Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Fake Cooking Oil: கலப்படம் செய்யப்பட்ட போலி சமையல் எண்ணெயை எப்படி கண்டறிவது? இதோ சில டிப்ஸ்...
Fake Cooking Oil In Tamil: சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் சுமார் 18,000 லிட்டருக்கும் அதிகமான போலி அல்லது கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் பறிமுதல் செய்ததாக அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதைப் பார்க்கும் போது பலரது மனதிலும் பல கேள்விகள் நிச்சயம் எழும்.
அதில் நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் நல்ல எண்ணெய் தானா, போலி சமையல் எண்ணெய் என்றால் என்ன, கலப்படம் செய்யப்பட்ட போலி சமையல் எண்ணெயை எப்படி கண்டறிவது போன்றவை அடங்கும். இந்த ஒவ்வொரு கேள்விக்கான பதில்களையும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இப்படி தெரிந்து கொள்வது நமது ஆரோக்கியம் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக மிக முக்கியமாக கருதப்படுகிறது.

கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களைக் கொண்டு சமையல் செய்யும் போது, அதில் கலந்துள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உடல் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதோடு இந்த மாதிரியான எண்ணெய்களில் எவ்வித ஊட்டச்சத்தும் இருக்காது. இதன் விளைவாக உடலில் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இப்போது போலி அல்லது கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களை எப்படி கண்டறிவது என்பதைக் காண்போம்.
போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
* எப்போதும் எண்ணெயை வாங்கும் போதும், அதன் பின்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து விவரங்களைக் காண வேண்டும்.
* அதில் ஆர்கானிக், ஜிஎம்ஓ அல்லாத அல்லது குறிப்பிட்ட சான்றிதழ்கள் போன்றவற்றை குறிப்பிடப்பட்டுள்ள என்பதைக் காண வேண்டும்.
* முக்கியமாக எண்ணெயை வாங்கும் போது ஒவ்வொருவரும் அதன் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும்.
* குறிப்பாக நீங்கள் வாங்கும் எண்ணெயின் விலை மார்கெட் விலையை விட குறைவாக இருந்தால், அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
* மேலும் கலப்படம் இல்லாத எண்ணெய்கள் குறிப்பிட்ட நல்ல இயற்கை மணத்தைக் கொண்டிருக்கும். அதுவே கலப்படமிக்க எண்ணெய் என்றால் அதில் வாசனை எதுவும் இருக்காது.
* கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் சற்று மங்கலாக இருக்கும். சுத்தமான எண்ணெய்களில் தெளிவு இருக்கும். உதாரணமாக, ஆலிவ் எண்ணெய் தங்கம் கலந்த பச்சை நிறத்திலும், சூரியகாந்தி எண்ணெய் வெளிரிய மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
* சுத்தமான எண்ணெய்கள் ஒரு இயற்கை சுவையைக் கொண்டிருக்கும். அதுவே கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் என்றால், கசப்பு சுவை அல்லது மனதிற்கு ஒப்பாத அளவில் வித்தியாசமான சுவை மாற்றம் தெரியும். இப்படி தெரிந்தால், அது நிச்சயம் எண்ணெயில் கலப்படம் உள்ளது என்று அர்த்தம்.
வீட்டில் இருந்தே எண்ணெயின் தரத்தை சோதிப்பது எப்படி?
* ஒரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். நீங்கள் வைத்த எண்ணெய் சுத்தமானது என்றால் அது நிச்சயம் கெட்டியாகும். அதுவே கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் என்றால், அது அப்படியே திரவ நிலையில் இருக்கும்.
* நீங்கள் ஆலிவ் ஆயிலை அதிகம் பயன்படுத்துபவராயின், அந்த எண்ணெயை ப்ரீசரில் வைக்கும் போது, 30 நிமிடங்களில் கெட்டியாகிவிட்டால், ஆலிவ் எண்ணெய் தூய்மையான எண்ணெய் என்று அர்த்தம்.
* அடுத்த சோதனை, ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, அதில் சிறிது எண்ணெய் விட்டு காய வைக்க வேண்டும். எண்ணெய் தூய்மையாக இருந்தால், அது வட்ட வடிவில் அப்படியே பரவும். அதுவே போலி எண்ணெய் என்றால் அது வழிந்து ஓடப் பார்க்கும்.
* சமையல் எண்ணெயில் உள்ள கலப்படத்தை அறிய, சமையல் எண்ணெயை ஒரு சோதனை குழாயில் சிறிது ஊற்றி அதில், 4 மிலி டிஸ்டில்டு நீரை ஊற்றி, ஒருசில நிமிடம் நன்கு குலுக்க வேண்டும். பின் மற்றொரு சோதனை குழாயில் இந்த கலவையில் 2 மிலி-ஐ எடுத்து, அதில் 2 மிலி கான்சன்ட்ரேட்டட் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்க வேண்டும். கலப்படம் செய்யப்படாத எண்ணெயாக இருந்தால், நிறத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதுவே கலப்படம் செய்யப்பட்டிருந்தால், எண்ணெயின் நிறம் சிவப்பு நிறத்தில் மாறும்.
* நீங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் சுத்தமானதா என்பதை அறிய, ஒரு கிண்ணத்தில் சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து, அதை ஃப்ரீசரில் 60 முதல் 90 நிமிடங்கள் வைத்து எடுக்க வேண்டும். நல்ல தூய்மையான எண்ணெயாக இருந்தால், அது கெட்டியாகும். அதுவே கலப்படம் செய்யப்பட்டிருந்தால், மேற்பகுதி மட்டும் கெட்டியாகி, அடிப்பகுதி திரவ நிலையில் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
