போன்ற ஆபத்தான கிருமிகள் இப்போது நீங்கள் கையில் வைத்திருக்கும் மொபைலில்தான் உள்ளது.

எனவே தினமும் அதனை சுத்தமான நீர்( distilled water ) கொண்டு துடையுங்கள்.

குழந்தைகள் பொம்மைகள் :

குழந்தைகள் பொம்மைகள் :

குழந்தைகளின் பொம்மைகளில் அழுக்கிற்கு பஞ்சம் இருக்காது.

வீட்டின் தரையிலிருந்து வெளியிடங்கள் வரை எல்லா இடங்களிலும் போட்டு, புரட்டி எடுத்து விளையாடி இருக்கும் பொம்மைகளை என்றாவது துவைத்து இருக்கிறீர்கள?

கண்டிப்பாக வாரம் ஒருமுறை துவைக்க வேண்டும். அதனை வாயில் வைப்பதால் வயிற்றுப் போக்கு, வாந்தி ஆகியவை குழந்தைகளுக்கு உண்டாகக் கூடும்.

வாசல் மிதியடி :

வாசல் மிதியடி :

வெளியில் கண்ட இடங்களில் செருப்பில் நடந்து, வீட்டுக்கு வந்ததும் முதலில் கால் மற்றும் செருப்பை தேய்ப்பது வாசலில் இருக்கும் மிதியடியில்தான்.

உங்களுக்கு முன்னர் உங்கள் விருந்தினரை வரவேற்பது கிருமிகள்தான். ஆகவே அவைகள் நோயை பரப்பும் கிருமிகள் அமர்ந்திருக்கும் இடம்தான் உங்கள் வாசல் மிதியடி. அதனை கட்டாயம் சுத்தப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dirtiest things in your house

Did you know these places are dirtiest things in your house
Subscribe Newsletter