நிமோனியா வந்தால் எப்படி அறிவது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நிமோனியா யாருக்கும் வரலாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொடுதல் மூலம் பரவாது. ஆனால் அந்த கிருமிகள் ஒருவரின் மூலம் மற்றொருவருக்கு பரவலாம்.

மற்ற நுரையிரல் பிரச்சனைகளைப் போலவே இருமல், மூச்சிரைப்பு, சுவாச பாதிப்பு, காய்ச்சல் என்ற அறிகுறிகளுடன்தான் தென்படும். ஆனால் இது மிகவும் தீவிரமானது. கண்டுகொள்ளாமல் விட்டாம் ஆபத்தில் முடியும். இதனைப் பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா? இல்லையெனில் விரிவாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிமோனியா என்றால் என்ன?

நிமோனியா என்றால் என்ன?

சிலவகை பேக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை ஆகியவை நுரையீரலை குறி வைத்து தாக்குகின்றன. இதனால் நுரையீரலில் இருக்கும் சிறு சிறு காற்றுப் பைகளில் திரவம் மற்றும் சீழ் அடைத்துக் கொள்கின்றன. எனவே சரியான அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்ல முடியாமல் இருக்கும்போது மூச்சுத் திணறல் உண்டாகிறது.

 எப்படி கண்டறியலாம்?

எப்படி கண்டறியலாம்?

நிமோனியாவை கண்டறிய மருத்துவர்கள் நுரையீரல் எக்ஸ் ரே பரிசோதனை மற்றும், உடல் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்வார்கள். இந்த மூன்று வகை நிமோனியாவில் பூஞ்சை நிமோனியா அரிதாக தாக்கக் கூடியவை. இந்த வகை நிமோனியா எய்ட்ஸ் நோயாளிகளை தாக்கும் நோயாகும்.

 யாரையெல்லாம் பாதிக்கும்?

யாரையெல்லாம் பாதிக்கும்?

நோய் எதிர்ப்பு மிகவும் குறைந்துள்ளவர்களுக்கு தாக்கும் அபாயம் உண்டு. மிக குறைந்த வயதில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தாக்கக் கூடியவை.

புகைப்பிடிப்பவரகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஆஸ்துமா, மற்றும் இதய நோய் இருப்பவரகளுக்கு நிமோனியா வர வாய்ப்புகள் உண்டு.

எந்த வகையில் இது ஆபத்து?

எந்த வகையில் இது ஆபத்து?

நோய் எதிர்ப்பு திறன் மிகக் குறைவாக இருப்பவர்களுக்கு கிருமிகலை எதிர்த்து போராட பலம் கிடையாது. இதனால் அவற்றின் தாக்கம் அதிகரித்து, உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடும். தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து இறப்பு கூட ஏற்படலாம்.

நிமோனியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 15 சதவீதம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

இதற்கான சிகிச்சை :

இதற்கான சிகிச்சை :

உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைக்க அதிக திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது பாக்டீரியா நிமோயாவிர்கு ஆன்டிபயடிக்ஸ் தரப்படும். வைரஸ் தொற்றாக இருந்தால் ஆன்டி வைரல் மருந்துகள் தரப்படும். இதுவே பூஞ்சையாக இருந்தாலா ஆன்டி பயாடிக்ஸ் அல்லது ஆன்டி ஃபங்கல் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். மிகத் தீவிரமான நிலையில் மருத்துவ மனையிலேயே குணமாகும் வரை இருக்க வேண்டியதிருக்கு

குணமடைய நாட்கள் :

குணமடைய நாட்கள் :

அவரவரின் எதிர்ப்பு சக்தி பொறுத்தே அமையும். தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது ஒரே வாரத்திலேயே குணமடையலாம். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் விரைவில் குணம்டையும். இல்லையென்றால் குணமடைய 15 நாட்களுக்கும் மேலாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Thing should know about Pneumonia

5 Things You Should Know About Pneumonia
Story first published: Wednesday, September 14, 2016, 13:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter